கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுக்க உத்தரவு

Trending

Breaking News
Loading...

கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுக்க உத்தரவு

கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுக்க உத்தரவு

 



புதுடில்லி: கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை
6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
 
கோவிட்டால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு இன்று (ஜூன்30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவிட்டால் உறவினர்களை இழந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக நிதியுதவி அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 6 வாரங்களில் வகுக்க வேண்டும். கோவிட்டால், உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம், கடமை மத்திய அரசுக்கு உண்டு. கோவிட்டால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவது அரசின் விருப்பப்படி அல்ல. சட்டப்படி கட்டாயமானது.
 
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம். பரிந்துரைகளை வழங்காமல், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது. இதனால், நிவாரணத்திற்கான குறைந்தபட்ச நெறிமுறைகளுடன், கோவிட்டால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த நெறிமுறையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

0 Response to "கோவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுக்க உத்தரவு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel