சிவகாசியில் குள்ளமணி என்பவரின் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. மூலப்பொருட்கள் உராய்வு காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
_____________________
______________________
*❇️✅விருதுநகர்*
சிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும் அறைகளை வணங்கி ஊழியர்கள் தங்களது பணிகளை தொடங்கினர்.
_____________________
ஊரடங்கு தளர்வில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால், நெல்லையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
______________________
______________________
இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் செயல்பட்டு ஹெல்மெட்டுடன் முககவசம் அணிய அறிவுறுத்தினர்
______________________
விவசாயக் கிணறுகளில் உள்ள நீரை ராட்சத மோட்டார் மூலம் உறிஞ்சி டேங்கர் லாரிகள் மூலம் தனியார் ஓட்டல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன.
இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை
_____________________
ஊரடங்கால் வேலை இழந்தும், ஊர்திரும்ப முடியாமலும் தவித்த தொழிலாளர்களை அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார் இளம்பெண் ஒருவர். இளம்பெண்ணுக்கு குவியும் பாராட்டு
______________________
*❇️✅கன்னியாகுமரி* தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்
______________________
_____________________
சென்னை மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, நசரத்பேட்டையில் காற்றுடன் மழை பெய்தது.
______________________
34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் மது வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது
______________________
திருப்புவனம் ரயில் நிலையம் பின்புறம் ரயில்வே நிா்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் மதுரை சுழற் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது பொக்லைன் இயந்திரத்தின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அதன் ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் கீழே குதித்து உயிா் தப்பினாா். உடனடியாக இதுகுறித்து மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
______________________
0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்"
Post a Comment