தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளி
மாணவர்கள் அரசு பள்ளிகளில் குவிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாடு
ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசு பள்ளி:
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை உள்ஒதுக்கீடு, அரசு பணியில் முன்னுரிமை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் , சிபிஎஸ்இ மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தற்போது பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் வரவேற்புக்குரியது. கடந்த காலங்களில் மக்களுக்கு தனியார் பள்ளிகள் மீது இருந்த மோகம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தானாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி வணிக நோக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகள் தற்போது அடையாளத்தை இழந்து நிற்கிறது. அரசின் நடவடிக்கையில் அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை சேர மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் தர வேண்டும் எனில் பெருந்தொகையை செலுத்த வேண்டும் என்று துன்புறுத்தி வருகின்றனர்.
இதனால் சில பெற்றோர்கள் கடும் கவலைக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் பள்ளிகளில் EMIS எண்ணை Common Pool போடாவிட்டாலும் அரசு 9ம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS எண்ணை எடுக்கும் வகையில் மாற்றியமைத்து உத்தரவிடும்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிப்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "தமிழக அரசு பள்ளிகளில் குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் – ஆசிரியர் சங்கம்!"
Post a Comment