பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

Trending

Breaking News
Loading...

பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

 



*
நெல்லை* சசிகலா பற்றி அவதூறாக பேசிய நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்தும், கண்டனம் தெரிவித்தும் பாளையங்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தினர்
______________________
 
*திருநெல்வேலி* தாழையூத்து இந்தியா சிமெண்ட்ஸ் வளாகத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு பைப் வெடிகுண்டுகளை, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் செயலிழக்க செய்தனர்.
______________________
 
*கரூர்*
கட்ட தவறிய மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதால் மகளிர் சுய உதவி குழுவினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
______________________
 
*ஈரோடு*
கொரோனா ஊரடங்கால் கடந்த 43 நாட்களாக மூடப்பட்டிருந்த ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
______________________
 
*தருமபுரி*: மொரப்பூர் ஒன்றியம், கொங்கரப்பட்டி மற்றும் இருமத்தூர் ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் நடைபெறும் பள்ளி கட்டுமானம், வீடு கட்டும் திட்டப் பணி, குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
______________________
 
*தூத்துக்குடி மாவட்டத்தில்* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்தாம்  வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
______________________
 
*மதுரை* கிழக்கு வட்டம் ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு அனீஷ்சேகர் இன்று  விதை பாவுதல் மற்றும் நடவு செய்தல் பணிகளை பார்வையிட்டார்.
______________________
 
*கோவை* பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முககவசம், தலைகவசம் அணியாமல் வருபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சார்பில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
______________________
 
*இராமநாதபுரம் மாவட்டம்* இராமேஸ்வரம் நகராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, நேரடியாகச் சென்று, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
______________________
 
*விழுப்புரத்தில்* அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் திரு மோகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
______________________
 
*காஞ்சிபுரத்தில்*  விதிகளை மீறி செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட பட்டு சேலை கடைகள் சீல் வைத்து நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை.
______________________
 
*தருமபுரியில்* இருளர் இன மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 12 நபர்களுக்கு ‌புதிய மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்று மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
______________________
 
*திண்டுக்கல் மாவட்டம்* ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் திரு ச.விசாகன்  ஆய்வு மேற்கொண்டார்.
______________________
 
*சேலம்* அருகே வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான ஏத்தாப்பூர் எஸ்எஸ்ஐ பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்
______________________
 
*சென்னை* தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்விபத்தில் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்ட 200-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
______________________
 
*கோவை மாவட்டம்* கிணத்துகடவு ஆய்வாளர் சுரேஷ், தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர்  கையூட்டு பெற்றதால் பணியிடை நீக்கம்.
______________________
 
*சேலம்* காவல்துறை தாக்கப்பட்டதில் உயிரிழந்த முருகேசனின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில்  பிரேத பரிசோதனை நடைபெற்றது.
_____________________
 

0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel