29.6.2021 மாலை செய்திகள்

Trending

Breaking News
Loading...

29.6.2021 மாலை செய்திகள்

29.6.2021 மாலை செய்திகள்

 
   
*சென்னை: பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாப்பேட்டை சிறையில் ஏசி,போன், சார்ஜ்ர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டது கண்காணிப்பு குழு நடத்திய சோதனையில் அம்பலமாகி உள்ளது. இதனையடுத்து, அவர் புழல் சிறைக்கு மாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.*


 
   *அமைச்சரவை விரிவாக்கம்?: பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை*
  
   *சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்*
  

   *இந்தியாவில் ஒரேநாளில் 37,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 102 நாட்களுக்கு பின்னர் 40 ஆயிரத்துக்கும் கீழ் கொரொனா பாதிப்பு குறைந்துள்ளது*
  

     *நீட் தேர்வுக்கு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்குத் தொடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.*
   
  
        *மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன?- அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு*
  
 
   *தூத்துக்குடியில் தனியார் நிலங்களில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது*
  

 
   *முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தரப்பிடம் மீட்கப்பட்ட கோயில் நிலக் கட்டிடத்தை 12 வாரங்களில் அகற்றுக: உயர் நீதிமன்றம் உத்தரவு*
  

 
   *தினக்கூலி, தொகுப்பூதியத்தில் உள்ள திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்*
  
 
   *உடனடியாக மின் இணைப்பு வழங்கும் நிலையில் உள்ள விண்ணப்பங்களுக்கு 3 நாட்களில் மின்இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.*
  
 
   *கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி*
  
 
   *சென்னை புறநகரில் மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு; துணை மின் நிலையங்கள், மின் பாதைகளில் பராமரிப்பு பணி நிறைவு: மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்*
  

   *தமிழக முதல்வரிடம் விஐடி வேந்தர்கோ.விசுவநாதன் 2-ம் தவணை கரோனா நிதியாக ரூ.25 லட்சம் தொகையை வழங்கினார்.*
  
 
   *அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும்: விளாத்திகுளம் அதிமுக கூட்டத்தில் தீர்மானம்*
  

 
   *தனியார் பேருந்து சேவை ஜூலை 1 முதல் தொடக்கம்: டீசல் விலையை குறைக்க கோரிக்கை*
  
 
 
   *புதுச்சேரியில் துறைகள் ஒதுக்கப்படாததால் பதவியேற்பு முடிந்தும் காத்திருக்கும் அமைச்சர்கள்*
  

   *டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று ஒன்றிய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.*
  

0 Response to "29.6.2021 மாலை செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel