அரசியலும் காரணம்...' - மேகதாது சிக்கலில் ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம் எழுதியது ஏன்?*
காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை சட்ட விரோதமானது என உச்ச
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ள நிலையில்,
இந்த அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்
எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: 'மேகதாது அணை பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
நீர் தேவையை பூர்த்தி செய்ய கட்டப்பட வேண்டும். இந்த அணைத் திட்டத்திற்கு
தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. இரு மாநிலத்தின் நீர் தேவையை
பூர்த்தி செய்யவும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது இந்தத் திட்டம். மேகதாது அணை
காரணமாக தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
ஆகவே, தமிழக அரசு
மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க கூடாது என எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கு
இடையே நல்லுறவு நிலவுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். இந்த அணை கட்டுவதால் தமிழக
விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, இரு மாநிலத்தின் நன்மை மற்றும் விவசாயிகளின் நன்மைக்காகவே இந்த திட்டம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழக அரசு குந்தா மற்றும் சிலஹல்லா நீர் மின் நிலைய திட்டங்களை
பவானி பகுதியிலே அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு எந்த
வகையிலும் கர்நாடக அரசின் அனுமதியை கோரவில்லை. இதுவரை தமிழ்நாடு அரசு கர்நாடக
அரசுடன் எந்த பேச்சுவர்த்தையும் நடத்தவில்லை. அதேபோன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேட்டூர் அணைக்கு கீழ் தமிழக சிறு
சிறு நீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதற்கும் இதுவரை கர்நாடக அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
எனவே, இரு மாநில
நலனுக்காக கட்டப்பட்டும் மேகதாது அணைக்கும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க
வேண்டாம். என்ன பிரச்னையாக இருந்தாலும் இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண
வேண்டும். அதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'
என்று எடியூரப்பா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
செய்து சட்டபூர்வமாக இந்த அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என
நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அத்துடன், மத்திய அரசு இந்த அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது எனவும்
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மேகதாது அணைத்
திட்டத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போகக்கூடிய சூழ்நிலை
உருவாகும் என கர்நாடக அரசு கருதுவதால், அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் அதிகாரிகள்
கணித்துள்ளனர். அரசியல் ரீதியாகவும் மேகதாது திட்டம் கடுமையான எதிர்ப்பை
சந்திக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
மத்தியிலும் அதேசமயத்தில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில்
இருப்பதால் ஒருவேளை மத்திய அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளித்தால்,
அது தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கருத்தை
உருவாக்கும். அதேசமயத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்றுவிட்டால் கர்நாடக
மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு வலுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
அண்மையில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என
கடிதத்தில் தெரிவித்துள்ள எடியூரப்பா, இரு மாநில உறவுகளை வலுப்படுத்த இணைந்து செயல்பட தயார் எனவும்
தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடக அரசு மற்றும் தமிழ்நாடு
அரசுக்கு இடையே பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு
நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா,
புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு
எவ்வளவு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
கணபதி சுப்ரமணியம்-
🅴🆆🆂யார் கோள் தடுப்பணை: சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க
வேண்டும்*
யார் கோள் தடுப்பணை விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு
முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்
இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ‘யார் கோள்’ என்ற இடத்தில் தடுப்பணை
கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த நீராதாரத்தை
தடுத்துள்ளது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும்,
நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். ஐம்பது
கோடி கன அடி தண்ணீரை தேக்கும் யார் கோள் அணை திட்டத்தால் தமிழ்நாட்டின் குடிநீர்
ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை,
வேலூர், விழுப்புரம், கடலூர்
மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் உருவாகும். சாத்தனூர் அணை தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு
போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக
அரசு தடுப்பணை கட்டியுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் நீராதாரம் பறிபோயுள்ளது. கர்நாடக
அரசு தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ தண்ணீர் உரிமையை தொடர்ந்து மறுத்து வருவது மாநிலங்களுக்கு
இடையிலான உறவுகளை பலவீனப்படும். இதுபோன்ற நேர்வுகளில் ஒன்றிய அரசு உடனடியாக
தலையிட்டு பாரபட்சமில்லாத, சார்பற்ற நடுநிலையோடு அணுகி தீர்வு காண்பதுதான் கூட்டாட்சி கோட்பாட்டை
உறுதிப்படுத்தும். ஆனால் பாஜக ஒன்றிய அரசு கர்நாடக அரசின் அத்துமீறலை தொடர்ந்து
ஆதரித்து வருவதும் அல்லது சார்பு நிலை எடுப்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு
இழைக்கப்படும் அநீதியாகும்.
கர்நாடக மாநில அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை எதிர்த்து சட்டப்
போராட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின்
ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டி தண்ணீர் உரிமை பாதுகாப்புக்கான மக்களியக்கத்தை
கட்டமைப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்
கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-
லாரி தொழிலையே விட்டுச்செல்லும் அளவுக்கு நெருக்கடி" - புலம்பவைக்கும்
டீசல் விலை உயர்வு*
14 மாத கொரோனா பேரிடர் காலத்திலும் டீசல் விலை லிட்டருக்கு 27 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் முடங்கும் லாரி தொழிலை காக்க,
டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டீசல் விலை இதே ஜூலை மாதம் ஒன்றாம் தேதி லிட்டருக்கு 78 ரூபாய் 31 காசுகளாக
இருந்தது. இந்த ஜூலையில் ஒரு லிட்டர் டீசல், 94 ரூபாய் 48 காசுகளாக
இருக்கிறது. கடந்த 14 மாதத்தில் ஒரு
லிட்டர் டீசல் விலை 27 ரூபாய் 63 காசுகள் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டும் ஊரடங்கால் முடங்கிய நிலையில், இந்த ஆண்டும் 2ஆம் அலையால்
லாரிகளின் ஓட்டம் ஸ்தம்பித்தது. அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு,
சரக்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் லாரி
உரிமையாளர்கள் பெரும்பாதிப்பை சந்தித்துவரும் சூழலில், தளர்வுகளுக்குப்பின் மீண்டெழும் நம்பிக்கையை அடியோடு சரித்துள்ளது டீசலின்
விலை.
ஆண்டுதோறும் உயரும் சுங்கக்கட்டணம், காப்பீட்டு கட்டணங்கள், உதிரிப் பாகங்கள் விலை உயர்வு என லாரி தொழில் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் லாரி உரிமையாளர்கள்.
ஏற்கனவே கொரோனா முடக்கத்தால் லாரிகளுக்கு போதிய லோடுகள் இல்லாமல் பல லட்சம்
லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது
இத்தொழிலை அழிவு நிலைக்கு கொண்டுவிடும் என்று வேதனைப்படுகிறார்கள் லாரி தொழிலில்
உள்ளவர்கள்.-
*🅽🅴🆆🆂மதுரையில் ஆதரவற்ற தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு*
மதுரை: மதுரையில் ஆதரவற்ற தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயந்திபுரத்தில் சாலையோரம்
வசித்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கியவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.-
🅽🅴🆆🆂தமிழகத்தின் 6முக்கிய
நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!*
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும்
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து
வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு தஞ்சை ஆகிய
நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
•
கோவை - 474
•
ஈரோடு - 360
•
சேலம் - 251
•
திருப்பூர் - 231
•
தஞ்சாவூர் - 232
•
சென்னை - 227-
தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள்
அமைச்சர் பி.பழனியப்பன்*
அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன்
இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை, அண்ணா
அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில்
இணைத்துக்கொண்டார். அதுபோது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,
துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா,
எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பொதுப்பணித் துறை
அமைச்சர் எ.வ.வேலு, மின்துறை
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன்,
முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள்
எம்.எல்.ஏ.வுமான சி.ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய, நகர,
பேரூர், கிளை மற்றும் அணிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் இன்று தி.மு.க.வில் இணைந்தனர்.-
உதயநிதியிடம் உண்டியல் பணத்தை பொது நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுவர்
சிறுமியர்!
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்-சிறுமிகள் தாங்கள்
சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக
கொடுத்துள்ளனர் இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
விருத்தாசலத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா கொரோனா தடுப்பு பணிக்காக
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தன் சேமிப்பு ரூ.146ஐ இன்று என்னிடம் வழங்கினார். மேலும், ரவை, கடுகு,
உப்பை கொண்டு என்னை ஓவியமாக வரைந்து என்னிடம்
பரிசளித்தார். சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி.
கடலூர், விருத்தாசலத்தை
சேர்ந்த புஷ்பராஜ்-இந்திரா தம்பதியரின் மகள்கள் பிரணவி, கனிஷ்கா இருவரும் தங்களின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க சேர்த்து
வைத்திருந்த தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.
கடலூர், வடலூரை சேர்ந்த
சாகுல் ஹமீத்-பரக்கத் நிஷா தம்பதியரின் மகள்
அஃபினா பாத்திமா தன்னுடைய உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு
என் அன்பும், நன்றியும்-
*🅽🅴🆆🆂நாட்டில் இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை*
நாட்டில் இதுவரை 35 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 35 கோடிக்கும் அதிகமான (35,05,42,004) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.
ஜூன் 21-ல் இருந்து
அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில்,
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 57.36 லட்சம் (57,36,924) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் 28,33,691 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 3,29,889 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர்,
37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 99,434,862 பேர் முதல் டோஸையும், 2,712,794 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில்
இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு,
பிகார், குஜராத், கர்நாடகம்
மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவனருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர்,
தில்லி, ஹரியாணா, ஜார்கண்ட்,
கேரளம், தெலங்கானா, இமாச்சலப்
பிரதேசம், ஒடிசா,
பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பு மருந்தை இது வரை
வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 5816249 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 136622 நபர்கள் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் 190648 பேர்
முதல் டோஸ் தடுப்பூசியையும், 349 பேர் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.-
*🅽🅴🆆🆂சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: ஏ.என்.பி.ஆர். கேமராவில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகள்!*
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன கேமராக்களில் சிக்கிய 10,905 வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர்,
திருமங்கலம் உள்பட 5 சிக்னல்களில் (ஏ.என்.பி.ஆர்.) A.N.P.R. எனப்படும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தை வேகமாக இயக்குவது,
ஸ்டாப் லைனை தாண்டி வாகனத்தில் நிற்பது,
சிவப்பு சிக்னலை மீறுவது போன்ற செயல்களில்
ஈடுபடுவோரின் வாகன பதிவெண்களை அந்தக் கேமரா உடனே படம்பிடித்து,
தேசிய தகவல் தொழில்நுட்பத்தின் சர்வருக்கு அனுப்பி,
சம்பந்தப்பட்ட வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு 10 நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறிய 10,905 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்திற்குள் முறையான
விளக்கம் அளிக்காத பட்சத்தில், அபராதம் வசூலிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை
பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.-
*🔷🔶திண்டுக்கல் மாவட்டம்* விருப்பாச்சி, கணவாய்மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக்(33) என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்து பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட
ஆட்சியர் விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து,
சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும்
போலீசார் கார்த்திக்கை கைது செய்து
சிறையில் தடுப்புக் காவலில் அடைத்தனர்
*🔷🔶கோவை* தண்டுமாரியம்மன் கோவிலில்
தமிழக அரசு புதிய தளர்வுகள் அறிவிப்பை அடுத்து திருக்கோவில்கள் சுத்தம்
செய்யும் பணி தொடங்கியது.
*🔷🔶மதுரை*
நாளை மறுநாள் மீனாட்சிஅம்மன் கோவில் திறக்கபடவுள்ளதையடுத்து கோவிலை
சுத்தப்படுத்தும் பணி நடந்தது
*🔷🔶ஈரோடு*
அரச்சலூர் அருகே குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோட்டத்து வீட்டில் குக்கர் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சிய ரமேஷ்,
பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 450 லிட்டர் சாராய ஊறல் 6 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
*🔷🔶மதுரை*
இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*🔷🔶ஈரோடு*
அருகே கொரோனா பரிசோதனை எனக் கூறி விஷ மாத்திரை தந்த சம்பவத்தில் மேலும்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கருப்பணனும் இறந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
*🔷🔶செங்கல்பட்டு*
மாமல்லபுரம் அருகே இன்று காலை புதுவை நோக்கி சென்ற ஒரு காரின் பின்பக்க
டயர் வெடித்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
*🔷🔶மதுரை மாவட்டம்* கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தரராஜன்பட்டி
கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மதுரை மாவட்ட
ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் வணிகவரி
மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று துவக்கி வைத்தார்.
*🔷🔶திருச்சி*: மணப்பாறை அருகே பொன்னம்பலத்தான்பட்டியில் எலிமருந்து சாப்பிட்டு
2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை
செய்துகொண்டுள்ளார். எலி மருத்து சாப்பிட்ட தாய் நித்யா, பிள்ளைகள் ரோகித்(4), நல்லக்கண்ணு(7) அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
*🔷🔶தருமபுரி:* மளிகை கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் தரசிம்மன் கொடுத்த
புகாரில் பேரில் தருமபுரி நகர போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
*🔷🔶விழுப்புரம்* கோலியனூர், வளவனூர், காணை,
விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
*🔷🔶திருவண்ணாமலை மாவட்டம்* போளூர் ரயில்வே கேட் பாலம் அருகே அதிவிரைவு ரயிலில்
சிக்கி பத்துக்கும் மேற்ப்பட்ட வெள்ளாடுகள் பலி.
🅽🅴🆆🆂கர்நாடகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பு*
கர்நாடகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மேலும் தளர்வுகள் அளித்து
அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
•
புதிய தளர்வுகளின் படி, மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து திங்கள்கிழமை முதல் முழு இருக்கை
வசதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
•
அரசு அலுவலங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
•
இரவு நேர ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 5.00 மணி வரை அமலில் இருக்கும். மாறாக வார இறுதி ஊரடங்கு ரத்து
செய்யப்படுகிறது.
•
போட்டி பயிற்சி நோக்கங்களுக்காக நீச்சல் குளங்கள்
திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
•
திருமண உள்ளிட்ட நிகழ்வுகளில் 100 பேரும், அதேசமயம்
இறுதிச்சடங்குகளில் 20 பேரும்
பங்கேற்கலாம்.
•
வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கிடையாது.
•
கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து
மூடப்பட்டிருக்கும் என்பன உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாள்களுக்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மாவட்ட
நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*🅽🅴🆆🆂1,000 புத்தகங்களை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார் முதல்வர்*
சென்னை, எழும்பூர்
கன்னிமாரா பொது நூலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 1,000 புத்தகங்களை வழங்கினார்.
முதல்வரும், திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின் கடந்த 2017ஆம் ஆண்டு
முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த
வேண்டுகோளினையடுத்து, தனக்கு
வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட
புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 புத்தகங்களை சென்னை, எழும்பூர், கன்னிமாரா பொது
நூலகத்திற்கு, அண்ணா
அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (3.7.2021), மாலை,
பொது நூலக இயக்கக இணை இயக்குநர் கே.செல்வக்குமார்
மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷிடம் வழங்கினார்.
அதுபோது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பொதுப்பணித் துறை
அமைச்சர் எ.வ.வேலு, தலைமை நிலையச் செயலாளர்கள்
துறைமுகம் காஜா, பூச்சி
எஸ்.முருகன் மற்றும் பேராசிரியர் ஆய்வக நூலகர் அ.சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
*🅽🅴🆆🆂பிரதமர் படம், தாமரை சின்னம்:
இலவச ரேஷன் திட்டத்தில் மாநில அரசுகளை அறிவுறுத்தும் பாஜக*
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் இலவச ரேஷன் தானியங்கள்
விநியோகிக்கப்படும் மையங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வரின்
படங்கள் இடம்பெறும் பதாகைகளைப் பயன்படுத்துமாறு பாஜக ஆளும் மாநிலங்களை கட்சி தலைமை
கேட்டுக் கொண்டுள்ளது.
இலவச உணவுதானியங்களை வழங்கும் ரேஷன் பைகளில் பாஜகவின் சின்னமான தாமரை
இடம்பெறவேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக
பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜகவின் அனைத்து மாநில பிரிவுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்களின் பொருளாதார கஷ்டங்களை
குறைக்கும் பொருட்டு இந்த ஆண்டு ஜூன் வரை இரண்டு மாதங்களுக்கு,
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் 80 கோடி பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதத்திற்கு ஐந்து
கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டம் நவம்பர் இறுதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் காண்பிக்கப்பட வேண்டிய பேனரின் வடிவமைப்பின் மாதிரி,
பாஜக டெல்லி அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு,
மாநில கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாஜக ஆளாத
மாநிலங்களிலும் ரேஷன் பைகளில் தாமரை சின்னம் இடம்பெற வேண்டும் என்று கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேகதாது - எடியூரப்பா கடிதம் | ரஃபேல் சர்ச்சை | 5 நாட்களுக்கு கனமழை*
எடியூரப்பா கடிதம் - துரைமுருகன் விளக்கம்: மேகதாது அணை திட்டத்திற்கு
ஒத்துழைப்பு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின்
நிலைப்பாடு குறித்து கர்நாடக அரசுக்கு உரிய பதில் தரப்படும் என நீர்பாசனத்துறை
அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அறக்கட்டளை நிறுவனர், நிர்வாகி கைது: மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில்
அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு
தப்பிக்க முயன்ற நிலையில் தேனி மாவட்ட எல்லையில் 2 பேரும் பிடிபட்டனர்.
ரேஷனில் தரமான பொருட்களை வழங்க உத்தரவு: ரேஷன் கடைகளில் தரமாகவும் தங்கு தடையின்றியும்
பொருட்களை வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
7 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 7 மாவட்டங்களில் சற்றே பாதிப்பு அதிகரித்துள்ளது.
பழனி - முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனம்: திங்கள்கிழமை முதல் கோயில்
திறக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே
பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பழனி முருகன் கோயில் நிர்வாகம்
அறிவித்துள்ளது.
ஜவுளி, நகைக்கடை ஊழியர்களுக்கு
தடுப்பூசி: கொரோனா விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்றுமாறு சென்னை
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டியளித்துள்ளார். ஜவுளி,
நகை மற்றும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு
தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
அமமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியம்: அமமுகவில் பொதுச் செயலாளராக இருந்த
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னிலையில் கட்சியில் ஐக்கியமானார்.
மீண்டும் வெடிக்கிறது ரஃபேல் சர்ச்சை: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடுகளை
பிரான்ஸ் வலைத்தளம் அம்பலப்படுத்தியதன் எதிரொலியாக இந்தியாவிலும் விசாரிக்கும்
நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உத்தராகண்ட் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் மாநிலத்தில்
முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி. பாரதிய ஜனதா சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா அலைகள் ஓய்வதில்லை?: கொரோனா பாதிப்பு குறைந்து வந்த பிரிட்டன், ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட
நாடுகளில் மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பங்களாதேஷ்,
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று
உயர்கிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு
பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு
கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம்
அறிவித்திருக்கிறது.
*🅽🅴🆆🆂தனியாா் நிறுவனத்திடம் கவுன்ட்டா் நிா்வாகம்: தேவஸ்தானம் விளக்கம்*
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கவுன்ட்டா்கள் வெளிப்படை ஒப்பந்தத்தின்
அடிப்படையில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானம் லட்டு, வாடகை அறைகள், தரிசன டிக்கெட்டுகள்,
சோதனை சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் கவுன்ட்டா்களை
ஏற்படுத்தி பக்தா்களுக்கு தேவையான சேவைகளை அளித்து வருகிறது. தனியாா்
நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்று வெளிப்படையாக ஒப்பந்தங்களை
பரிசீலித்து அதனடிப்படையில் தோ்ந்தெடுத்து ஒப்பந்தம் அளித்து வருகிறது.
அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன் பெங்களூரை சோ்ந்த ஒரு நிறுவனத்திடம்
செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தேவஸ்தானம் 164 கவுன்ட்டா்களை திறந்து சேவைகளை தொடங்கியது.
இதுகுறித்து பல ஊடங்களில் தவறாக செய்திகள் வெளி வந்தது. அதற்கு தேவஸ்தான அதிகாரிகள்
அளித்த விளக்கம் வருமாறு:
இதற்கு முன்பு திரிலோக் நிறுவனத்திடம் தேவஸ்தானம் செய்து கொண்ட
ஒப்பந்தத்தின்படி 89 கவுன்ட்டா்கள்
திருமலை மற்றும் திருப்பதியில் செயல்பட்டு வந்தன. 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொண்டது. மேலும் திருமலையில்
லட்டு கவுன்ட்டா்கள் 25 மட்டுமே
வங்கிகளின் கீழ் இருந்து வந்தன. கரோனா காலகட்டத்தால் வங்கிகள் 16 கவுண்டா்களின் சேவையை நிறுத்தி கொண்டது.
அதனால் தேவஸ்தானம் புதிய நிறுவனத்துடன் வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம்
செய்து கொண்டது. இதில் தவறுகள் ஏதும் நடைபெறவில்லை. இலவசமாக நடைபெற்று வந்த
சேவைகள் அனைத்தும் அவ்வாறே தொடரும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ரூ.59 ஆயிரம் கோடி
ரபேல் விமான பேர ஊழல் நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு: தனி நீதிபதி நியமித்து
அதிரடி
புதுடெல்லி: இந்தியாவுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமானம் கொள்முதல்
ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை
தொடர்ந்து, இந்த ஒப்பந்தம்
பற்றி நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தனி நீதிபதியும்
நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால், ரபேல் ஒப்பந்த விவகாரம் மீண்டும் சூடு
பிடித்துள்ளது. நாட்டின் விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்சிடம்
இருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம்
செய்யப்பட்டது.
அப்போது, ஒரு விமானத்தின்
விலை ரூ.526 கோடி என
நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி
பொறுப்பேற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். இந்த ஆட்சி ஏற்பட்டதும்,
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபர்
இம்மானுவேல் மேக்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு விமானத்தின் விலை ரூ.1,607 கோடி என்ற அடிப்படையில், ரூ.59 ஆயிரம் மோடிக்கு
36 ரபேல் போர் விமானங்களை
வாங்குவதற்கு மறுஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து
குற்றம்சாட்டியது. 2019
நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த
குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்தது. அதன் பிறகு, இந்த பிரச்னை ஓய்ந்து விட்டது. விமானங்களும் தயாரிக்கப்பட்டு,
இந்தியாவிடம் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட ரபேல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில்,
பிரான்சை சேர்ந்த புலனாய்வு இதழான ‘மீடியாபார்ட்’, ரபேல் ஒப்பந்தத்துக்காக இந்திய தரகருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக
கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது. அதற்கான ஆதாரங்களுடன் கடந்த ஏப்ரலில் செய்தி
வெளியிட்டது. மேலும், பிரான்சை சேர்ந்த
தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘ஷெர்பா’வும், இது தொடர்பான
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. இதனால்,
அதிபர் மேக்ரனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, ரபேல் விமான
ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான,
தனி நீதிபதியையும் நியமித்துள்ளது. இது பற்றி
‘மீடியாபார்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘2016ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தான ரபேல் போர் விமான
ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் நிலவுவதால்,
அது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு
உள்ளது. கடந்த மாதம் 14ம் தேதியே இதற்கான விசாரணை தொடங்கியது.
விசாரணைக்காக பிரான்ஸ் நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார். பிரான்சின் தேசிய நிதி
குற்றப்பிரிவு அலுவலகமும், இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது,’ என கூறியுள்ளது. இதனால், அடங்கி கிடந்த இந்த ஒப்பந்தம் பற்றிய சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
*
போட்டி நிறுவனங்களின் கைப்பாவை
டெல்லியில் பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில்,
‘‘ராகுல் காந்தியின் நடவடிக்கையை பார்க்கையில்,
ரபேலை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துக்கு எதிரான
போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று கூறினால் அது
மிகையாகாது. இந்த விவகாரத்தில் அவர் ஆரம்பத்தில் இருந்தே பொய் கூறி வருகிறார்.
அவர் ஏஜென்டை போன்று அல்லது போட்டி நிறுவனத்தில் இருக்கும் காந்தி குடும்பத்தை
சேர்ந்த நபர் போல நடந்து கொள்கிறார். ராகுலும், அவரது கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது நாட்டை வலுவிழக்க
செய்யும் முயற்சியாகும். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் மற்றும் தவறான தகவல்களை
காங்கிரஸ் பரப்பி வருகிறது. பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய புகாரை பற்றி
விசாரணைக்கவே, பிரான்ஸ் அரசு
தனி நீதிபதியை நியமித்துள்ளது. இதை ஊழல் விவகாரமாக பார்க்கக் கூடாது,’’
என்றார்.
*
கூட்டுக்குழு விசாரணை காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த
பேட்டியில், ‘‘ரபேல்
ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம்
குறித்து நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம்,
காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின்
குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது,
காங்.-பாஜ மோதல் கிடையாது. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்பான விவகாரம்,’’ என்றார்.
*
நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ல் தொடங்குகிறது. ஏற்கனவே, தடுப்பூசி தட்டுப்பாடு, பொருளாதார சீர்குலைவு, பெட்ரோல், டீசல் விலை
உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரபேல் முறைகேடு விவகாரமும் வெடித்து இருப்பதால்,
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனல் பறக்கும்....
98 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு தகவல்
மாஸ்கோ: டெல்டா வகை கொரோனா வைரஸ் 98 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனா
ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இறங்குமுகமாக இருந்த பல நாடுகளிலும் தற்போது அதிகரிக்க
தொடங்கிவிட்டது. இதை இந்தியாவுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டி
இருக்கிறது.
ரஷ்யாவில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இன்று அங்கு அதிக அளவு பாதிப்பு
பதிவாகியுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 24,439 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு
வரை தொற்று இல்லாத நாடாக இருந்த இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 300 தொற்றுகள் வரை பதிவாகின்றன. 10 நாட்களுக்குள் ஒருநாள் பாதிப்பு 10,000ஆக உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்திலும் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 26,000க்கும் அதிகமாக பதிவாகிறது. ஆப்கானிஸ்தானில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத
அளவிற்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. தலைநகர் காபூலில் 60% பாதிப்பு டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை
கூறியுள்ளது.
வங்கதேசத்தில் மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தொற்று பாதிப்பு
அதிகரித்து வருகிறது. மே 25 முதல் ஜூன் 7 வரை தலைநகர்
டாக்காவில் பதிவான 68% தொற்று பாதிப்புக்கு
டெல்டா வகையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் கடந்த 3 வார காலமாக தொற்று அதிகரிப்பதை அடுத்து வரும் 20ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக 5 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நாடுகளில்
பதிவாகும் தொற்றுகளில் 60 விழுக்காட்டிற்கும் மேல் டெல்டா வகை வைரசால் ஏற்படுவதும் தெரிய
வந்திருக்கிறது. இந்தியாவிலும் ஒருநாள் தொற்று இறங்குமுகமாக இருந்து வந்தாலும்
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அடுத்த அலைக்கான சாத்தியங்களும் வாய்ப்புகளும்
நெருங்கி கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
அம்பையில் பூட்டிய வீட்டிற்குள் மர்ம சாவு; மகிளா காங். தலைவி தற்கொலையா?.. போலீஸ் விசாரணை
அம்பை: அம்பையில் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த
மகிளா காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம்,
அம்பை, ஆசிரியர் காலனி, கம்பர் தெருவைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மனைவி சுதா (49).
அம்பை வட்டார மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த இவர்,
குடும்ப பிரச்னை காரணமாக பல வருடங்களாக கணவரை
பிரிந்து, அம்பையில் தனியாக
வசித்து வந்தார்.
சசி (32), வாசுகி (30)
என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து
வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து சுதாவின் உறவினர் நேற்று
வீட்டுக்கு வந்த போது, உட்புறமாக
பூட்டிக் கிடந்த கதவு நீண்ட நேரமாக திறக்காததால், ஜன்னலை தள்ளி விட்டு பார்த்துள்ளார். அப்போது சுதா வீட்டினுள் இறந்து
கிடந்தது தெரியவந்தது. மேலும் துர்நாற்றமும் வீசியதால் அம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அம்பை அனைத்து மகளிர்
காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராதா, அம்பை எஸ்ஐ சைமன் சாம்பாகூர், விஏஓ ஆகியோர் கதவை உடைத்து பார்த்த போது, சுதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான
போலீசாரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சுதாவின் வீடு உட்புறமாக பூட்டியிருந்ததால்,
அவர் தனிமை துன்பத்தால் தற்கொலை செய்திருக்கலாம்
அல்லது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என அம்பை போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும்
அவருக்கும், வேறு யாருக்கும்
முன் விரோதம் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக
காத்திருக்கிறோம் என அம்பை போலீசார் தெரிவித்தனர்....
எலி மருந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்
மணப்பாறை: குடும்ப தகராறில் எலி மருந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள
வரதக்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(30). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா(27). இவர்களது மகள் நல்லக்கண்ணு(7), மகன் ரோகித்(4). நல்லக்கண்ணு
2ம் வகுப்பு படித்து வந்தாள்.
ரோகித் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தம்பதி இடையே அடிக்கடி தகராறு
ஏற்படும். அப்படி சண்டை வரும்போதெல்லாம்
நித்யா, குழந்தைகளுடன்
பொன்னம்பலத்தான்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
மணப்பாறை: குடும்ப தகராறில் எலி மருந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள
வரதக்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(30). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா(27). இவர்களது மகள் நல்லக்கண்ணு(7), மகன் ரோகித்(4). நல்லக்கண்ணு
2ம் வகுப்பு படித்து வந்தாள்.
ரோகித் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தம்பதி இடையே அடிக்கடி தகராறு
ஏற்படும். அப்படி சண்டை வரும்போதெல்லாம்
நித்யா, குழந்தைகளுடன்
பொன்னம்பலத்தான்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
பின்னர் கணவர் வந்து சமாதானப்படுத்தி அவர்களை அழைத்து செல்வது வாடிக்கையாக
இருந்து வந்தது. சமீப காலமாக அவர் தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
மணப்பாறையில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்தார். தம்பி ஆறுமுகத்துடன்,
நித்யா வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சில
நாட்களுக்கு முன் நித்யாவின் மாமியார்
இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட நித்யா, பின்னர் கணவர் வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது மீண்டும் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நித்யா,
கடந்த 30ம் தேதி தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போதிருந்தே விரக்தியில்
காணப்பட்ட நித்யா மறுநாள்(ஜூலை 1ம் தேதி) காலை மகள், மகனுக்கு எலி மருந்தை கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். பின்னர்
குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தம்பியுடன் மில்லுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
பகல் 11 மணி அளவில்
தம்பியிடம், குழந்தைகளுக்கு
எலி மருந்து கொடுத்து தானும் சாப்பிட்டதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பி ஆறுமுகம், உடனே நித்யாவை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர்
வீட்டுக்கு சென்று பார்த்த போது, நித்யாவின் குழந்தைகள் நல்லக்கண்ணு, ரோகித் மயங்கி கிடந்தனர். உடனே
அவர்களையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்
சிகிச்சைக்காக, 3 பேரும் திருச்சி
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேருக்கும் தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நித்யா இறந்தார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் ரோகித் இன்று அதிகாலை 3.30 மணிக்கும், 7.30 மணிக்கு
நல்லக்கண்ணுவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நித்யாவின் தந்தை
சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறில் மகன், மகளை எலி மருந்து கொடுத்து கொன்று
விட்டு, தாய் தற்கொலை
செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட மறுத்து மரத்தில் ஏறி
போக்குகாட்டிய மக்கள்
கோவை: கோவையில் பாதிப்பு குறைக்க நகர் பகுதிக்கு இணையாக
கிராமப்புறங்களிலும் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில்
உள்ள கிராமங்கள், பழங்குடியினர்
வசிக்கும் இடங்களில் சுகாதாரத்துறையினர் நேரடியாக சென்று சிறப்பு முகாம்
ஏற்படுத்தி தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,
தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு,
கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி
உள்ளிட்ட மலை கிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று
சென்றனர்.
சர்க்கார் பூரத்திபதி கிராமத்திற்குள் நுழைந்த அதிகாரிகளை பார்த்த கிராம
மக்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சிலர் தோட்டப்பகுதிகளுக்கு சென்று மறைந்து
கொண்டனர். இளைஞர்கள் மரத்தில் ஏறி கொண்டனர். அவர்களை கீழே வர அதிகாரிகள் பல முறை
கூறியும் அவர்கள் வர முடியாது என கூறிவிட்டனர். ‘‘எங்களுக்கு ஒன்னும் வராது.
தடுப்பூசி எல்லாம் போட முடியாது’’ என அதிகாரிகளுடன் முதியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கல்கொத்திபதியில் 57 பேரும்,
சர்க்கார் பூரத்திபதியில் 90 பேரில் 7 பேர் மட்டுமே
தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி
கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். பின்னர், நீண்ட நேரம் காத்திருந்த அதிகாரிகள் அங்கிருந்து அருகே உள்ள மற்ற பழங்குடி
கிராமங்களிலும் சென்றனர். அங்கும், இதே நிலை தான் நீடித்தது. இதனால் கிராம மக்களுக்கு தடுப்பூசி போட சென்ற
அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்....
காதல் மனைவியை கொன்று கொரோனாவால் இறந்ததாக நாடகம்: கைதான கணவன் ‘பகீர்’
திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் காந்த். சித்தூர் மாவட்டம்
புங்கனூர் அடுத்த ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இருவரும் பேஸ்புக் மூலம்
அறிமுகமாகி காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை
உள்ளது. கடந்த மார்ச் மாதம் காந்த், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு வந்து அங்கேயே வசிக்க
தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு காந்த், தனது குழந்தையுடன் மாமியார்
வீட்டில் சென்றார். அப்போது அவர்களது மாமியார் புவனேஸ்வரி வரவில்லையா?
என கேட்டார்.
அப்போது, ‘உங்கள் மகள்
டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். சடலத்தைக்கூட
கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே இறுதிச்சடங்கு செய்துவிட்டது’ என தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரியின் பெற்றோர் திருப்பதி
போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் காந்த், தனது மனைவியை கொன்று சடலத்தை பெரிய சூட்கேஸில் கொண்டுசென்ற காட்சிகள்
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் காந்திடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் என போலீசார் கூறியதாவது : கடந்த மாதம் 21ம் தேதி காந்த், மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது,
புவனேஸ்வரி நீ வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வா
என கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த காந்த், புவனேஸ்வரியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் சூட்கேசில் சடலத்தை வைத்து அரசு மருத்துவமனை அருகே கொண்டு சென்று
தீ வைத்து எரித்துள்ளார். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் காந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். காந்த் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ₹35 லட்சம் மோசடி செய்து சிறைக்கு ஜாமீனில் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
...
COVID
Delta Variant | உலகம் ஆபத்தான காலகட்டத்தில்
உள்ளது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
டெல்டா வேரியண்ட் தொடர்ந்து மாறுபடுவதால் ஒருங்கிணைந்த கொரோனா தொற்று
நோய்களின் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்
டெட்ரோஸ் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸின் மரபணுவில் டெல்டா பிளஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இது
மக்களிடையே வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த டெல்டா வகையானது குறைந்தது 98 உலக நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும்,
பல நாடுகளில் விரைவாக ஆதிக்கம் செலுத்தும் டெல்டா
போன்ற அதிகம் பரவக்கூடிய கொரோனா நோயின் மாறுபாடுகளில் சிக்கி உலகம் மிகவும்
ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
புதிதாக பரவும் இந்த டெல்டா வேரியண்ட்டை வலுவான கண்காணிப்பு,
ஆரம்பகால கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் போன்ற பொது சுகாதாரம்
மற்றும் சமூக இடைவெளியால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று அவர் எச்சரித்தார்.
முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை பராமரித்தல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் மற்றும் உட்புற பகுதிகளை நன்கு காற்றோட்டமாக
வைத்திருத்தல் ஆகியவை இதற்கு அடிப்படையாகும் எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும் சமூக பொறுப்புடன்
செயல்படுவதே சிறந்த வழியாகும் எனக் கூறினார். வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள்,
அனைத்து நாடுகளிலும் குறைந்தது 10 சதவீத மக்களுக்காவது தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு ஒவ்வொரு நாட்டின்
தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். விரைவில் தாங்கள் அதிக தடுப்பூசி
மையங்களை உருவாக்க உள்ளதாகவும் கூறினார். உலகளாவிய தடுப்பூசி திறனை உயர்த்துவதன்
மூலம் மட்டுமே விரைவில் நாம் இந்த கொடிய தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும்
டெட்ரோஸ் கூறினார்.
தனியார் பள்ளிகளில் கட்டணப் புகார்: திணறும் பெற்றோர்கள் - புகார்
தெரிவிப்பது எப்படி?
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள்
எழுகின்றன.
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணப் புகார்
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது.
ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை
தொடங்கிவிட்டன. அதற்கு முன்னதாகவே, அதாவது மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என ஊரடங்கு தளர்வுகளில் அரசு
அறிவிப்பதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டுவிட்டன. புதிதாக பள்ளியில்
குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், எங்கே இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்,
எவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம்
கூறுகிறதோ, அவ்வளவையும்
கட்டிவிடுகின்றனர். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் பெற்றோர்கள்தான் ஓரளவு
புகார்களை வெளியில் சொல்கின்றனர்.
கல்விக் கட்டண வசூல் பின்னணி என்ன?
கொரோனா பெருந்தொற்று காலம் 2020 மார்ச்சில் தொடங்கியபோது மூடப்பட்ட பள்ளிகள், இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டே கட்டண வசூல் குறித்து புகார்கள்
எழுந்தபோது, கட்டணம் செலுத்த
நிர்ப்பந்திக்ககூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது பள்ளிக் கல்வித் துறை. இதனை
எதிர்த்து, ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்குவது எப்படி? பள்ளியை நடத்துவது எப்படி போன்ற கேள்விகளோடு நீதிமன்றத்திற்கு சென்றனர்
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர். கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தில் 75 சதவீதத்தை 25% என 3 தவணைகளாக வசூலிக்கக் கோரியது தமிழக அரசு. 50% கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்றது பெற்றோர் மாணவர் சங்கம்.
நீதிமன்றமோ 40 சதவீதத்தை
முதலிலும், பள்ளி திறந்த
பின்னர் 35 சதவீதத்தையும்
வசூலிக்க அனுமதித்தது. இந்த உத்தரவை பல பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார்கள்
எழத்தான் செய்தன.
2021-22ல் என்ன நிலை?
கடந்தாண்டு சிக்கல் முடிவடைவதற்குள் அடுத்த கல்வியாண்டும் கொரோனா இரண்டாவது
அலைக்கு இடையில் பிறந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு
பெருந்தொற்று ஆட்டிப்படைத்த நிலையிலும், கட்டண வசூலுக்கான குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் பெற்றோர்களின் கைபேசிகளை நிறைத்துக் கொண்டிருந்தன. ஓரளவு
தொற்று குறையத் தொடங்கியதும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நீதிமன்ற உத்தரவைத்தான் இந்தாண்டும்
பின்பற்ற வேண்டும் எனக் கூறிச் சென்றார். அதற்கு முன்னதாகவே 100%-த்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகவும், முந்தைய ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பல பெற்றோர்கள்
புகார்களை முன்வைத்தனர். விளைவாக பள்ளிக் கல்வித் துறை தரப்பிலிருந்து சில
சுற்றறிக்கைகள் மட்டுமே வெளியாகின. அதிலும் 75% கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும் என பொதுவாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தது. எத்தனை தவணைகள் எனக் கூறப்படவில்லை.
வெளிப்படைத்தன்மையில்லை
75% என்றால், 100% என்ன
தொகை என்றே தெரியாதபோது தான் கட்டுவது 75% தான் என்பது தங்களுக்கு எப்படித் தெரியும் என பல பெற்றோர்கள் கேள்வி
எழுப்புகின்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் 2021-22ஆம் கல்வியாண்டிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா? முந்தைய ஆண்டின் கட்டணம் என்றாலும், அதனை பெற்றோர்கள் எப்படி அறிவது? பள்ளிகள் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும் என்பது அரசின்
வலியுறுத்தலாக இருந்தாலும், அதனை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா? அது பள்ளிக் கல்வித் துறையால் கண்காணிக்கப்படுகிறதா?
போன்ற கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. பதில்
கிடைக்காதது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் கிடைப்பதில்லைதான்.
யாரிடம் புகார் கூறுவது?
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால்,
யாரிடம் புகார் கூறுவது என்பதே தெரியவில்லை
என்கின்றனர் பெற்றோர்கள். அப்படியே தெரிந்த அறிந்தவர்களிடம் கேட்டு முதன்மைக்
கல்வி அலுவலரிடம் புகார் கூறினாலும், மிஞ்சிப்போனால் ஒரு ரெய்ட் நடக்கும், அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்றவை புகார் தெரிவித்தவருக்கே தெரிவில்லை
என்கின்றனர் பெற்றோர்கள். புகார் தெரிவித்தால் ஏதேனும் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தானே பெற்றோர்கள் புகார் தெரிவிக்க
முன்வருவார்கள்? கட்டணம்
வசூலிக்கத் துணியும் பள்ளி நிர்வாகங்களும் அச்சப்படுவர்?
தனியார் பள்ளிகளின் நிலை என்ன?
பெருந்தொற்றுக் காலத்தில் சிக்கல்களை சந்திக்கும் பலதரப்பட்டவர்களில்
தனியார் பள்ளிகளும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி நிர்வாகங்களைவிட அதில்
பணி புரியும் ஆசிரியர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கட்டணம்
வசூலிக்க முடியாத சில தனியார் பள்ளிகள் இந்த பெருந்தொற்று காலத்தில்
மூடப்பட்டிருக்கின்றன. சில தனியார் பள்ளிகள் பல ஆசிரியர்களை வேலையைவிட்டு நீக்கி
இருக்கின்றன. ஊதியத்தை பாதியாக குறைத்திருக்கின்றன.
உண்மையில் கட்டணம் வசூல் செய்யாமல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட
பள்ளிகள் ஒரு புறமிருக்கின்றன. பாடம் எடுப்பது மட்டுமின்றி கட்டண வசூலிலும்
ஆசிரியர்களை ஈடுபடச் செய்யும் சில தனியார் பள்ளிகள், ஆசிரியர்களின் வேலைப் பழுவை இருமடங்காக்கி, ஊதியத்தை பாதியாக்கி இருக்கின்றன. இதனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள்
தங்களுடைய ஆசிரியர் பணியை விடுத்து வேறு துறைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கட்டண நிர்ணயக் குழுவை மேம்படுத்த வேண்டும். அதன் செயல்பாடுகளை
வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் கட்டணம்
இணையதளத்திலோ, வேறு வழிகளிலோ
பெற்றோர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். பெற்றோர்களின் புகார்கள்
விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால்
நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். அங்கீகார ரத்து செய்ய வேண்டி இருக்கும் என்ற
எச்சரிக்கையோடு அந்த நடவடிக்கை நின்றுவிடக் கூடாது. கட்டண நிர்ணயம் என்பதும்
தனியார் பள்ளிகளின் தரப்பு மட்டுமின்றி பெற்றோர்களின் கருத்துக்களுக்கு பிறகு
நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளி சரி இல்லை என்றால் அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டியதுதானே
என்ற வேள்வி எழலாம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது நல்லதுதானே
எனத் தோன்றலாம். ஆனால், அரசுப் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் நகர்வது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க
வேண்டுமே தவிர, கட்டாயத்தின்
அடிப்படையில் இருக்கக்கூடாது.
திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்
அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக
செயல்பட்டு வந்தார்.
முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச்செயலராக இருந்த பழனியப்பன் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக
இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு
ஆதராவாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார்.
அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக
செயல்பட்டு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா
தீவிர அரசயிலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியிலிருந்து
விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இதனால் அமமுக நிர்வாகிகள் பலர் அதிர்ப்தியில் இருந்தனர். சசிகலாவும்
தொடர்ந்து தொலைபேசியில் தொண்டர்களுடன் பேசி வந்தாலும் அரசியலுக்கு மீண்டும்
எப்போது திரும்புவார் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. அதிமுக-விலிருந்து
நீக்கப்படும் நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உள்பட 20 பேர் கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிலையில் அமமுக
பொதுச்செயலார் பழனியப்பன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்துள்ளது டி.டி.வி
தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது
அதிமுக - அமமுக கட்சிகள் இடையே ஏற்படும் மோதல் திமுகவிற்கு சாதகமாக உள்ளது.
சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-வின் ஓட்டுகள் பல அமமுக கட்சியால் பிரிக்கப்பட்டது
என்பது குறிப்பிடதக்கது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும்
என்ற எதிர்பார்ப்பு காரணமாக தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு கோரி
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் அத்யாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும்
நிலையில், பண்டிகை
காலத்தின் போது பொங்கல் பரிசு, போன்றவையும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாது
கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்தோருக்கு
உதவும் வகையில் நிதி உதவியையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் நிவாரணமாக மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட
தேர்தல் அறிக்கையில், நாங்கள் வெற்றி
பெற்றால், ரேஷன்
கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாயும், குடும்பத்
தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட
கொரோனா நிவாரணமாக 2,000 ரூபாய்
வழங்கப்படும் என மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான டோக்கனும் தற்போது
வழங்கப்பட்டு நிவாரண உதவியுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆவின் பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு, பெண்களுக்கு
பேருந்துகளில் இலவச பயணம் போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதால்,
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட
கொரோனா நிவாரணமாக 2,000 ரூபாய்
வழங்கப்படும் என மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான டோக்கனும் தற்போது
வழங்கப்பட்டு நிவாரண உதவியுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆவின் பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில்
இலவச பயணம் போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதால்,
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப நாட்களாக புதிய ரேஷன் கார்டு கோரி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்
குவிந்து வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/
வெப்சைட்டில், ரேஷன் கார்டில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை ஒப்படைக்க / ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய விண்ணப்பிக்கலாம்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: தத்தெடுக்கும் வழிமுறை என்ன?
போலி விளம்பரங்களால் ஏமாறாதீர்கள் – அரசு எச்சரிக்கை
cara.nic.in
என்ற தேசிய தத்தெடுப்பு இணையத்தில் பதிவு செய்து
மூன்று ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு குழந்தை தத்து கொடுக்கப்படும்.
கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க பலரும்
விரும்புகிறார்கள். அவர்கள், போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன
என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கொரோனாவினால் தமிழகத்தில் மட்டும் 92 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். 3409 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்துள்ளனர். இக்குழந்தைகளை
தத்தெடுக்க விரும்புவோர் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தத்தெடுத்தல் விதிமுறைகளை
பின்பற்ற வேண்டும். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல்
வாழும் தம்பதிகளுக்கே தத்து கொடுக்கப்படும். அவர்கள் cara.nic.in
என்ற தேசிய தத்தெடுப்பு இணையத்தில் பதிவு செய்து
மூன்று ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு குழந்தை தத்து கொடுக்கப்படும்.
இதில், 6 வயதுக்கு
அதிகமான சிறுவர் மற்றும் சிறுமியரை தத்தெடுக்கும்போது Foster
Care எனப்படும் ‘தற்காலிக பராமரிப்பு’ என்ற முறை பின்பற்றப்படுகிறது.
பச்சிளம் குழந்தையை தத்தெடுக்கும் நடைமுறையை விட இது எளிதானதும்,
விரைவானதும் ஆகும். குழந்தைகள் இல்லாதவர்கள்
மட்டுமல்லாது ஏற்கனவே குழந்தை உள்ளவர்களும் கூட, 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கலாம்
வருமான வரம்பு எதுவும் இல்லை. தத்தெடுப்பதற்காக கட்டணம் எதுவும் செலுத்த
வேண்டியதில்லை. குழந்தையை பாதுகாப்பாக, நல்ல முறையில் வளர்ப்பதற்கான சூழல் இருப்பதாக அதிகாரிகள்
உறுதிப்படுத்தினாலே போதுமானது.
இது குறித்து சென்னை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் கார்த்திக்
கூறும்போது, “சமூக
வலைத்தளங்களில் விளம்பரங்களைப் பார்த்து, விதிமுறைகளுக்கு மாறாக குழந்தைகளை தத்தெடுப்பது சட்ட விரோதமானது.
கடத்தலுக்கு சமமாகிவிடும். எனவே இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடவோ,
தத்தெடுத்தல் மேற்கொள்ளவோ கூடாது.
அப்படியான விளம்பரங்களை பார்த்தால் அதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்" என்றார்.குழந்தைகளை தத்தெடுத்து
வளர்க்கும் நல்ல எண்ணத்துடன் வரும் பெற்றோருக்கு
தத்தெடுப்பு நடைமுறைகளில் அரசே உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் நிதி மற்றும் காப்பக உதவிகள்
தரப்படுகின்றன. இதனை வரவேற்கும் அதே சமயம், குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பும் முக்கியம் ஆகும். இதுகுறித்து
குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் பேசும்போது, “ ஒரு குழந்தை காப்பகத்தில் இருப்பதை விட குடும்பத்துடன் இருக்கும் போது தான்
முழு கவனமும் அரவணைப்பும் கிடைக்கும். சுனாமி போன்ற பேரிடருக்கு பிறகு மாற்று
பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர். அதே போன்று தற்போதும் குழந்தைகளை தத்தெடுக்க
பெற்றோர்கள் முன்வர வேண்டும் “ என்றார்.
மாற்று பராமரிப்பில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட
மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு
தகவல்களை பெறலாம்.
புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முதல்வர்
மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகள்
தரமான சேவையினைப்பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய
நடவடிக்கைள் குறித்தும் முதலமைச்சர்
அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக்
கிடைக்க வேண்டும், குடும்ப அட்டைகள்
கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட
நடவடிக்கை என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும்
பல்வேறு திட்டங்களான நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள்விநியோகம், சிறப்பு பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளைக் கணினிமயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டைகள் மாற்றம், பல்பொருள்அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல், கொரோனா காலத்தில் அரசின்நலத்திட்டங்களான உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணத்
தொகையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்
நலத்திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள
திட்டங்கள் குறித்தும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
தலைமையில்இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்பொதுமக்களுக்கு நியாய
விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைத்திடவும்,
பொருட்களின் தரத்தினை உறுதி செய்திடவும்,
குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக்
காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும்,
கோவிட் பெருந்தொற்று காலத்தில்கடனுதவி கோரும் சுயஉதவிக்
குழுக்கள், சிறு வணிகர்கள்,
மாற்றுத்திறனாளிகள்,மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட
கூட்டுறவுசங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும்
என்றும்அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல்,
பல துறைகள்மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளை
ஒரே துறையின்கீழ் கொண்டு வருதல், வாடகைக்கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்குச்
சொந்தகட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்,
பெண்பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்,
சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல்,
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர்
இடத்தில்இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதை இணைய வழியில்
கண்காணித்தல், எடைக்குறைவு
போன்றவற்றைக் களைதல், தரமான
சேவையினைப்பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள்
குறித்தும் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை
வழங்கினார்.
தமிழக மக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன்,நகைக்கடன் வழங்குதல், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருட்கள்வழங்குதல் போன்றவற்றை உரிய
காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்தஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
.இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர்
இ. பெரியசாமி ,உணவுத்துறை
அமைச்சர் சக்கரபாணி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக ரேஷன் வெப்சைட் முடக்கம்... காரணம் என்ன?
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் வெப்சைட்
பராமரிப்பு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது.
புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் சேர்ப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட அனைத்து
சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in
என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம்.
ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த தளத்தின் மூலமாகவே தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் புதிதாக
ரேஷன் கார்டு வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து கொண்டே வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!
ஒரே குடும்ப அட்டையில் கூட்டுக் குடும்பமாக பெயர்கள் வைத்திருப்போர்கள்
தனியாக கார்டு கோரியும், புதிதாக திருமணம் செய்தோர்களும், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது இணையதளம்
வாயிலாகவும், இ-சேவை மையங்கள்
மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே குடும்ப அட்டை கோரி
விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக ரேஷன்
கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதனை வழங்கும் பணியை ஆரம்பிக்க அரசு உத்தரவிட்டது..
இந்நிலையில் தமிழக ரேஷன் வெப்சைட் தற்போது பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டுள்ளது.
வேறு ஏதும் சந்தேகங்களுக்கு 1967 என்ற எண் மற்றும் support@tnpds.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 2 முறை உருமாறும்
கொரோனா!
சென்னை : ''தமிழகத்தில்,
'டெல்டா' வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தான் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்,
மாதத்திற்கு இரண்டு முறை உருமாறுவதால்,
அனைத்து வகையான கொரோனாவையும் காண்காணித்து வருகிறோம்,''
என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு
மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை
பிரிவில், செயலர்
ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.சமூக இடைவெளிபின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தினமும் 1.60 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 4,200 என்ற அளவில் தான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.எனவே,
அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகளை தொடர வேண்டுமானால்,
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
சமூக இடைவெளி, கை கழுவுதல்,
முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை,
கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல் கண்காணிப்பு பணியை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக
பிரித்து, தொடர்ந்து
மேற்கொள்கிறோம். சில இயக்கங்கள் அரசு கொரோனா இறப்பை மறைப்பதாக செல்கின்றன;
அப்படிஎதுவும் இல்லை.அரசின் சார்பில் வழங்கப்படும்
இறப்பு சான்றிதழில், இறப்பிற்கான
காரணம் குறிப்பிடப்படுவதில்லை.தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில்,
இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால்,
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள
கட்டளை மையத்தில் திருத்தி கொள்ளலாம்.
வரும் மாதங்களில், பொது மக்கள் மிக கவன மாக இருக்க வேண்டும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள
பகுதிகளில் 1 சதவீத பாதிப்பு
தான் உள்ளது. தஞ்சாவூரில் பொது மக்கள் முக கவசம் அணியாததால்,
தொற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.டெங்கு
காய்ச்சலை ஒழிக்க, மக்கள்
ஒத்துழைப்பு அளித்தனர். அதேபோல், கொரோனா தொற்றையும் ஒழிக்க வேண்டும்.
'டெல்டா பிளஸ்' தொற்று
தமிழகத்தில் 10 பேருக்கு
மட்டுமே, 'டெல்டா பிளஸ்'
தொற்று இருப்பது தெரிய வந்தது. 1,400க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னையில் 90 சதவீதமும்,
தமிழகம் முழுதும் 72 சதவீதமும், 'டெல்டா'
வகை கொரோனா தான் இருப்பது தெரிய
வந்துள்ளது.தமிழகத்தில், டெல்டா வகை கொரோனா, ஏப்ரல், மே மாதங்களில்
வந்து விட்டது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறும்.அதனால், டெல்டா பிளசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காமல்,
அனைத்து வகையான உருமாற்றம் அடையும் கொரோனாவும்
கண்காணிக்கப்படுகிறது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், ஏப்., மே மாதங்களில்
மட்டும் இல்லாமல்,மாதந்தோறும் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை
கண்டறிந்து கண்காணிக்கிறோம்.தற்போதைய சூழலில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 3 சதவீதம் அளவில் உள்ளது. ஒருசில மாவட்டங்களில் மட்டும்,
5 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'இனி தட்டுப்பாடு இருக்காது'
''தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது,'' என, மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.கடலுார் மாவட்டம்,
பெண்ணாடத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டுதல்படி கர்ப்பிணியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற
அறிவிப்பு நேற்று வெளியானது. அதனடிப்படையில் தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு கொரோனா
தடுப்பூசி போடும் பணி பெண்ணாடத்தில் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இனி தொடர்ச்சியாக
கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கும். தமிழகத்தில் கொரோனா தொற்று
வெகுவாக குறைந்து வருகிறது. தொற்று குறைந்தாலும் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள
வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன், தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது. இனி தட்டுப்பாடு இருக்காது. சிதம்பரம்
ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியின் கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக,
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர் கல்வித்துறை
உள்ளிட்ட துறை ரீதியிலான அதிகாரிகளிடம்ஆலோசித்து, அறிவிப்புகள்விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்ப்பிணியருக்கு தடுப்பூசி
கொரோனா தொற்று பரவலை தடுக்க, கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கியது. சென்னை,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்,
கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல்
நாளில், கர்ப்பிணியர்
சிலர் தயக்கம் காட்டி னாலும், டாக்டர்கள் தடுப்பூசியின் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். அதனால், 13 கர்ப்பிணியர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.இதுகுறித்து,
மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் கூறியதாவது:கொரோனா
தடுப்பூசியை கருத்தரித்த அனைத்து கர்ப்பிணியரும் போட்டு கொள்ளலாம்.
தடுப்பூசி போடுவதற்கு முன், அனைவருக்கும் ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு போன்றவை பரிசோதிக்கப்படுகிறது.
பாதிப்பு அதிகமாக இருந்தால், அவற்றை குறைப்பதற்கான மருந்து அளிக்கப்பட்டு, அதன்பின் தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு, ரத்த அழுத்தம்
போன்ற இணை நோய் உள்ளவர்கள், முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.இவ்வாறு அவர்
கூறினார்.
குழந்தையை விற்ற இதயம் அறக்கட்டளை சிவக்குமார், மதர்ஷா கைது
மதுரை :மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி இரு குழந்தைகளை கொரோனாவால்
இறந்ததாக கூறி பெற்றோரை நம்ப வைத்து ரூ.2 லட்சத்திற்கு விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இதயம் அறக்கட்டளை நிறுவனர்
சிவக்குமார் 40, உதவியாளர் மதர்ஷா
36,ஆகியோர் நேற்று மாலை கேரளாவிற்கு
காரில் தப்பிச் செல்லும்போது தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரத்தில் கைது
செய்யப்பட்டனர்.மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி
வந்தவர் சிவக் குமார்.
இங்கிருந்த மேலுார் சேக்கிப்பட்டி ஐஸ்வர்யாவின் ஒரு வயது மகன் மாணிக்கம்,
பெங்களூரு ஸ்ரீதேவியின் 2 வயது மகள் தனத்திற்கு கொரோனா இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்வது போல் நடித்து கடத்திச்சென்று ரூ.2 லட்சத்திற்கு
விற்றார். இதற்கு உடந்தையாக உதவியாளர் மதர்ஷா இருந்தார். குழந்தைகள் மீட்கப்பட்ட
நிலையில் சிவக்குமாரும் மதர்ஷாவும் தலைமறைவாயினர்.
ஜூலை 1ல் இல்ல
ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, குழந்தைகளை சட்டவிரோதமாக தத்து எடுத்த இரு தம்பதியினர்,
புரோக்கர்கள் ராஜா, செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சிவக்குமாரையும்,
மதர்ஷாவையும் பிடிக்க இரு தனிப்படைகள்
அமைக்கப்பட்டன.
அவர்கள் சிவக்குமாரின் பச்சை நிற 'நிசான்' காரில் (டி.என்.01 ஏ.எஸ். 3810) சுற்றுவதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும்
தெரிவிக்கப் பட்டது. நேற்று மாலை இக்காரில் கேரளாவிற்கு சென்று பதுங்க திட்டமிட்டு
இருவரும் போடி மெட்டு செக்போஸ்ட் வழியாக சென்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது
செய்தனர். போடி தாலுகா ஸ்டேஷனில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு
மதுரை அழைத்து வரப்பட்டனர். இன்று மாலை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி... அரசு போட்டிருக்கும்
கன்டிஷன்களை தெரிஞ்சிக்கோங்க...!
பழனி முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள்
அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா 2வது அலையைக்
கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில்
பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் அனைவரும் பெரிதும்
எதிர்பார்த்திருந்த படியே கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து பழனி முருகன் கோயிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள்
அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள
செய்திக்குறிப்பின் படி,
தமிழக முதலமைச்சரின்செய்தி
குறிப்பின் படி பழநி, அருள்மிகு
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 05.07.2021 முதல் காலை 6.00 மணிமுதல்
இரவு 8.00 மணி வரை மட்டுமே
அனுமதிக்கப்பட உள்ளனர். 05.07.2021ம் தேதி முதல் பக்தர்களின் நலன் கருதி இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா
நினைவரங்கத்தின் வழியாக சென்று படிப்பாதையை அடைந்து தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
1.
பக்தர்கள் செல்லும் வழியில் தெர்மல் ஸ்கேனர்
சோதனைக்குட்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்.
2.
05.07.2021ம் தேதி முதல் திருஆவினன்குடி
திருக்கோயிலிலும் ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய
அனுமதிக்கப்படுவார்கள்.
3.
சளி, இருமல், காய்ச்சல்
உள்ளவர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
4.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர் அனைவரும்
கண்டிப்பாக முகக்கவசம்
அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
5. இணைய வழி (Online)
முன் பதிவு அனுமதி சீட்டு உள்ள நபர்கள் மட்டுமே
மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இணைய வழி பதிவு இல்லாதவர்கள் நேரில் வந்தால் இணையவழி பதிவு செய்தவர்கள் வராத
பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
6.
திருக்கோயிலின் மலைக்கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
7.
இத்திருக்கோயிலின் இணையதள முகவரி www.palanimurugan.hrce.tn.gov.in
என்ற இணையதளத்தை தேர்வு செய்து அதில் தரிசன முன்பதிவு
என்பதை கிளிக் செய்து திருக்கோயில் அமைந்துள்ள மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தை
தேர்ந்தெடுத்து திரையில் தோன்றும் இத்திருக்கோயிலுக்கான தரிசன முன்பதிவு உள்ளே
சென்று இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் தங்களுக்கு தேவையான தேதியில் முன்பதிவு
செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
*🔵
நீண்ட கால ஆர்.எஸ்.எஸ். அனுபவம்- உத்தரகாண்ட் மாநில 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று பதவியேற்பு.*
_டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி (வயது 45) இன்று மாலை பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா,
புஷ்கர்ர்சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து
வைக்கிறார்._
*🔵
இருக்கும்போது செய்தேன்.. இப்ப என்கிட்ட காசு இல்லை..
நடிப்பை தொடங்கினால்தான் எல்லாம்.. கருணாஸ் பளீச்.*
_சென்னை: பதவியிலிருந்த போது நிறைய செய்தேன். ஆனால் இப்போது என்னிடம் பணம்
இல்லாததால் கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்க முடியவில்லை என
முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்._
0 Response to "04.07.2021 ஒட்டுமொத்த முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "
Post a Comment