⚡செய்தி
வெளியீடு எண்:314 ⚡நாள்:22.06.2021 வயது முதிர்ந்தவர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை:
எப்படி விண்ணப்பிப்பது! வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அரசு வழங்கும் மாத
உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை
தெரிவித்துள்ளது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக
அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2021 உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை
முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும்
செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டிற்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதிகள் 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள்
இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட
வருமானச் சான்று,
தமிழ்ப்பணி
ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று
தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்
துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchithurai.com இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் (மாதம் தோறும்)
உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும். கடைசி நாள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர்
அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / மாவட்டத்
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும். சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி
இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரிக்கு
நேரடியாக அனுப்பப்பெறலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2021.
Share this post
0 Response to "அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது!"
0 Response to "அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது!"
Post a Comment