ஜே.ஈ.ஈ மற்றும் நீட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

Trending

Breaking News
Loading...

ஜே.ஈ.ஈ மற்றும் நீட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

ஜே.ஈ.ஈ மற்றும் நீட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு

 


ஜே.ஈ.ஈ மற்றும் நீட் தேர்வு நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இந்தநிலையில் அதைப்போல நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனால் இந்த தேர்வுகள் ரத்து குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து பரிசீலனை நடந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜே.ஈ.ஈ தேர்வுகள் நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச்சில் முதல் கட்டமாகவும், ஏப்ரல், மே மாதத்தில் இரண்டாம் கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்காத நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Response to "ஜே.ஈ.ஈ மற்றும் நீட் தேர்வு எப்போது? மத்திய அரசு அறிவிப்பு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel