வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!

Trending

Breaking News
Loading...

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!
 


வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் சார்பில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 
வங்கி மோசடி:
 
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் பண மோசடி கும்பல்களின் கைவரிசை அதிகமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் SBI வங்கி ATM-களில் நூதன முறையில் பணம் திருடியது கடந்த வாரம் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் எண்ணிற்கு அவர்களின் வங்கியில் இருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உங்களது வங்கிக் கணக்குடன் PAN CARD இணைக்க கீழே அனுப்பியுள்ள லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குறுஞ்செய்தி வங்கியில் இருந்து அனுப்பட்டது என ஏமாந்து அந்த லிங்கில் உள் நுழையும் போது அதில் வங்கியின்‌‌ வெப்சைட் போன்று காணப்படும்.


 
அதில் வங்கி கணக்கு விவரங்கள், ATM CARD NUMBER, PIN NUMBER, OTP ஆகிய விவரங்கள் பூர்த்தி செய்யுமாறு கோரப்படுகிறது. அதனை வாடிக்கையாளர் பூர்த்தி செய்த பின்னர் வங்கி கணக்கில் இருந்து பண மோசடி செய்யப்படும். எந்த வங்கியும் PAN CARD-ஐ இணைக்க செய்ய குறுஞ்செய்தி வாயிலாக லிங்க் எதுவும் அனுப்புவதில்லை. எனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

0 Response to "வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel