பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒரு பயனர் புதிய ரேஷன் கார்டுகளை 2 வாரங்களில் அதாவது 15 நாட்களுக்குள்ளாக வீடுகளில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடுத்த பக்கத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு Name of family head என்ற பெட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயரை பதிவிடவும்.
- பிறகு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல்
குறியீடு, மொபைல் எண், இமெயில்
ஐடி விவரங்களை கொடுக்கவும்.
- தொடர்ந்து புகைப்படத்தை பதிவிடவும்.
- பிறகு தேவையான அட்டையை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
- இருப்பிட சான்றிதழில் கேஸ்
பில்,
டெலிபோன் பில், தண்ணீர் பில் 1 MB அளவில்
ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்யலாம்.
- அடுத்து உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் குடும்ப தலைவர் பெயரை
பதிவு செய்தவுடன், நீங்கள் கொடுத்த மற்ற விவரங்கள் தோன்றும்.
- அடுத்து ஸ்கேன் கொடுத்து ஆதார் தகவல்களை அப்லோட் செய்யவும்.
- பிறகு உறுப்பினர் சேர்க்கை SAVE என்ற
ஆப்சனை தேர்வு செய்யவும்.
- தொடர்ந்து சமையல் எரிவாயு
இணைப்பில் பெயர், விவரங்கள், சிலிண்டர்
போன்றவற்றை பதிவிடவும்.
- பிறகு நீங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யவும்.
- இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
- அதை பயன்படுத்தி ரேஷன் அட்டையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
0 Response to "15 நாளில் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்னென்ன?"
Post a Comment