கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு.*
*🌏♨️Medical Admission-ல் 10.5% இட ஒதுக்கீடு
நடப்பு ஆண்டிலேயே அமலாக வாய்ப்பு.*
*🌏♨️625 வன்னிய மாணவர்கள் MBBS, BDS படிப்புகளில்
சேர வாய்ப்பு.*
*💯% கொரோனா 3வது அலையின் உச்சம்
அக்டோபர் மாதங்களில் இருக்கலாம்: ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை*
*💯% தமிழகம் முழுவதும் நாளை பஸ்
போக்குவரத்து - கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கட்டுப்பாடு நீங்கியது*
*💯% தனியார் பள்ளிகளில் இலவச மாணவர்
சேர்க்கை: ஆன்லைனில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்*
*💯% பிலிப்பைன்ஸில் 85 பேருடன் சென்ற
ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து விபத்து
: 15 பேர்
உயிருடன் மீட்பு*
*💯1.5 டன் ஆவின்
இனிப்புகளை இலவசமாக வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக ராஜேந்திர பாலாஜி மீது
பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு*
♈🇳🇪🌴இந்தியாவில்
ஒரே நாளில் கொரோனாவால் 955 பேர் உயிரிழப்பு
♈🇳🇪🌴கிருஷ்ணா
நதி நீர் பயன்பாட்டு வரிசையில் புலிச்சிந்தலா திட்டத்தில் ஆந்திரா மற்றும்
தெலுங்கானா போலீசார் நிறுத்தப்பட்டனர்
"13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணா டெல்டா அயாகட்டை
உறுதிப்படுத்த திட்டம் கட்டப்பட்டது. மாநில மறுசீரமைப்பின் பின்னர், தெலுங்கானாவின் கீழ்
ஏபி & பவர்ஹவுஸின்
கீழ் அணை பகுதி" என்று திட்ட பொறியாளர் கூறுகிறார்
♈🇳🇪🌴மதுரை
மாநகராட்சி மூலம் ஆன்லைனில் பிறப்புசான்றிதழ் வழங்கப்படும் நிலையில் சான்றிதழ்
பெற்றுதருவதாக கூறும் முகவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் வந்தால் கடும் நடவடிக்கை” - மதுரை மாநகராட்சி
ஆணையர்
♈🇳🇪🌴வரலாற்றில்
சிறந்த ஆட்சியாளராக இடம்பெற விரும்பும் செயல்திறன் மிக்க தலைவர் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
- தி எகனாமிஸ்ட்
ஆங்கில ஏடு புகழாரம்
♈🇳🇪🌴தமிழகத்தில்
10
மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
♈🇳🇪🌴ஆவின்
நிறுவனத்திற்கு ஏற்பட்டு வரும் கூடுதல் செலவினத்தை தடுத்து, பால்
உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாக, சி மற்றும் எப்
ஏஜெண்ட் முறை ரத்து செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
♈🇳🇪🌴பிரதமரை
சந்தித்த பாஜகவினர் மூடிக்கிடக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை
திறப்பது,காவிரி
மேகாதாதுவில் கர்நாடகம் அணைகட்டுவது பற்றி
பேசியிருக்கலாம் jothimani
♈🇳🇪🌴பெட்ரோல், டீசல் விலை உயர்வை
கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல்
பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி
வருகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்
காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ
சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
♈🇳🇪🌴மதுரை
எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை
இணையமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே உறுதி
♈🇳🇪🌴ராஜேந்திர
பாலாஜி வீட்டுக்கு
1.5 டன் ஸ்வீட்
பார்சல்" ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது...!
அதற்கான ஆதாரம் உள்ளது..!விரைவில் நடவடிக்கை
எடுக்கப்படும். - அமைச்சர் நாசர்
♈🇳🇪🌴இந்த வார
சிறந்த காவலர்
21.6.21-27.6.21
திரு. ஷக்கீர், வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை இரவு
ரோந்து பணியின்போது 2 மணிக்கு மீட்டுள்ளார்.
Cop of the week
Mr. Shakeer,rescued girl child in wee hours during his night beat.
congratulations Bouquet. Chengalpattu District Police
*🌎💢♨️ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை
கடற்படை விரட்டியடித்தது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை
கடற்படை அட்டகாசம் செய்துள்ளனர். இனி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை
விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.*✳️✳️
*🌎💢♨️சென்னை: பள்ளிக்
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும்
முடிவெடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள்
முழுமையாக கிடைக்காத நிலையில், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.
மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டை விதித்து கொள்ள வேண்டும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.*✳️✳️
*🌎💢♨️சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பொழிவு
ஏற்பட்டுள்ளது. பேரையூர், வால்பாறை, சின்னக்கல்லாறு, திருக்கோவிலூர் தலா 6 செ.மீ., தேவகோட்டை, நெய்வேலியில் 3 செ.மீ. மழை பதிவாகி
உள்ளது*✳️✳️.
*🌎💢♨️மதுரை: மதுரையில்
பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர்
காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு
காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை
வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது.*✳️✳️
*🌎💢♨️டெல்லி: ரஃபேல்
விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு
மறுப்பது ஏன்?
என்று
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.பி.சி. விசாரணையை மோடி
அரசு சந்திக்க மறுப்பதற்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி ராகுல்காந்தி விமர்சனம்
செய்துள்ளார்*✳️✳️
*🌎💢♨️சென்னை: காற்றின்
திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்
இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி
நேரத்தில் கோவை,
நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது*✳️✳️
*🔷🔶ஜூலை 6-ம் தேதி - முதல்வர்
ஸ்டாலின் அறிவிப்பு*
*✍️பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*
*✍️அனைத்து பத்திரிக்கை
மற்றும் ஊடகவியலாளர்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என
கூறியுள்ளார்.*
*🔷🔶கொடைக்கானல்
செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தளங்களை நாளை திறக்க ஏற்பாடு*
*✍️திண்டுக்கல்
மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தளங்களை
நாளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.*
*✍️கொடைக்கானல்
பிரயண்ட் பூங்கா, செட்யார் பூங்கா, ரோஜா பூங்காவை திறக்க தொட்டக்கலை துறையினர்
ஏற்பாடு செய்து வருகின்றனர்.*
*🔷🔶இன்னும் 4 மாதங்கள்தான்
டைம்.. கொரோனா 3ஆம் அலை
நிச்சயம் ஏற்படும்.. வல்லுநர் குழுவின் புதிய வார்னிங்.*
*✍️டெல்லி: இந்தியாவில்
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் வரும்
அக்டோபர்- நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின்
வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.*
*நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி சார்பில்
தீர்மானம் நிறைவேற்றம்*
*நீட், சிஏஏ போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி நடிகர்
சூர்யாவுக்கு எதிராக தீர்மானம்* *#surya #BJP #Actorsurya*
*🔷🔶ஒரு சிறந்த
ஆட்சியாளராகவரலாற்றில் இடம்பெற விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்திறன்
மிக்க தலைவர்” என்று புகழ்பெற்ற “தி எகனாமிஸ்ட்” ஆங்கில ஏடு, “மீட் திராவிடியன்
ஸ்டாலின்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக்
கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளது.*
*✍️‘தி எகானமிஸ்ட் -
செய்திகளையும் கருத்துரைகளையும் வழங்குவதில் உலகின் தலை சிறந்த இதழ்களுள் ஒன்றாக
விளங்குகிறது'
- இப்படிச் சொல்கிறது பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம். அரசியல், சமகால நிகழ்வுகள், வணிகம், தொழில்நுட்பம்
என்பவை ‘எகானமிஸ்ட்' வார இதழின் பேசுபொருட்கள். அவை பரப்பிலும், தரத்திலும் சர்வதேச
அளவீடுகளைக் கொண்டவை.*
*✍️லண்டனில்
தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ‘எகானமிஸ்ட்' இதழுக்கு -
அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா என, எங்கெணும்
ஆசிரியர்கள் உள்ளனர். 177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அச்சிதழ், இப்போது இணையப்
பத்திரிகையாகவும் - குரல் பத்திரிகையாகவும் வெளிவருகிறது. 2019-ல் இதழின் சந்தாதாரர்கள்
எண்ணிக்கை, 16 லட்சத்தைத்
தாண்டியிருந்தது.!*
*✍️‘தி எகானமிஸ்ட்' இதழுக்குவேறொரு
சிறப்பும் உண்டு. இதன் கட்டுரைகள் அனைத்தும் அதன் ஆசிரியர் குழுவினரால்தான்
எழுதப்படும். ஆனால் எழுதிய வரின் பெயர் இராது. ஒவ்வொரு கட்டுரையின்
உண்மைத்தன்மையும் பரிசோதிக்கப்படும். ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டிருக்கும்.
இதழுக்கான பிரத்யேக மொழி நடைபயின்று வரும்.*
*✍️வடிவத்தின் தரத்தில்
சிறப்புக்கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு கட்டுரையின் நடையும், சொல் முறையும்
வெவ்வேறு விதமாக இருக்கும். முந்தைய வாரம் உலகம் முழுவதிலும் நடந்த செய்திகள், அடுத்தவார இதழில்
விமர்சனப் பார்வையோடு வெளியாகும். இப்படியான ஒரு சர்வதேச இதழில் ஒரு
முழுப்பக்கத்தையும் தமிழ்நாடு நிறைத்திருக்கிறது. தமிழ்நாட்டை அங்கே கொண்டு போய்
நிறுத்தியிருப்பவர், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அரசும்
என்றால், அது
மிகையல்ல !*
*✍️இத்தகைய
பெருமைக்குரிய ஒரு, உலகப் புகழ்பெற்ற இதழில், தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்தும் - பாராட்டியும் ஒரு கட்டுரை எழுதப்படுகிறது
எனின், அது
சிறப்புக்குரிய ஒன்று அல்லவோ ! “South Indian politics - Meet the Dravidian Stalin” எனும்
தலைப்பில் அவ்விதழ் தீட்டியுள்ள அக்கட்டுரையின் சில பகுதிகளின் தமிழாக்கம் இங்கே
வெளியிடப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் தலைவர் வழங்காத செயல்திறனை வழங்கிடும்
தமிழ்நாட்டின் தலைவர்’ என்ற தலைப்புடன் ‘தி
எகானமிஸ்ட்’ ஆங்கில ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை (ஜூலை
3 - 2021) வெளியிட்டுள்ளது.*
*✍️அதன் சில பகுதிகளின்
தமிழாக்கம் வருமாறு:- மு.க.ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சி அரசியல் செய்வதை விட, பட்டறிவின்
அடிப்படையில்,
பொருத்தமான
முறையில் சிக்கல்களை அணுகுகிறார். தமிழக அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவானாக
விளங்கியவர் கலைஞர்!*
*✍️மு.க.ஸ்டாலின்
அவர்களின் தந்தையான கலைஞர் அவர்கள் தமிழக அரசியலில், மிகப்பெரும்
ஜாம்பவான் ஆக விளங்கியவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக
இருந்து ஆட்சி செய்தவர். தற்போதைய முதலமைச்சர் (ஸ்டாலின்) பிறந்த சில நாட்களிலேயே, சோவியத் தலைவர்
இறந்ததாக அறிவிப்பு வெளியானது.*
*✍️அந்தத் தலைவருக்கு
மரியாதை தரும் பொருட்டு அந்த சோவியத் தலைவரின் பெயரையே தமது மகனுக்கு சூட்டினார்
கலைஞர். அதுதான் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெருமையாகவும் இருக்கிறது. புதியதாக
பொருளாதாரக்குழு ஒன்றை துவக்கி, அதில் வளர்ச்சித் திட்டங்களுக்காக நோபல் பரிசு பெற்ற
எஸ்தர்டுப்லோவை ஒரு உறுப்பினராக அமர்த்தியுள்ளார்.*
*✍️இந்தியாவின்
முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் ரிசர்வ்
வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம்ராஜன் ஆகிய இருவரும் மற்ற உறுப்பினர்களாகவும்
(இவர்கள் இருவருமே பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களாவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.*
*✍️முன்னாள் ஒன்றிய
அரசின் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன் மற்றும் நலத்திட்டங்களுக்கான பொருளாதார
வல்லுநர் ஜியான் டிரேஸே ஆகிய இருவரும் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக
சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மோடியின் இடையூறு தரும் கொள்கைகளில் மாற்றுக்
கருத்து கொண்டவர்களாவர். இந்த ஐவர் கொண்ட குழுக்களை அமைத்த தன் மூலம், பொதுநலன் சார்ந்த
பிரதமரின் கருத்துக்களுக்கும், ஸ்டாலின் கருத்துக்களுக்கும் உள்ள வேறுபாட்டை அது
வெளிப்படையாக எடுத்துரைக்கிறது.*
*✍️தனது நிலையை
உறுதிப்படுத்திக் கொள்வதில் ஸ்டாலின் அவர்கள், மேற்குவங்கம்
மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி மற்றும் பினராயி விஜயன்
ஆகியோரைப்போல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார். பாரதீய ஜனதாக் கட்சி
(பா.ஜ.க)யின் மோடி அவர்களுக்கு அதிகாரப்பரவலாக்கும் எதிர்க் கட்சிகளின் முகமாக
அவர் திகழ்கிறார்.*
*✍️பலவீனமான காங்கிரஸ்
கட்சியிலிருந்து எந்த உந்துதல் உணர்வும் ஏற்படாத நிலையில், ஏறக்குறைய நிச்சயமாக, அடுத்து வரும் 2024 பொதுத்தேர்தலில், பிரதமரை எதிர்த்து
நிற்பது என்பது,
மாநிலங்களில்
வலிமையாக விளங்கும் தலைவர்களின் ஒரு வகையான கூட்டணியின் மீதே விழுந்துள்ளது.*
*✍️இளம் தலைவரான
மு.க.ஸ்டாலின் வலிமை வாய்ந்த நற்பெயர் பெற்றவராகத் திகழ்கிறார்!*
*✍️சக்திவாய்ந்த
புகழ்பெற்ற தந்தையைப் பெற்றிருந்த ஒரு இளம் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் வலிமை
வாய்ந்த நற்பெயர் பெற்றவராகத் திகழ்கிறார். 1975-77 ஆண்டுகளில்
பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி ஜனநாயகத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து
விட்டு ஸ்டாலின் அவர்கள் உள்பட பெரும்பாலான எதிர்க் கட்சியினரைச் சிறையில்
அடைத்தார்.
சிறையில் மு.க.ஸ்டாலின் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.*
*✍️அவருடன் சிறையில்
இருந்த தோழர்களில் ஒருவர் இறந்து விட்டார். தமிழ்நாட்டினுடைய செயல்திறன் மிக்க
தலைவராகத் தம்மை நிரூபித்து வருகிறார் மு.க. ஸ்டாலின். அவர் செயல் மனப்பான்மை
கொண்ட இயல்புடனதோன்றி தனது அரசியலில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.*
*✍️இந்தியப் பொருளாதாரம்
1990ஆம்
ஆண்டுகளில் மேம்பாடைய தொடங்கியபோது, சென்னையின் வணிக சமுதாயத்துடன் நட்பு செய்து கொண்டார்.
இறுதியாக கலைஞர், அவரை மாநிலத்தின் தலைநகராம் சென்னை நகரின் மேயராக ஆக்கினார்.
வெள்ளை அரைக்கைச் சட்டையும் வேட்டியும் அணிந்து கொண்டு, தமக்கென
பொதுமக்களிடத்தில் ஓர் ஆக்கபூர்வமான எண்ணப் பதிவை, கருத்துருவை
உருவாக்கிடத் தொடங்கினார். எனினும் மிகுந்த மரியாதையுடன் தம் தந்தைக்கு
அடங்கியவராகவே இருந்தார்.*
*✍️2016 ஆம் ஆண்டு
அ.தி.மு.க.வின் தலைவர் இறந்தபின்பு பா.ஜ.க.வின் உதவியுடன் அ.தி.மு.க சில ஆண்டுகள்
பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் அதிகாரத்தில் உயர்ந்த
பா.ஜ.க தமிழ் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு பொதுத்
தேர்தலில் மோடிக்கு வட இந்திய மாநிலங்களில் வெறுப்பு அல்லது வரவேற்பு இருந்தபொழுது
தமிழ்நாட்டில் அவருக்கு 2.2 சதவிகித ஆதரவே இருந்தது.*
*✍️அதுவே
அ.தி.மு.க.விற்கு பெரும் தோல்வியைக் கொடுத்தது. மு.க.ஸ்டாலின் அவர்களின் தி.மு.க., அண்மையில் நடைபெற்ற
மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. “மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு
தலைவர், சொற்பொழிவாளர், கொள்கையாளர் எனும்
வகைகளில் தனது எல்லைகளை நன் குணர்ந்தவராக, ஒரு சிறந்த
ஆட்சியாளர் என வரலாற்றில் இடம்பெற விரும்புகிறவராக அவர் காணப்படுகிறார்.’’-என வரலாற்று
அறிஞர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி கூறுகிறார்.*
*✍️அவர்
(மு.க.ஸ்டாலின்), கோவிட்-19 குழுவில், தேர்தலில் தோல்வியுற்ற முந்தைய அரசின் நல்வாழ்வுத்துறை
அமைச்சரை இடம்பெறச் செய்ததன் மூலம் அவர் பயன்தரும் செயல் நாட்டமுடையவராகவும்
இருக்கிறார் என்பதும் தெரிகிறது. தமிழ் மக்களை நன்றி செலுத்தக்கூடியவர்களாக
ஆக்கியுள்ளது!*
*✍️இந்தப் பெருந்தொற்று, நாட்டின் பிற
பகுதிகளோடு ஒப்பிடும் அளவில் மிக வலிமையான மக்கள் நலவாழ்வு உட்கட்டமைப்பு
வசதிகளைப் பெற்றுள்ளமைக்காக தமிழ்மக்களை நன்றி செலுத்தக் கூடியவர்களாக
ஆக்கியுள்ளது. இதுநாட்டின் பிற பகுதிகளிலிருந்து இம்மாநிலம் (தமிழ்நாடு) தன்னை
வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். இவ்வாறு ‘தி எகானமிஸ்ட்’ தனது செய்திக்
கட்டுரையில் தெரிவித்துள்ளது.*
*🔷🔶சென்னை:
பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும்
முடிவெடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.*
*✍️தடுப்பூசிகள்
முழுமையாக கிடைக்காத நிலையில், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.
மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டை விதித்து கொள்ள வேண்டும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.*
பல்வேறு
மாவட்டங்களில் நடந்தவை*
*✍🏻இராமநாதபுரம்*
ராமேஸ்வரத்தில்
இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை
விரட்டியடித்தது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை கடற்படை
அட்டகாசம் செய்துள்ளனர். இனி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை
விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
*✍🏻மதுரையில்*
பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர்
காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு
காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை
வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது.
*✍🏻சென்னையில்*
தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட முக்கிய
வணிக பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக போலீசாரை நியமித்து
கண்காணிக்க முடிவு
*✍🏻மதுரை*
நாளை
முதல் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்ற நிலையில், மதுரை அழகர்கோயிலில்
பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி, புனித நீராடத் தடை!
*✍🏻சேலம்*
கல்ராயன் மலை பகுதியில் 3,000 லிட்டர் சாராய ஊரல்கள் கண்டுபிடித்து அழிப்பு; தனிப்படை போலீசார்
அதிரடி.
*✍🏻மதுரையில்*
ஆதரவற்ற தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயந்திபுரத்தில் சாலையோரம் வசித்த பெண்ணிடம்
இருந்து குழந்தையை வாங்கியவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*✍🏻திண்டுக்கல்
மாவட்டம்*
கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா
தளங்களை நாளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பிரயண்ட் பூங்கா, செட்யார் பூங்கா, ரோஜா பூங்காவை
திறக்க தோட்டக்கலை துறையினர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்
*✍🏻திருவாரூர்*
திருத்துறைப்பூண்டி அருகே மது பாட்டில்களை உடலில் கட்டி கடத்த முயன்ற இருவர் கைது; 3 இருசக்கர வாகனங்கள்
பறிமுதல்
*✍🏻மதுரை*
நடிகை கொடுத்த பாலியல் புகாரில் முன்னாள்
அமைச்சர் மணிகண்டன் மீது சென்னையில்
விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,
இன்று மதுரை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று
சென்னை போலீஸ் விசாரணை
*✍🏻திண்டுக்கல்
மாவட்டம்* குஜிலியம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஜிலியம்பாறையில் மது
பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 3 பேரை எஸ்பி தனிப்படையினர் கைது செய்து குஜிலியம்பாறை
காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மது
பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
*🔵 மீள்கிறது
தமிழ்நாடு.. 4ஆயிரத்திற்கும்
கீழ் சென்ற பாதிப்பு..3867 பேர் மட்டுமே பாதிப்பு.. 72 பேர் பலி!.*
_சென்னை:
தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்கள் கடந்த 2 வாரமாக வேகமாக
குறைந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும்
கீழ் சென்றது._
*🔵 குடும்பத்
தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம்.. ரேஷன் கார்டில்... இந்த" குறியீடுகள் மட்டும்தானா?*
_தமிழக அரசு
அறிவித்துள்ள 1000 ரூ திட்டம்
NPHH-S,
NPHH-NC என்ற குறியீடு போட்டுள்ள கார்டுகளுக்கு கிடைக்காது என தகவல்கள்
வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.
கிடைத்தவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளன. எனினும் தமிழக அரசு
அறிவிக்கும் வரை எந்த தகவல்களையும் நம்பாமல் காத்திருப்பதே நல்லதாகும்._
*🔷🔶கரூர்*
அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பரமத்தி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரான
அதிமுக நிர்வாகி வசந்தகுமார் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணையில்
ஈடுபடுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸ்
வசந்தகுமார் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்.
*🔷🔶கோவை*
️மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்திக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட
முயன்ற மூவர் கைது.
*🔷🔶மதுரையில்*
தனியார் அறக்கட்டளையிலிருந்து குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம்; கைது
செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு தொடக்கம்
*🔷🔶மதுரை
மாவட்டம்* வரிச்சூர் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துண்டால்
சுற்றப்பட்ட நிலையில் சாலையோரத்தில் மீட்பு
*🔷🔶விழுப்புரம்
மாவட்டம்* திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மரக்காணம், ஒலக்கூர், பிரம்மதேசம், மயிலம் உள்ளிட்ட
பகுதிகளில் கனமழை
*🔷🔶கன்னியாகுமரி
மாவட்டம்* நாளை முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட உள்ள நிலையில்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்கள், மசூதிகள் மற்றும்
கிறிஸ்தவ தேவாலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*🔷🔶திண்டுக்கல்*
திருவள்ளூர் சாலையில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில்
மின்கசிவு காரணமாக தீ விபத்து - தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்!
*🔷🔶திண்டுக்கல்
மாவட்டம்* வத்தலகுண்டு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய
சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
*🔷🔶கோவை*
சிறுமுகை வனச்சரகம் இலுப்பநத்தம் கிராமத்தில்
நாட்டு வெடியை பயன்படுத்தி, காட்டு பன்றியை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது
அவர்களிடமிருந்து 17 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்.
*🔷🔶தூத்துக்குடி
மாவட்டம்* கோவில்பட்டி அருகே கயத்தாறில் இடி மின்னலுக்கு 3 பசு மாடுகள்
உயிரிழப்பு
*🔷🔶தூத்துக்குடி*
மாநகரத்திற்குள் பல்வேறு வழித்தடத்தில் பேருந்து வசதி வேண்டி மாவட்ட மதிமுக
சாா்பாக அமைச்சர் கீதாஜீவனிடம் கோாிக்கை மனு
*🔵 இதுதான் முக்கியம்\".. மோடியுடன் 4 பாஜக எம்எல்ஏக்கள்
மீட்.. மேலிடம் அனுப்பிய சிறப்பு மெசேஜ்?*
_டெல்லியில் பிரதமர்
மோடியை தமிழ்நாட்டை சேர்ந்த 4 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்த நிலையில், தமிழ்நாடு பாஜக
நிர்வாகிகள் ஏக குஷியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன._
*🔵 ஒரே நாளில் 9000+ பாதிப்பு..
மகாராஷ்டிராவில் மீண்டும் உயரும் கொரோனா கேஸ்கள்.. 3ம் அலை தொடக்கமா?*
_மும்பை:
மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன. இந்தியாவில் இரண்டாம்
அலை கொரோனா பாதிப்பு முடிவிற்கு வந்துள்ள நிலையில், எப்போது
வேண்டுமானாலும் 3ம் அலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா
மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க்
போர்ஸ் எச்சரித்தது._
0 Response to "05.07.2021 முக்கிய செய்திகள் "
Post a Comment