தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனால் சுமார் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர். இதேபோல, பொறியியல், கால்நடை, வேளாண்மை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையேற்று, தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது.
0 Response to "தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை 4% - ஆணையத்தின் தலைவர் தகவல் "
Post a Comment