
பல்வேறு மாவட்டங்களில்
நடந்தவை*
__________________________
*✅கோவை* ரயில் நிலையத்திற்கு
தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது தொடர்பாக கேரளாவை
சேர்ந்த இருவர் பேசி கொண்டிருந்ததாக மர்ம நபர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள்
சோதனை மேற்கொண்டுள்ளனர்.
_________________________
*✅சென்னை* புறநகர் பகுதிகளில்
மிதமான மழை பெய்தது. சென்னை அடுத்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
பெய்தது.
__________________________
*✅சேலம் மாவட்டம்* மேட்டூர்
அணையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதாக எழுந்த
புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
__________________________
*✅திருப்பூரில்* கோவிட்-19
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத பேருந்து
நடத்துனருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
________________________
*✅திண்டுக்கல்* மாநகராட்சி
புதிய ஆணையராக சிவசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
_________________________
*✅காஞ்சிபுரம் மாவட்ட* ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்
ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூன்றாம் பாலினர்களில் மின்னணு
குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை பெறாத மூன்றாம் பாலினர்களுக்கான சிறப்பு முகாம்
நடைபெற்றது.
__________________________
*✅திருவண்ணாமலை*
100% இலக்கை அடையும் வகையில், 39 வார்டுகளிலும் நடைபெற்ற கோவிட்-19
தடுப்பூசி முகாம்களை மாநில அமைச்சர் திரு எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
__________________________
*✅தேனியில்* இம்ப்காப்ஸ்
எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய்நிலையம் மற்றும் பண்டகசாலை மருந்தகத்தின்
26 வது கிளை திறப்பு விழா தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.
__________________________
*✅நெல்லை* 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த மனித உரிமை ஆணைய
விசாரணை தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவிட்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில்
நடைபெற்றது.
விசாரணையில் 81
வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
__________________________
*✅சேலம் மாவட்டத்தில்* பணியின்
போது உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண
நிதியாக மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எம்.ஸ்ரீ அபிநவ் இன்று வழங்கினார்.
__________________________
*✅திண்டுக்கல்*
பழனி அருகே பால
சமுத்திரத்தில் தகராறு இருவர் மீது தாக்குதல் அரசு மருத்துமனையில் அனுமதி
மருத்துவமனையில் மக்கள் கூடியதால் பரபரப்பு.
__________________________
*✅திண்டுக்கல்*
பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி
வைத்திருப்பதாக எஸ்பி தனிப்படைக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து எஸ்பி தனிப்
பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் பழனி தட்டாங்குளத்தில்
அமைந்துள்ள இர்பான் ஏஜென்சி குடோனில் சோதனையிட்டபோது அரசால் தடைசெய்யப்பட்ட 792 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சாகுல்ஹமீது என்பவரை போலீசார் கைது
செய்தனர்.
__________________________
*🎪 JUST IN. ||>>
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது;*
*⭕ எரிபொருள் விலை உயர்வு
உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்...*
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|*
*🎪 JUST IN. ||>>
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும்
முக்கியமானவை.*
*மூன்றாம் அலையை தவிர்க்க முககவசம், தனிமனித இடைவெளியை மக்கள் கட்டாயம்
பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள்...*
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|*
*🎪 JUST IN. ||>> ஒகேனக்கல்லுக்கு திடீர் நீர்வரத்து
அதிகரிப்பு.*
*தர்மபுரி,
ஒகேனக்கல்
காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று
காலை நிலவரப்படி 6,000 கனஅடியாக அதிகரிப்பு...*
*🎪 JUST IN. ||>>
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.*
*5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு
அனுமதி...*
*🎪 JUST IN. ||>>
2021-22 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின்
முதலாம் ஆண்டு சேர்க்கை செப்டம்பர் 30 க்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் முடித்துக்கொள்ளவேண்டும்...*
பவானி சாகர் அணை
நிலவரம்...*
💧 நீர்மட்டம் : 95.33 அடி,
💧 நீர் இருப்பு : 25.3
டி.எம்.சி.,
💧 நீர்வரத்து : 623 கன
அடி,
💧 நீர் வெளியேற்றம் :
600 கன அடி...
*# Bhavani
Sagar Dam...*
*💥 மேட்டூர் அணை நிலவரம்...*
💧 நீர்மட்டம் : 71.97 அடி,
💧 நீர் இருப்பு :
34.41 டி.எம்.சி.,
💧 நீர்வரத்து : 2411 கன
அடி,
💧 நீர் வெளியேற்றம் :
5000 கன அடி...
*# Mettur
Dam...*
*💥 பெரியார் அணை நிலவரம்...*
💧 நீர்மட்டம் : 128.80 அடி,
💧 நீர்வரத்து : 5079 கன அடி,
💧 நீர் இருப்பு : 4.4 டி.எம்.சி....
*# Mullai
Periyar Dam...*
*🎪 கிருஷ்ணகிரி
கே.ஆர்.பி.அணை நிலவரம்...*
💧 முழு கொள்ளளவு :
52.0 அடி,
💧 நீர் இருப்பு : 45.50 அடி,
💧 நீர் வரத்து : வினாடிக்கு
278 கன அடி,
💧 நீர் வெளியேற்றம்: வினாடிக்கு
12 கன அடி...
*#K.R.P.
Dam...
*💥 வைகை அணை நிலவரம்...*
💧 நீர்மட்டம் : 67.62 அடி,
💧 நீர்வரத்து : 5231 கன
அடி,
💧 நீர் இருப்பு : 5.2 டி.எம்.சி....
*# Vaigai
Dam...
*🎪 ஓசூர் கெலவரப்பள்ளி அணை
நிலவரம்...*
💧 முழு கொள்ளளவு :
44.28 அடி,
💧 நீர் இருப்பு :
36.74 அடி,
💧 நீர் வரத்து : வினாடிக்கு
400 கன அடி,
💧 நீர் வெளியேற்றம்: வினாடிக்கு
400 கன அடி...
*# HSR
Kelavarapalli Dam...*
*🎪 JUST IN. ||>>
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-*
◼️அமெரிக்கா - பாதிப்பு- 3,49,27,981, உயிரிழப்பு - 6,24,606, குணமடைந்தோர் - 2,93,58,531
◼️இந்தியா - பாதிப்பு
- 3,10,63,987, உயிரிழப்பு - 4,13,123, குணமடைந்தோர் - 3,02,20,183
◼️பிரேசில் - பாதிப்பு
- 1,93,08,109, உயிரிழப்பு - 5,40,500, குணமடைந்தோர் - 1,79,51,699
◼️ரஷ்யா - பாதிப்பு
- 59,07,999, உயிரிழப்பு - 1,46,868, குணமடைந்தோர் - 53,00,908
◼️பிரான்ஸ் - பாதிப்பு - 58,44,249, உயிரிழப்பு - 1,11,451, குணமடைந்தோர் - 56,57,014...
*🎪 JUST IN. ||>>
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம் :*
◼️ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டியுள்ளது.
◼️ இதன்படி உலகம் முழுவதும்
தற்போது 19,02,67,583 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
◼️ கொரோனா பாதிப்பில் இருந்து
இதுவரை 17,34,77,758 பேர் குணமடைந்துள்ளனர்.
◼️ மேலும் வைரஸ் தாக்குதலுக்கு
இதுவரை 40 லட்சத்து 91 ஆயிரத்து 477 பேர் உயிரிழந்துள்ளனர்.
◼️ கொரோனா தொற்றுக்கு தற்போது
1,26,98,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
◼️ சிகிச்சை பெறுபவர்களில்
79,190 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது...
*🎪 JUST IN. ||>>
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-*
◼️துருக்கி - 55,14,373
◼️இங்கிலாந்து - 53,32,371
◼️அர்ஜெண்டினா-
47,37,213
◼️கொலம்பியா - 46,01,335
◼️இத்தாலி - 42,81,214
◼️ஸ்பெயின் - 41,00,222
◼️ஜெர்மனி - 37,49,922
◼️ஈரான் - 34,85,940
◼️போலந்து - 28,81,241
◼️இந்தோனேசியா-
27,80,803
*🎪 JUST IN. ||>>
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 31 ரன்கள்
வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி...*
*🎪 JUST IN. ||>>
வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து விடுதலை
சிறுத்தைகள் கட்சி தேர்தலை சந்திக்கும்.*
*தேர்தல் தேதி அறிவிப்பு ஆன பிறகு அதற்கான பணிகள் நடைபெறும்.*
*🎯 - திருமாவளவன்...*
*🎪 JUST IN. ||>>
மேற்கு ஜெர்மனி,
பெல்ஜியம்
மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக
125க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,300 பேர் காணாமல்
போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...*
*🎪 JUST IN. ||>>
நாமக்கல் : ராசிபுரம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி
விபத்து.*
*பைக்கில் வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற
இளைஞர் சம்பவ இடத்தில் பலி...*
*🌏♨️நாமக்கல் பண்ணைகளில் ஒரு
முட்டை விலை 10 காசுகள் அதிகரிப்பு.*
*🌏♨️2 நாட்களில் 25 காசுகள்
அதிகரித்த நிலையில் ஒரு முட்டை தற்போது ரூ. 5.05-க்கு விற்பனை.*
*🌏♨️ஒகேனக்கல்லுக்கு திடீர்
நீர்வரத்து அதிகரிப்பு.*
*🌏♨️தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை
நிலவரப்படி 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 6,000
கனஅடியாக அதிகரிப்பு.
*🌏♨️நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்
தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது;
எரிபொருள்
விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
*🌏♨️"2021-22 ஆம் கல்வி
ஆண்டிற்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு சேர்க்கையை செப்டம்பர்
30 க்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும்
முடித்துக்கொள்ளவேண்டும்"*
*📕📰 "கொரோனாவுக்கு எதிரான
போரில் அடுத்த 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை..!"*
*- மத்திய அரசு*
*📕📰 செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்த தேவன் என்பவர் சாலையை கடக்கும் பொழுது
அரசு பேருந்து மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி..!*
📕📰 கார் நுழைவு வரி விவகாரம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு..!*
*விமர்சனங்களை நீக்கவும் அபராதத்தை ரத்து செய்யவும்
கோரிக்கை..!*
*📕📰 சென்னையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு பின்னர் முகக்கவசம்
அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது..!*
*பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதின் நிலை குறித்து
ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை மாநகராட்சி நடத்திய கள ஆய்வில் தகவல்*
📕📰 "பாஜக மீது பயத்துடன்
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று விடுங்கள்"*
*- ராகுல் காந்தி*
*கைலாசாவுக்கு
பக்தர்களை அழைக்கும் "சர்ச்சை புகழ் நித்தியானந்தா"..*
*கொரோனா 3-வது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், எனவே ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள்
என்று "சர்ச்சைப்புகழ் நித்தியானந்தா" தெரிவித்துள்ளார். சமீபத்தில்
நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது
அவர்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த
வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3ம் அலை மிக மோசமானதாக
இருக்கும். எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். வீட்டிலேயே
இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள்.
இங்கு தான் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில்
சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை
தொட்டு பேசுகிறார்கள். தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு
தோற்று போய் விட்டது. மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
நான் எனது பக்தர்களுக்கும்,
சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன்.
உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு
அழைத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.*
*பாலியல் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய நித்தியானந்தா
அவ்வப்போது வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.*
இந்தியாவில் மேலும் 38,079 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது
இந்தியாவில் கொரோனாவால் மேலும் 560 பேர் உயிரிழப்பு
மொத்த பலி எண்ணிக்கை 4,13,091 ஆக அதிகரிப்பு
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"-
நீதிமன்றம் உத்தரவு
*🌏♨️விவரம் கோரியது கல்வித்துறை.*
*🌏♨️தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில்
தண்டனை அனுபவிக்கும் பெண்களின்,
குழந்தைகளின்
கல்வி நிலை என்ன?*
*🌏♨️சட்டப்படி, அக்குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள்
அவர்களுக்கு கிடைக்கப்பெற்றனவா?*
*மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.*
*🔵⚪️ பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது :*
*கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது*
*பள்ளி,
கல்லூரிகள்
திறப்புக்கான தடை தொடர்வதாக முதலமைச்சர் அறிவிப்பு*
*🔵⚪️தியேட்டர்கள் திறக்கப்படாது
:*
*கொரோனா பரவலால் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்படாது*
*தியேட்டர்களுக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை தொடரும்*
*மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு தடை*
*மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கான தடை
தொடர்கிறது*
*புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே பேருந்து
போக்குவரத்துக்குத் தடை*
*🔵⚪️ஊரடங்கில் புதிதாக
என்னென்ன தளர்வுகள்?*
*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி*
*பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெற
அனுமதி*
*ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து நிர்வாக பணிகளில்
ஈடுபட அனுமதி*
*ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடத் தயாரிப்பில் ஈடுபடவும்
அனுமதி*
*தட்டச்சு,
சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள்
செயல்பட அனுமதி*
*🔵⚪️என்னென்ன தடைகள் தொடர்கின்றன? :*
*பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை
தொடர்கிறது*
*நீச்சல் குளங்களுக்கான தடை தொடர்கிறது*
*பொதுமக்கள் பங்கேற்கும், சமுதாய, மற்றும் அரசியல் சார்ந்த
கூட்டங்களுக்குத் தடை*
*பொழுதுபோக்கு,
விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை
நீட்டிப்பு*
*வன உயிரியல் பூங்காக்களுக்கான(Zoo) தடை தொடர்வதாக அறிவிப்பு*
*திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு
மட்டுமே அனுமதி*
*இறுதிச்சடங்குகளில், 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி - தமிழ்நாடு அரசு*
*சுபகாரியங்கள்,
இறுதிச்சடங்களுக்கு
கட்டுப்பாடு*
*🔵⚪️பொதுமக்களுக்கு முதலமைச்சர்
அறிவுறுத்தல் :*
*பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது
கட்டாயமாகும்*
*மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை
தொடரும்*
*பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்*
*பொது இடங்களில், வீடுகளில் அருகே கூட்டமாக கூடுவதை தவிர்க்க முதலமைச்சர்
அறிவுறுத்தல்*
*கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்*
*20 சார்பதிவாளர் அலுவலகங்களில் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு
கண்டுபிடிப்பு அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்தால் செல்லாது:* _பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு_
*வடமேற்கு
வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்*
வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும்
கூறியுள்ளது.
*ஒரே நேரத்தில் 4
சாதனங்களில் பயன்படுத்தப்படக்கூடிய மல்டி டிவைஸ் சப்போர்ட் வாட்ஸ்அப்பில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*
2009 ஆம் ஆண்டு முதல் அறிறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப்பில், மல்டி டிவைஸ் சப்போர்ட் குறித்து
யூசர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். தற்போது வாட்ஸ் அப் செயலியை மற்றொரு
சாதனங்களில் பயன்படுத்துவதற்கு மொபைல் போனின் உதவி தேவைப்படுகிறது. போன் இல்லாமல்
வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. சார்ஜ் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் மொபைல்
இல்லாமல் இருந்தால் வாட்ஸ் ஆப் செயலி சேவையை யூசர்கள் பயன்படுத்த முடியாத நிலை
இருந்தது.
இதனை மாற்ற வேண்டும் என வாட்ஸ்அப்புக்கு கோரிக்கை வைத்த
யூசர்கள், இதற்கு தேவையான
வகையில் போதுமான அப்டேட்டை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து அண்மையில்
பேசிய வாட்ஸ் அப் நிர்வாக இயக்குநர் வில் காத்கார்ட், வாட்ஸ் ஆப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட்
அப்டேட் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, ஒரே நேரத்தில் விண்டோஸ், லேப்டாப், டேப்லெட் மற்றும் மேக் கருவிகளில் ஓபன்
செய்யும் அளவிற்கு ஐ.ஓ.எஸ் தரம் மேம்படுத்தப்படுகிறது எனக் கூறியிருந்தார்.
ஸ்மார்ட்போன்களின் உதவி இல்லாமல் மற்றொரு டிவைஸில் பயன்படுத்தும் வகையில்
வாட்ஸ்அப்பில் அப்டேட் செய்யப்படுவதாகவும் விரைவில் யூசர்களின் பயன்படுத்தலாம் என
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,
பீட்டா
வெர்சனில் வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது
வாட்ஸ்அப் யூசர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்
நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,
யூசர்களின்
நீண்ட நாள் கோரிக்கையான வாட்ஸ் அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்பட்டுள்ளது. எனினும் அனைத்து யூசர்களும் இதனை பயன்படுத்த முடியாது. சோதனை
முறையில் மட்டுமே இருப்பதால் குறிப்பிட்ட யூசர்கள் மட்டுமே பயன்படுத முடியும் என
வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
பீட்டா வெர்சன் வாட்ஸ்அப் யூசர்கள் தற்போது மல்டி டிவைஸ்
சப்போர்ட்டை உபயோகப்படுத்தலாம். இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஸ்மார்ட்போன் இல்லாமல், இதனை பயன்படுத்த முடியும். மேலும், ஏதாவதொரு டிவைஸில் டேட்டா உபயோகம்
இருந்தாலே போதும். இதற்கு முன்பு கம்யூட்டரில் கியூ ஆர் கோட் மூலம் வாட்ஸ் ஆப்-ஐக்
கனெக்ட் செய்திருந்தால்,
மொபைலில்
டேட்டா இல்லை என்றாலும் அல்லது கம்பயூட்டரில் டேட்டா இல்லை என்றாலும் வாட்ஸ்அப்பை
பயன்படுத்த முடியாது. தற்போது இரண்டில் ஏதேனும் ஒன்றில் வெப் கனெக்ஷன் இருந்தால்
போதும்.
யூசர்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும் என்ட் -டூ-என்ட்
என்கிரிப்சன் செய்யப்பட்டிருக்கும் என்பதால், மெசேஜ் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
கொடுக்கப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் கூறியுள்ளது. கியூ ஆர் கோட் அல்லது பொதுவான கீ
மூலம் வாட்ஸ் ஆப்பை மல்டி டிவைஸ்களில் பயன்படுத்தலாம். அனைத்து யூசர்களுக்கும்
விரைவில் இந்த அம்சம் கிடைக்க உள்ளது.
அ.சா.அலாவுதீன்
முதன்மை மண்டல செய்தியாளர்
நமது தேடல்
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூக்கடை, வள்ளலார் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய சாலைகளில்
கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்*
• தமிழகம் - 2,312
• மொத்த பாதிப்பு -
25,31,118
• குணமடைந்தவர்கள் -
2,986
• உயிரிழந்தவர்கள் -
46
• பரிசோதனைகள் -
1,48,778
• சென்னை - 144
*🏮🏮#TNCORONA*
*🏮🏮#TN - 2,312*
*🏮🏮#TamilNadu | #COVID19 | 16 July*
• TN - 2,312
• Total Cases
- 25,31,118
• Today's
Discharged - 2,986
• Today's Deaths - 46
• Today's Tests - 1,48,778
• Chennai - 144
#TNCoronaUpdates
#COVID19India
*🏮🏮#COVID__19 Testing In #TamilNadu*
*Day Wise
Testing Update*
Total
Tests - 3,52,68,724*
16July:
1,48,778
15July:
1,46,665
14July:
1,46,394
13July:
1,40,132
12July:
1,40,463
11July:
1,48,182
10July:
1,50,412
09July:
1,51,631
08July:
1,54,763
12Jun:
1,82,878
(RECORD)
#TNCoronaUpdate
19ந் தேதி பிளஸ் 2 ரிசல்ட் :*
*வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை*
*www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம்*
*மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கும்
மதிப்பெண் விவரங்கள் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும்*
*www.dge.tn.gov.in,
www.dge.tn.nic.in இணையதளங்கள் மூலம் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட்
செய்து கொள்ளலாம்*
*22ந் தேதி காலை 11 மணி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை
டவுன்லோடு செய்து கொள்ளலாம்*
🔵⚪️ஊரடங்கு நீட்டிப்பு -
முதலமைச்சர் அறிவிப்பு :*
*ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி
தொடரும் - முதலமைச்சர்*
0 Response to "17.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "
Post a Comment