14.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

14.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

14.07.2021 முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்
 

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்
முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் !
 
 - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
 
#AnbilMaheshPoyyamozhi #schoolsreopening #TNGovt
 
 *🟣🟣தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை; சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்* 
 
*🟣🟣அதிக தேவை இருக்கும் நிலையில், குறைவான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்குவதால் தட்டுப்பாடு நிலவுகிறது; கோவை, ஈரோட்டில் நள்ளிரவு முதலே தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்* 
 
*🟣🟣குஜராத்தில் 1000 பேருக்கு 533 தடுப்பூசிகள் என்ற கணக்கில் வழங்கப்படும் போது, தமிழ்நாட்டில் 302 தடுப்பூசிகளே வழங்கப்படுகிறது - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்* 
 
*🟣🟣நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலம்*
 
நெல்லை: நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வாடகை கார் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 
*🟣🟣புதுச்சேரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சிறந்த அதிகாரி*
 
புதுச்சேரி: புதுச்சேரி குடிசைமாற்று வாரிய ஆய்வாளர் மணிவண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் சான்றிதழ்களை சரிபார்த்தபோது தெரியவந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
*✅✅காஞ்சிபுரத்தில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது*
 
காஞ்சிபுரம்: ஓரிக்கையில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அனிதாவை சுதாகர் கொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
*🟣🟣புதுச்சேரியில் இன்று மேலும் 124 பேருக்கு கொரோனா.: மொத்த பலி 1,384*
 
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100-க்குகீழ் பதிவான நிலையில் இன்று மேலும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 1,19,181 பேருக்கு கொரோனா; இதுவரை 1,384 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
 
*🟣🟣தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்' - அமைச்சர் பொன்முடி*
 
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் எனவும் கூறினார். 
 
*திராவிட நாடு, ‘ஒன்றிய அரசு என்று சொல்லும் வரை ‘கொங்குநாடு என்று சொல்வோம்: யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் திட்டவட்டம்* 

*பழநியில் விடுதியில் தங்கியிருந்த கேரள பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமையா?- திண்டுக்கல் எஸ்பி விசாரணையில் புதிய தகவல்கள்* 
 
  *வெங்கம்பாக்கத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க தடையில்லா சான்று வேண்டும்: ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு* 
  
*வியாபாரிகள் போராட்டம் எதிரொலி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி: வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக முடிவு*
 
 *ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை பிடுங்கி விசாரணை செய்ததால் ஆட்டோ ஓட்டுநர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைச் செய்துக்கொண்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் தலைமைக்காவலரை பணியிடை நீக்கம் செய்தனர்.*
 
*தமிழகத்தில் பரவும் டெங்கு; நோய்த்தடுப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்* 
 
*சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.*   
 
*மேகதாது அணை விவகாரம்: தஞ்சையில் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்துப் போராட்டம்*    
 
 *பிஹாரைக் காட்டிலும் தமிழக அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம்: உயர்த்தி வழங்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை*
 
 
 *நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம்: 7.5% இடம் கிடைக்க மாணவர்களுக்கு உடனடியாக பயிற்சி அளியுங்கள்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்*
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
 
*📌🧿📌கோவை* வைதேகி நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை தாக்கி, சுற்றுலா வேன் ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அங்கிருந்த பழங்குடி கிராம மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
  
*📌🧿📌சிவகங்கை* காரைக்குடி அருகே பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் ரயில் மோதியதில் 8 மாடுகள் பலி; ரயில்வே காவல்துறையினர் விசாரணை.
 
*📌🧿📌விழுப்புரம் மாவட்டம்* செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கல்குவாரியில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், குவாரி உரிமையாளர் முருகபாண்டியனை போலீசார் இன்று கைது செய்தனர்.
  
*📌🧿📌திண்டுக்கல்* பழனியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் - முரணான தகவல்கள் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணை முழுமையாக விசாரிக்க ஏ.டி.எஸ்.பி. சந்திரன் தலைமையிலான தனிப்படை கேரளா விரைவு 
 
*📌🧿📌தஞ்சையில்* காவிரி உரிமை மீட்புக்குழு, விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
*📌🧿📌திருச்சி மாவட்டம்* மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நெய்குப்பை கிராமத்தில் ஆசிரியை கடல்கன்னி வீட்டில் இருந்த தங்க,வைர நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.
 
*📌🧿📌மதுரை* முல்லைநகர் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 581 வீடுகள் இடித்து அகற்றம்; 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 
 
*📌🧿📌கள்ளக்குறிச்சி மாவட்டம்* திருக்கோவிலூரில் அமமுக பிரமுகர் கோவிந்தன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  ஞானம்பெற்றான் தாங்களில் தனது நிலத்தை பார்க்கச் சென்ற கோவிந்தனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். 
 
*📌🧿📌நெல்லையில்* வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வாடகை கார் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
*📌🧿📌புதுச்சேரி* குடிசைமாற்று வாரிய ஆய்வாளர் மணிவண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் சான்றிதழ்களை சரிபார்த்தபோது தெரியவந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
*✍🏼 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தில்லியில் சந்தித்துப் பேசி வருகிறார்.*
 
இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
 
*தருமபுரி:* பொம்மிடி அருகே பில்பருத்தி எரிக்கரையோரம் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒய்வு பெற்ற ஆசிரியை  சுலக்சனா- கணவர் கிருஷ்ணனை கழுத்தறுத்துக் கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
__________________
*நெல்லை:* உவரி கடற்கரையில் நண்பர்களுடன் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொறியியல் படித்து வந்த வள்ளியூரை சேர்ந்த அக்னல் ராய்(18), பிரவீன் ராய்(17) ஆகியோர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்
__________________
 
*தேனி மாவட்டம்*
கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
__________________
 
*ராமநாதபுரம்:* மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரை கண்டதும் 500 கிலோ கடல் அட்டையை கடலில் கொட்டிய நிலையில் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
__________________
 
*விருதுநகர் மாவட்ட* காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவகாசியில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை அமைப்பின் மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
__________________
 
*திருவாரூர் மாவட்டம்* மன்னார்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், "எங்கே எனது தடுப்பூசி" என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய 14 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை பொதுத் துறை நிறுவனங்கள் போர் கால அடிப்படையில் உற்பத்தி செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கக் கூடாது.
செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல் தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடந்தது
__________________
 
*திருவாரூர் மாவட்டம்* மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவதை எதிர்த்தும் இந்த அணையை கட்ட கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கையை தறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதை கண்டித்தும் கர்நாடக அரசு வழங்கிய திட்ட அறிக்கையை மத்திய அரசு திரும்ப வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன் தலைமை வகித்தார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவைப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களை காவலர்கள் கைது செய்தனர்.
__________________
 
*சென்னை* கே.கே.நகர், போரூர், ராமாபுரம், அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை
__________________
 
*தூத்துக்குடி:* திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையின் போது ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
__________________
 
*சேலம் மாவட்டம்* எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
__________________
 
*சேலம் மாவட்ட* ஆட்சியர் அலுவலகம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதி செய்யப்பட்டுள்ளது
__________________
 
 
*செங்கல்பட்டு* அருகே வயலில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கரசங்காலில் தனது வயலில் தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
__________________
 
*மதுரை* கரிமேடு பகுதியில் அனுமதியை மீறி செயல்பட்ட மீன் சந்தையிலிருந்து பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்பட்ட 500 கிலோ மீன்கள் பறிமுதல்: ரசாயனம் கலந்து மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.
__________________
  
*காஞ்சிபுரம்:* ஓரிக்கையில் பேராசிரியை அனிதா கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். 2-வது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அனிதாவை சுதாகர் கொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது
__________________
  
*✍🏼சென்னை* திருமங்கலம் தொழில் அதிபர் ராஜேஷ் சொத்துக்காக கடத்தப்பட்ட வழக்கில் அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது; தலைமறைவாக இருக்கும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம்

0 Response to "14.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel