
பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அவர்களின், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மற்றும், பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தேர்ச்சி சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில்,
10ம்
வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழை, அடுத்த வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. சான்றிதழ் வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்
என,
பள்ளி
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Response to "10ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் :அடுத்த வாரம் வழங்க திட்டம்"
Post a Comment