Facebook பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் ஆடியோ கிளிப்புகள் சேவை

Trending

Breaking News
Loading...

Facebook பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் ஆடியோ கிளிப்புகள் சேவை

 Facebook பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் ஆடியோ கிளிப்புகள் சேவை


சமூக வலைதள நிறுவனமான Facebook அதன் பயனாளர்களுக்கான ஒரு பிரத்யேக அப்டேட்டை வெளியிடவுள்ளது. அதன் படி Facebook பயனர்களை கவரும் வகையில் வளையொலி அதாவது போட்காஸ்ட் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
போட்காஸ்ட் அம்சம்
 
பொதுவாக இந்த நவீன உலகில் பலரும் தங்கள் நேரத்தை கழித்து கொண்டிருப்பது FACEBOOK, WHATS APP, INSTAGRAM, YOUTUBE போன்ற சமூக ஊடகங்களில் தான். முன்பெல்லாம் சமூகம் என்ற ஒரு இடம் தான் பலரது பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்கள் தான் சிறந்த பொழுதுபோக்கு கருவியாக மாறிவிட்டது. அந்த வகையில் ஒருவர் காலையில் எழுவது துவங்கி, உறங்க செல்லும் வரை அனைத்து செயல்பாடுகளையும் வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியமாகி விட்டது.
  
அந்த வகையில் சமூக ஊடக நிறுவனமான Facebook உலகளவில் பெரும் அளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த முகநூல் செயலியானது விளம்பர நோக்கத்துக்காக சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் படி முகநூல் பயனர்கள்களுக்காக ஒரு புதிய வளையொலி (Podcast) சேவைகள் துவங்க உள்ளது. அதாவது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கேமிங், வீடியோக்கள், நேரடி வீடியோக்கள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கி Facebook தற்போது செயல்பட்டு வருகிறது.
 
இந்த தளம் தற்போது Podcast உள்ளிட்ட சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து PWC அறிக்கை கூறுகையில், 2023 க்குள் இந்தியாவில் 17.61 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை Podcast பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் தொலைபேசி OFF நிலையில் இருக்கும் போதும் பேஸ்புக் பயனருக்கு Podcast செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் 170 நாடுகளில் பாட்காஸ்ட் சப்கிரிபிஷன்ஸ்களை வெளியிட்டு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் முகநூலின் ஆடியோ கிளிப்ஸ் அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு பிடித்த கிளிப்களை உருவாக்கி அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதிலும் இந்த கிளிப்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவே வடிவமைப்பை கொண்டது. இது பயனரின் பார்வை மற்றும் செயலி மீதான ஈடுபாட்டை அதிகரிக்க உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த ஆடியோ கிளிப்ஸ் அம்சம் ஜூன் 22 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

0 Response to " Facebook பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் ஆடியோ கிளிப்புகள் சேவை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel