தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்-முழு விவரங்கள்

Trending

Breaking News
Loading...

தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்-முழு விவரங்கள்

தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்-முழு விவரங்கள்
 
 

தருமபுரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்
2020-21 மூலம் 1000 நாட்டுக்கோழிகள் வளர்க்க ஒருஊராட்சி ஒன்றியத்திற்கு 5பயனாளிகள் வீதம் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 40 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 20 பயனாளிகள் (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 பயனாளிகளுக்கு மிகாமல்) தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது இரண்டாவது தவணையாக மீதமுள்ள 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 20 பயனாளிகளில் 11 பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான திட்ட மதிப்பீட்டில் அரசின் 50 சதவீத தொகை பின்முடிவு மானியமாக வழங்கப்படும்.
 
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
 
1. பயனாளி 1000 எண்ணிக்கை பாலினம் பிரிக்கப்படாத, இரட்டைப் பயன் (இறைச்சி/முட்டை) நாட்டுக் கோழிக் குஞ்சுகளை, ரூ.30,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூ.15,000/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
2. பயனாளி 1500 கிலோ கோழித் தீவனத்தினை ரூ.45,000/-க்கு கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூ.22,500/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
3.பயனாளி ரூ.75,000/- மதிப்புள்ள குஞ்சு பொரிப்பான் கொள்முதல் செய்த பின்னர், பின்முடிவு மானியமாக ரூ.37,500/- பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
 
4. ஒவ்வொரு பயனாளியும் சேவல்களை 16 வாரங்கள் வரையிலும், முட்டைக் கோழிகளை 72 வாரங்கள் வரையிலும் வளர்க்க வேண்டும்.
 
5. சேவல்கள், கோழி முட்டைகள், கருவுற்ற முட்டைகள், கழிக்கப்பட்ட கோழிகள் மற்றும் கோழிக்கழிவு உரம் முதலியன விற்பனை மூலம் பயனாளிகள் வருமானம் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 
பயனாளிகளுக்கான தகுதிகள்
 
1.1000 கோழிகள் பராமரிப்புக்கு சொந்தமாக குறைந்த பட்சம் 2000 முதல் 2500 சதுர அடி கோழிக்கொட்டகை மற்றும் உபகரணங்கள் வைத்திருக்கும், கோழி வளர்ப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் கொண்ட, அதே கிராமத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் பண்ணையாளராக இருக்க வேண்டும்.
 
2. விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 
3. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தேர்வு செய்யப்படுவர்.
 
4. 2012 முதல் 2017 வரையிலான கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் 2018-19ஆம் ஆண்டின் குறைந்த உள்ளீடு தொழில்நுட்ப கோழி வளர்ப்பு திட்ட பயனாளிகளாக இருக்கக் கூடாது.
 
5. 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க வேண்டும்.
 
மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தினை அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் 30.06.2021-க்குள் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 Response to "தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்-முழு விவரங்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel