*சென்னை: நீட் தேர்வு
வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது என்று நீதியரசர் ஏ.கே.ராஜன்
கூறியுள்ளார். 86,342 பேர் நீட்
தேர்வு தொடர்பாக இதுவரை மனு அளித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.*
*டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம். மேலும் தொழில்துறையினருக்கு அவசர கால் கடனுதவியாக ரூ.1.5 லட்சம் கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.*
*சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழுவின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் 8 பேர் அடங்கிய குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு குறித்து இதுவரை 88,000 மனுக்கள் மூலம் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
*டெல்லி: ட்வீட்டர் வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக காட்டப்பட்டிருப்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக் தனி நாடாகவும், லே சீனாவில் இருப்பதாகவும் ட்வீட்டர் வரைபடத்தில் உள்ளது.*
*சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக ஐகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.*
*சென்னை: ஆண்டாள் பற்றி கட்டுரை வெளியிட்டதற்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை கவிஞர் வைரமுத்து வாபஸ் பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் பதிவான வழக்கிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் கவிஞர் வைரமுத்து வழக்கு தொடர்ந்து இருந்தார்.*
.
*கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.*
*சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைதானார். சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.*
*சென்னை: புனேவில் இருந்து மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. சென்னை வந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன.*
*திருமலை: ஆந்திராவில் புதிதாக 2,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.*
*குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 4,714 பேர்*
*சிகிச்சை பலனின்றி 31 பேர் உயிரிழப்பு*
*சிவகங்கை: செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த நீதிமன்ற உத்தரவின் பேரில் பூர்வாங்க பணிகள் நடக்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார். 100% இடங்களை திமுக, தோழமை கட்சிகள் கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.*
*தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், நேரில் திடீர் ஆய்வு நடத்திக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்*
*சட்டப்பேரவையில் பாரத் மாதா கி ஜெய், ஜெய்ஹிந்த் என்று பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிடுவார்கள்: எல்.முருகன்*
*விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்*
*பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கலாம் என பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.*
*புதுச்சேரியில் 82 நாட்களுக்குப் பிறகு 200க்குக் கீழ் கரோனா ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.3 ஆக உயர்ந்துள்ளது.*
*ஓசூரில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம்: எல்லையில் தொடரும் கட்டாய இ-பாஸ்*
*புலிக்குப் பிறந்தது பூனையாகாது; கருணாநிதியின் வழியில் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வார்: அமைச்சர் பொன்முடி பேட்டி*
*மதுரை விமான நிலைய விரிவாக்கம்; நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்தில் முடிக்கப்படும்: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி*
*பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டதால் அவர் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.*
*தமிழகத்திற்கு வேண்டிய தடுப்பூசிகளை தர மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்: உதயநிதி வேண்டுகோள்*
*நீலகிரி*
*தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகப் பழங்குடியினப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் உதகையில் திறக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது*
*தடுப்பூசி தட்டுப்பாடு வருத்தமாக உள்ளது: நீதிபதிகள் முன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு*
*கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்*
*✍🏼சுற்றுலாவிற்கான விசா வழங்கும் நடைமுறைகள் துவங்கியதும் முதல் 5 லட்சம் விசாக்கள் இலவசமாக வழங்கப்படும்*
*2022 மார்ச் 31 வரை விண்ணப்பித்தவர்களுக்கு அல்லது 5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை இவற்றில் எது முன்னதாக உள்ளதோ, அதை பொறுத்து வழங்கப்படும்*.
*திருமதி நிர்மலா சீதாராமன்.*
*✍🏼கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட நூல் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி தலைமையில் நடைபெற்றது.*
*✍🏼சேலத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் இன்று பார்வையிட்டார்.*
*✍🏼நாமக்கலில் இன்று பல்வேறு கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.*
*✍🏼இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான திரு ரவி விஜயகுமார் மலிமத், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.*
*✍🏼ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசி மூலம் 12 வயது முதல் 18 வயதுடையவர்களுக்கு COVID19 தடுப்பூசியை சவுதி அரேபியா செலுத்த தொடங்கவுள்ளது.*
*✍🏼காவல்துறையில் நேரடியாக பணியில் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர்களுக்கான அறிவு திறன் பயிற்சி வகுப்பினை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அபிநவ் இன்று தொடங்கி வைத்தார்.*
*✍🏼திண்டுக்கல்: “டோக்கியோவை நோக்கி சாலை” என்ற தலைப்பில் அனைத்து வயது பிரிவினருக்குமான ஒலிம்பிக் வினாடி வினா போட்டி இணையதள வாயிலாக நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தகவல்*
*✍🏼கோவை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இன்று வழங்கினார்.*
*இதனைத்தொடர்ந்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.*
*✍🏼கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன், கூடுதலாக நேரத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.*
*✍🏼இந்த மாவட்டங்களில் துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.*
*✍🏼அரியலூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் காரணமாக, பொது பேருந்து போக்குவரத்து இயங்கத் தொடங்கியுள்ளன.*
*✍🏼சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக வணிக வளாகங்கள் காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை செயல்பட அனுமதி.*
*இந்த மாவட்டங்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.*
*✍🏼தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக, #கோவிட்19 பரவல் கட்டுக்குள் உள்ளதாக பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு கூறியுள்ளார்.*
*✍🏼கோவிட்19 சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகள்,மாநிலம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்*.
*✍🏼கோவிட்19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1.94 சதவீதமாக குறைந்துள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.*
*✍🏼கோவிட்19 நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் - உரத்துறை இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா.*
*✍🏼கோவிட்19 காலத்திலும் அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*இந்தியாவுக்கு எதிரான முதலாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.*
*✍🏼சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தோ-சராசனிக் மற்றும் திராவிட கட்டிடக் கலைகளின் சங்கமமாக திகழ்கிறது.*
*✍🏼யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில், இன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் குரோஷியா - ஸ்பெயினையும், பிரான்ஸ் - சுவிட்சர்லாந்தையும் எதிர்கொள்கின்றன*
*✍🏼தடுப்பூசி செலுத்துவதில் வளர்ந்த நாடுகளை விட வேகமாக செயல்படுவது இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனை என்று பிரசார் பாரதி தலைமை செயல் இயக்குநர் திரு சசிசேகர் வேம்பட்டி*
*@shashidigital*
*கூறியிருக்கிறார்.*
*✍🏼புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஆரம்ப கல்வி தாய் மொழியில் இருக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.*
*திருப்பூர், பல்லடம் அருகே சோதனை சாவடியில் நிற்காமல் வந்த சொகுசு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.*
*✍🏼தில்லியில் கோவிட்19 தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து, கூடுதல் தளர்வுகளை தில்லிஅரசு அறிவித்துள்ளது*.
*இதனையடுத்து, கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அடுத்தமாதம் ஐந்தாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*✍🏼தேனியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பொதுப் பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் க.வி முரளிதரன் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.*
*✍🏼தூத்துக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.*
*✍🏼திருப்பூரில், இருந்து மடத்துக்குளம் செல்லும் பிரதான சாலை அருகில் மழை இல்லாமல் வறண்டு போன குளத்தில் இரை தேடும் கொக்கு*
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
______________________
*✅திண்டுக்கல் மாவட்டம்*
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாக்பீஸ் தயாரிப்பு குடிசைத் தொழிலாக செயல்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் சாக்பீஸ் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் வருமானத்துக்கு வழியில்லாம போனதால் நிவாரணம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
______________________
*✅காஞ்சிபுரத்தில்* உள்ள உலகப் பிரசித்தி பெற்றதும், அத்திவரதர் புகழ்பெற்றதும் வரதராஜ பெருமாள் திருக்கோவில், சக்தி பீடங்களில் முதன்மையான காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில், 3,000 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதர் கோவில், கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோவில், உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 600 கோவில்களில் இன்று காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் படி பக்தர்களின் கைகளை கழுவ கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு , உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 48 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
______________________
*✅சிவகங்கை மாவட்டம்* மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
சுகாதாரப் பணியாளர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
______________________
*✅மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடந்தது. பயிற்சி மையத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கற்று தர ஏற்பாட்டால் பொதுமக்கள் அவர்களின் சேவையை வெகுவாக பாராட்டினர்
______________________
*✅மதுரை மாவட்டம்* உசிலம்பட்டி பகுதியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விடுதலைச் சிறுத்தை ஆகியவை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
______________________
*✅கிருஷ்ணகிரி:* கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயாராக உள்ளது
______________________
*✅நெல்லை:* கங்கைகொண்டானில் பைக் மீது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். தாய் முத்துச்செல்வி(25), மகள் அனுஸ்ரீ(6) இறந்த நிலையில் எம்பெருமாள், மகன் அஸ்வந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
______________________
*✅காஞ்சிபுரம்* அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த காப்பக சிறுவர்கள் உள்ள சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு உடையணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
______________________
*✅வேலூரில்* சமூக இடைவெளி இல்லாத மீன், இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
______________________
*✅திருப்பூர்*
பல்லடம் அருகே தந்தையின் கடனுக்காக மகனின் வங்கி கணக்கை முடக்கியதால் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் உயிரிழந்த கனகராஜ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து வங்கி முன் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பல்லடம் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வன் சமரசம் செய்து வைத்தார்.
______________________
*✅சென்னை*
தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
______________________
0 Response to "29.06.2021 இன்றைய முக்கிய செய்திகள் "
Post a Comment