16 செல்வம் என்றால் என்ன? | அவை என்னென்ன?

Trending

Breaking News
Loading...

16 செல்வம் என்றால் என்ன? | அவை என்னென்ன?

16 செல்வம் என்றால் என்ன? | அவை என்னென்ன?
 

பதினாறு பெற்று பெரும்வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது தமிழர்களின் மரபாகும். குறிப்பாக இதனை திருமணம் ஆன மணமக்களை
, பெரியவர்கள் இவ்வாறு வாழ்த்துவார்கள். இவ்வாறு பெரியவர்கள் வாழ்த்தும் போது மணமக்கள் இதற்கு அர்த்தம் ஒன்றும் புரியாமல் சிரித்து கொண்டு குழப்பத்தில் நின்று கொண்டிருப்பார்கள். அபிராமி அந்தாதி பதிகம் பாடலொன்றில் மிக அழகாக இந்த 16 செல்வங்கள் என்னென்ன என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. 16 செல்வங்கள் என்பது வேறு ஒன்று இல்லை கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகியவற்றைத்தான் 16 செல்வங்கள் என்று கூறுகின்றன.. அதன் விளக்கம் பற்றி கீழே படித்தறியலாம் வாங்க..
 
01    நோயில்லாத உடல்
02    சிறப்பான கல்வி
03    குறைவில்லாத தானியம்
04    தீமை இன்றி பெறும் செல்வம்
05    அற்புதமான அழகு
06    அழியாத புகழ்
07    என்றும் இளமை
08    நுட்பமான அறிவு
09    குழந்தைச் செல்வம்
10    வலிமையான உடல்
11     நீண்ட ஆயுள்
12    எடுத்தக் காரியத்தில் வெற்றி
13    சிறப்பு மிக்க பெருமை
14    நல்ல விதி
15    துணிவு
16    சிறப்பான அனுபவம்
 
16 செல்வங்கள் அபிராமி அந்தாதி:-
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
 
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
 
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
 
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்

0 Response to "16 செல்வம் என்றால் என்ன? | அவை என்னென்ன?"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel