13.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

13.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

13.07.2021 முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

 


*
🔷🔶சூலை - 13:*
*கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள்.*
 
*🏵️"நிறம் ஒரு ஒப்பீடுதான், ஆப்பிரிக்காவில இருந்தால் நான் தான் அங்கு சிவப்பு"*
 
*🏵️"உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை, ஊரை விட்டு போறதும் சாவுதான்"*
 
*🏵️"பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம், விலைக்கு வாங்க முடியாது"*
 
*🏵️"சிறகிருந்தால் போதும்,*
*சிறியதுதான் வானம்"*
 
*🏵️"உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம். மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிடுறான்"*
 
*🏵️"ஆடம்பர அவசரத்தில் புல்லாங்குழலை பொன்னில் செய்துவிடாதீர்கள், அது மூங்கிலாகவே இருக்கட்டும்"*
 
*🏵️"நூறு வருசம் எதுக்கு இருக்கனும்? ஒரு மனுசன் சொந்தமா ஒன்னுக்கு போறவரைக்கும்தான் இருக்கனும். என் கையைத் தூக்கிவிட இன்னொரு கை வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன? போனா என்ன?"*
 
*🏵️"வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான்"*
 
*🏵️"இந்தப் பூவுலகிற்கு பிறந்து வருவதற்கு ஒரே வழிதான். ஆனால் அதை விட்டுப் போவதற்குத்தான் பல வழிகள்"*
 
*-வைரமுத்து*
 
 
*🌎💢♨டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்துள்ளார். பெங்களூருவில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்*✳️✳️
 
*🌎💢♨சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.79 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 3-வது அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என சென்னையில் அவர் பேட்டி அளித்துள்ளார்*✳️✳️
 
*🌎💢♨மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 252 புள்ளிகள் உயர்ந்து 52,624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 15,760 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.*✳️✳️
 
*🌎💢♨ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய 112 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ உள்ளிட்ட 112 பேர் மாற்றம் செய்யப்பட்டனர்.*✳️✳️
 
*🌎💢♨வாஷிங்டன்: கோவாக்சின் தொடர்பான ஆவணங்கள் உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.*✳️✳️
 
*🌎💢♨பெய்ஜிங்: சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் தவித்து வருகின்றனர்*✳️✳️
 
*🌎💢♨சென்னை: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா 2-வது வழக்கில் கைதானார். 2-வது வழக்கில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.*✳️✳️
 
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்;
முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் !
 
 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
 
 
#AnbilMaheshPoyyamozhi #schoolsreopening #TNGovt
 
 
 *🟣🟣தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை; சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
 
 
 
*🟣🟣அதிக தேவை இருக்கும் நிலையில், குறைவான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்குவதால் தட்டுப்பாடு நிலவுகிறது; கோவை, ஈரோட்டில் நள்ளிரவு முதலே தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
 
 
*🟣🟣குஜராத்தில் 1000 பேருக்கு 533 தடுப்பூசிகள் என்ற கணக்கில் வழங்கப்படும் போது, தமிழ்நாட்டில் 302 தடுப்பூசிகளே வழங்கப்படுகிறது - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
 
 
*🟣🟣நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலம்*
 
நெல்லை: நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வாடகை கார் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
*🟣🟣புதுச்சேரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சிறந்த அதிகாரி*
 
புதுச்சேரி: புதுச்சேரி குடிசைமாற்று வாரிய ஆய்வாளர் மணிவண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் சான்றிதழ்களை சரிபார்த்தபோது தெரியவந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
*✅✅காஞ்சிபுரத்தில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது*
 
காஞ்சிபுரம்: ஓரிக்கையில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அனிதாவை சுதாகர் கொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
*🟣🟣புதுச்சேரியில் இன்று மேலும் 124 பேருக்கு கொரோனா.: மொத்த பலி 1,384*
 
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100-க்குகீழ் பதிவான நிலையில் இன்று மேலும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 1,19,181 பேருக்கு கொரோனா; இதுவரை 1,384 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
 
 
*🟣🟣தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்' - அமைச்சர் பொன்முடி*
 
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார்.
 
 
   *திராவிட நாடு, ‘ஒன்றிய அரசு என்று சொல்லும் வரை ‘கொங்குநாடு என்று சொல்வோம்: யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் திட்டவட்டம்*
 
 
   *பழநியில் விடுதியில் தங்கியிருந்த கேரள பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமையா?- திண்டுக்கல் எஸ்பி விசாரணையில் புதிய தகவல்கள்*
 
   *வெங்கம்பாக்கத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க தடையில்லா சான்று வேண்டும்: ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு*
 
  
  *வியாபாரிகள் போராட்டம் எதிரொலி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி: வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக முடிவு*
 
   *ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை பிடுங்கி விசாரணை செய்ததால் ஆட்டோ ஓட்டுநர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைச் செய்துக்கொண்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் தலைமைக்காவலரை பணியிடை நீக்கம் செய்தனர்.*
 
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
 
 
 
*🔷🔶திருவள்ளூர்*
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி கட்டி சைக்கிள் பேரணி  நடைபெற்றது.
 
 
*🔷🔶திருவள்ளூர்* அருகே செல்பி எடுக்க முயன்று கால்வாயில் விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் உடல் 20 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. பூண்டிநம்பாக்கம்  என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம் நடந்துள்ளது.
 
 
*🔷🔶கிருஷ்ணகிரி:* ஓசூர் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.6.2 கோடி மதிப்புள்ள 8.3 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் செம்மரங்களை கடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
 
*🔷🔶கோயம்புத்தூர்* அருகே அனைகட்டி வனப்பிரிவில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. யானை ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்து இருக்கலாம் என வன ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
*🔷🔶திருப்பூரில்* பிரபல கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.14 லட்சம் ரொக்கம், 5 செல்போன்கள், இரண்டு கார், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
*🔷🔶சேலம்* மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து திமுக எம்பி எஸ் ஆர் பார்த்திபன் நேரில் ஆய்வு
 
 
 *🔷🔶தஞ்சாவூர்* ️கும்பகோணத்தை அடுத்துள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது; கத்தியை அன்பளிப்பாக வழங்கிய நண்பரும் கைது
 
 
*🔷🔶சேலம் மாவட்டம்* சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் எரிபொருள்களின் விலையினை மத்திய அரசு திரும்பபெறக்கோரி சைக்கிள் பேரணியும், குதிரை வண்டிகள் பயண நிகழ்ச்சி சங்ககிரியில் நடைபெற்றது.
 
 
*🔷🔶சேலம் மாவட்டம்* சங்ககிரி நகர் புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனி பகுதியில் முதியவர் இறுதி சடங்கிற்காக வைத்த வெடியில் அருகிலிருந்து தனியார் உணவு விடுதி கூரை மீது தீப்பொறி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 அருகிலிருந்து பொதுமக்கள் பார்த்து சப்தமிட்டனர்.
பொதுமக்களின் கூச்சலையடுத்து கடைக்கு அருகிலிருந்தவர்கள் கடையில் இருந்த எரிவாயு உருளையை வெளியே எடுத்து வந்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த சங்ககிரி தீயணைப்பு  வீரர்கள் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் உணவு விடுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
 
*🔷🔶தஞ்சை*
 விவசாயிகள் பெயரில் ரூ.48 கோடி கடன்; திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
 
 
*🔷🔶சென்னை* கொளத்தூர் திருமுருகன் நகரில் மூதாட்டி சரத்தைவிடம் நூதன முறையில் ஏமாற்றி 14 சவரன் திருடப்பட்டுள்ளது. பக்கத்து தெருவில் பிரச்னையாக உள்ளது அங்கு சென்றால் நகைகளை பறித்துச் சென்றுவிடுவார்கள் எனக்கூறி கைவரிசை காட்டியுள்ளனர்.
 
 
*🔷🔶சென்னை* திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் போலீஸ் விசாரித்தபோது இளைஞர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் விசாரித்தபோது பாட்டிலை உடைத்த இளைஞர் பாக்கியராஜன் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த இளைஞர் பாக்கியராஜனின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இளைஞர் பாக்கியராஜன் மது அருந்திக் கொண்டிருந்த பொது ரோந்து வந்த போலீசார் விசாரித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
 
*🔷🔶சென்னை* கிண்டியில் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு கொன்ற கணவர் நித்யானந்தா போலீசில் சரணடைந்துள்ளார். புவனேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தபின் அவரது அண்ணனுக்கு தகவல் தந்து விட்டு நித்யானந்தா சரணடைந்தார்.

0 Response to "13.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel