03.07.2021 இன்றைய முக்கிய செய்திகள்.

Trending

Breaking News
Loading...

03.07.2021 இன்றைய முக்கிய செய்திகள்.

     03.07.2021 இன்றைய முக்கிய செய்திகள்.


 

   










*டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளது.*
 
   *டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,979,313 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 183,830,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168,262,033 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 78,064 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* 
 
   *சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.13,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.72 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.* 
 
   *சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் சவுகத் அலி ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட சவுகத் அலி சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சவுக்கத் அலியை, பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.*
 
   *மும்பை: மராட்டியத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ஜவகர்லால் நேரு துறைமுகத்தில், சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.300 கோடி மதிப்பிலான 290 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.*
 
   *டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஸ் கோவிட் 2, டெல்டா வகை வைரசுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.*
  
   *ஈரோடு: ஈரோடு அருகே சித்தோடு ஆட்டையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 30 லட்சம் மதிப்புள்ள நூல்கள், மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.* 
 
   *சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.* 
 
   *சென்னை: மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார்.* *http://192.168.150.75/openbd/RTAJUL21* - *என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறுவதால் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என மின்வாரியம் அறிவித்துள்ளது.*
 
 
   *கடலூர் அருகே போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரை புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*.
 
   *போலந்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பார்சலில் வந்த உயிருள்ள சிலந்திகள்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்*   
 
   *ஐஆர்சிடிசி சார்பில் காசிக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்மிக சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.* 
 
   *மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு டெல்லி, குஜராத் போல் தமிழகத்திலும் மானியம் வழங்கப்படுமா?- அச்சமூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு* 
 
   *தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்*
  
   *திமுக முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்(80) நேற்று காலமானார்.* 
 
   *கரோனா தடுப்பூசி போட கட்டிலுடன் வரிசையில் காத்திருந்த மக்கள்: ஈரோட்டில் இரவிலே களைகட்டும் கூட்டம்* 
 
   *காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை மூலம் விழிப்புணர்வு வகுப்புகள்: காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா தகவல்* 
 
   *ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்* 
   *தரமற்ற விதையை வழங்கியது அதிமுக ஆட்சி; எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி*  
 
   *கொல்லங்கோடு:*
 
*கொல்லங்கோடு அருகே வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 3 பெண் புரோக்கர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்* 
 
   *இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 753 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,01,050 -ஆக அதிகரித்துள்ளது.*
 
 
   *நாகர்கோவில்:*
 
*ஆன்லைனில் தேர்வு எழுதும் கல்லூரி மாணவர்கள் விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.*
 
*மண்டைக்காடு கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் நாகராஜா கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது*
 
*குமரி மாவட்டத்தில் மழை பெய்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.* 

 *தூத்துக்குடி:*

   *தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்.* 
 
   *தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 46). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருந்து வந்தது. சமீபகாலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதில் மனம் உடைந்த நெல்லையப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.* 
 
   *தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனியாக சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.*   
 
*தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று வாகைகுளம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி முறைகேடாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மாரியப்பனை கைது செய்தனர். லாரி மற்றும் 3 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.*
  
   *தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்* 
 
   *விர்ஜின் கேலக்டிக் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் ஆந்திர பெண் விஞ்ஞானி*
 
   *20 ஆண்டாக அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய பக்ரம் விமானப்படை தளம் ஆப்கானிடம் ஒப்படைப்பு* 
 
   *சென்னையில் தொடர்ந்து மூன்றாவது சனிக்கிழமையும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குரூ. 40 அதிகரித்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.* 
 
   *மயிலாடுதுறை: ஆக்கூர் முக்கூட்டு என்ற இடத்தில் கார் மரத்தில் மோதி பெண் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் குடும்பத்துடன் காரில் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.*
 
   *சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஏ.டி.எம்.,களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, பல மாநில போலீசார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தமிழக தனிப்படை போலீசார், இளநீர், பீடா வியாபாரி போல வேடமிட்டு, கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர்* 
 
   *புதுச்சேரி: மதகடிப்பட்டு கால்நடை வாரச்சந்தை வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டு வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை கொரோனாவால் மூடப்பட்டிருந்த நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் இதனை தெரிவித்துள்ளார்.* 
 
   *பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மின் பிரச்னையால் மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுதன் சமாஜ் தலைவர் மாயாவதி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.*    
 
   *கனடா மற்றும் அமெரிக்காவில் கொளுத்தி வரும் வரலாறு காணாத வெப்பநிலை காரணமாக மக்கள் திண்டாடி வருகின்றனர்.* 
 
   *டெல்லி: டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து உள்ளனர்.*
 
   *கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதியைச் சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் கார், இருசக்கர வாகனம் ஆகியவை தீப்பற்றி எரிந்தன.* 
 
   *திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு*
  
   *கொரோனா 2- வது அலை ஓய்ந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்* 
 
   *தடுப்பூசி இடைவெளியை  நினைவில் வைத்து கொள்ளுங்கள் மீண்டும் மத்திய அரசை எச்சரிக்கும் ராகுல்காந்தி* 
 
*அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
  

0 Response to " 03.07.2021 இன்றைய முக்கிய செய்திகள். "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel