வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள்!

Trending

Breaking News
Loading...

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள்!

 




இந்தியாவில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மிக முக்கிய இடத்தில் உள்ளது. WhatsApp நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது Android இல் வாட்ஸ்அப் பீட்டா இரண்டு புதிய அம்சங்களைப் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
 
வாட்ஸ்அப் அம்சங்கள்:

சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் Android பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கி உள்ளது. ஆனால் அவை சிறிய மாற்றங்களே. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ்களில் சிறிய அலை வடிவ மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 2.21.13.17 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்சனில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்ப்பட்டு உள்ளது. இந்த அம்சம் தற்போது Android பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் சிக்கல்கள் சரி செய்யப்பட்டவுடன் அதை iOS பயனர்களும் பயன்படுத்தலாம்.
 
சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் ஸ்டிக்கர் Pack களை அனுப்பும் வசதியை பெற்றுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அம்சத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? என்று சோதிக்க விரும்புபவர்கள், தங்கள் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அனுப்பும் ஆப்ஷனில் Pack ஐ காணலாம். இதனால் பயனர்கள் தாங்கள் விரும்பிய ஸ்டிக்கர் Pack களை மிக எளிதாக பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
 
தவிர, வாட்ஸ்அப் சமீபத்தில் ஆடியோ மெசேஜ்களுக்கு இரண்டு புதிய பின்னணி வேக மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 3 வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. அவை 1 எக்ஸ், இயல்புநிலை, அசல் பின்னணி வேகம், 1.5 எக்ஸ் மற்றும் 2 எக்ஸ் ஆகியவை ஆகும். இதனால் மிகப்பெரிய வாய்ஸ் மெசேஜ்களை பயனர்கள் விரைவாக கேட்கும் வசதியை பெறுவர்.

0 Response to "வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel