18.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

18.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

18.07.2021  - முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்


*
✍🏼 வெற்றிக்கணக்கை தொடங்குமா இந்திய இளம் அணி? இலங்கைக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டி*
 
ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கொழும்புவில் இன்று களம் காண்கிறது.
 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாட இருக்கிறது. கோலி தலைமையிலான அனுபவம் வாய்ந்த டெஸ்ட் அணி இங்கிலாந்தில் இருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
 
இந்த தொடர் முதலில் கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது. இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமானது. இலங்கை அணிக்கு ஷனகா தலைமையில் களம் காண்கிறது.
 
இலங்கை அணி கடந்த சில மாதங்களாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இப்போது இந்தியாவுக்கு எதிரான அணியும் போதிய அனுபவம் இல்லாதவையாக இருக்கிறது. எனினும் இழந்த பெருமையை மீட்க கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
 
இந்திய அணி இலங்கை மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நேரடி ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 9-வது முறையாகும். இதில் கடைசி 4 ஒரு நாள் தொடர்களை இந்திய அணி வரிசையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி அல்லது தீபக் சாஹர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்.
 
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா.
 
 
*✍🏼 ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு*
 
ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 
இன்று மாலை 9,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 12,000 கனஅடியாக உள்ளது.
 
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 
*✍🏼 37 வயது வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டின் செஸ் சாம்பியனான 15 வயது பிரக்ஞானந்தா*
 
உலக சதுரங்க போட்டியில் 37 வயது வீரரை வீழ்த்திய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சதுரங்கப் போட்டியில் 2ஆவது சுற்றில் ஆர்மீனியா நாட்டின் 37 வயது வீரர் கார்பிரயல் சர்கிசியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
 
இதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மென்மேலும் வெற்றி பெற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
*✍🏼 கப்பல் மோதியதால் கடலில் மூழ்கிய படகு: தத்தளித்த 7 மீனவர்களை மீட்ட காசிமேடு மீனவர்கள்*
 
காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் படகின் மீது கப்பல் மோதியதில் படகு மூழ்கி காசிமேடு மீனவர்கள் கடலில் விழுந்தனர். 2 மணிநேரம் கடலில் தத்தளித்தவர்களை காசிமேட்டில் இருந்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் மீட்டனர்.
 
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவு 7 மீனவர்கள், மரபாடி படகில் மீன்பிடிக்கச் சென்றனர். 5 நாட்கள் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கத் தேவையான உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்று காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
 
அப்போது, அதிகாலை கப்பல் ஒன்று, அந்த படகின் மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
 
கடலில் தத்தளித்த நிலையில், வயர்லெஸ் மூலம், காசிமேட்டில் உள்ள மீனவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் 2 மணி நேரத்திற்குப்பிறகு கடலில் தத்தளித்த லோகு, மணி, ரஞ்சித், ராஜவேலு, ஹரி, கோபால், அஜித் ஆகிய 7 பேரை மீட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
 
 
*✍🏼 சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு*
 
சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் நடக்கும் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று கோயில்கள், வீடுகளில் உற்சாகத்துடன் நடந்தது. யுத்தகாலம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம், தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாக உள்ளது.
 
மாரியம்மன் வழிபாட்டுக்கு உகந்த இந்த மாதத்தை அம்பாள் மாதம் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என்று அனைத்து நாட்களும் இந்த மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல்நாளில், சேலம் மண்டலத்தில் முக்கிய கொண்டாட்டமாக இருப்பது தேங்காய் சுடும் நிகழ்வு. ஒரு தேங்காயை எடுத்து, அதன் மேலுள்ள நார்களை அகற்றி விட்டு கண்களை துளையிடுவர்.
 
தேங்காயிலிருந்து தண்ணீரை அகற்றி விட்டு தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் கலந்த கலவையை போட்டு கூரிய முனை கொண்ட அழிஞ்சி குச்சியில் சொருகுவர்.
 
பின்னர், அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைப்பர். பின்னர் ஓரிடத்தில் நெருப்பு மூட்டி குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுடுவர்.
 
இதனை வீட்டருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டு உடைத்து, அனைவருக்கும் வழங்குவர்.
 
இந்த நிகழ்வுக்கும் மகாபாரத யுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் சமய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
 இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வானது, மகாபாரத போருடன் தொடர்புடையது என்று புராணங்கள் கூறுகிறது.
 
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான மகாபாரத போர் ஆடி 1ம்தேதி தொடங்கி 18நாட்கள் நடந்தது. போர் முடிந்த 18வது நாளையே நாம், ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடுகிறோம்.
 
இந்த வகையில் ஆடி முதல்நாள் போர் தொடங்கிய போது, வீரர்கள் விநாயகரையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்ட முறை இது. இந்த அடிப்படையில் தான், தற்போதும் ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வு நடந்து வருகிறது,’’ என்றனர்.
 
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தேங்காய் சுட்டு வழிபடும் நிகழ்வு நேற்று (17ம்தேதி) உற்சாகமாக நடந்தது. கோயில்கள், வீடுகளில் பக்தர்களும், குழந்தைகளும் தேங்காய் சுட்டு விநாயகரை வழிபட்டனர்.
 
 இதையொட்டி கடைகளில் தேங்காய், அழிஞ்சி குச்சி மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.
 
*✍🏼 திண்டுக்கல்: நல்லாம்பட்டி ராசா குளத்தில் மீன்பிடித் திருவிழா*
 
திண்டுக்கல் அருகே பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி எனும் கிராமத்தில் பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராம மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழா, வறட்சியின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.
 
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ராசா குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதையடுத்து மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், நல்லாம்பட்டி ராசா குளத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வலையில் சிக்கிய மீன்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற பொதுமக்கள், அவற்றை சமைத்து விழாவிற்கு அழைத்திருந்த உறவினர்களுக்கு விருந்து படைத்தனர்.
 
 
*✍🏼 தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவு*
 
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
உத்திரமேரூர், செய்யூர் தலா 9 செ.மீ., வந்தவாசி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
 
*✍🏼 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை*
 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தடுப்பூசி  திட்டத்தில் புதிய சாதனை 40கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத் துறை*
 
*சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை   அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.*
 
*🎯அ.தி.மு.க ஆட்சியில் தினசரி சராசரியாக 61 ஆயிரம் தடுப்பூசிகளே போடப்பட்டன; தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து தினமும் சராசரியாக 1.61 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி* 
 
 
*🔷🔶அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?*
 
*முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
 
*பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க உத்தரவு*
 
*அனகாபுத்தூர் அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவு*
 
 
* பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
 
 
*🔷🔶திருவள்ளூர்* மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள்  நடமாட முடியாமல் தவிப்பு.
நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு.
 
 
 
*🔷🔶அரியலூர் மாவட்டம்* ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் பெய்த கனமழையால் தெருக்களில் குளம்போல் தேங்கி இருக்கும் தண்ணீரால் அப்பகுதி  பொதுமக்கள் கடும் அவதி.
 
 
*🔷🔶திருவள்ளூர் மாவட்டம்* கவரப்பேட்டை  அருகே ஹாலோ ப்ளாக் கற்களை ஏற்றி வந்த ட்ராக்டர் கவிழ்ந்த விபத்தில் குமார் , சதீஷ் ஆகிய  இருவர் உயிரிழப்பு.  விபத்து குறித்து போலீசார் விசாரணை.
 
 
*🔷🔶திருச்சி* துப்பாக்கி தொழிற்சாலையில் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கடலோர பாதுகாப்பு பணியில் இவ்வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
 
 
*🔷🔶கோவையில்* பெண் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்
 
 
*🔷🔶கோவை* மன்னார்காடு வனக்கோட்டங்களுக்கு இடையே யானைகள் இடம்பெயர்வுக்காக பயன்படுத்தும் 18 வழித்தடங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
 
*🔷🔶மதுரை*
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் உடலுக்கு முடியாமல் ஆம்புலன்ஸில் படுத்த படுக்கையாக வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய 86 வயது மூதாட்டியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று குடும்பத்தோடு சென்று நலம் விசாரித்து, பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
*🔷🔶மதுரை* மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுடைய பிரச்சினைகளையும், குறைகளையும் அறிந்து விரைவாகத் தீர்வு காண ஓய்வுபெற்ற அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் நியமித்துள்ளார்.
 
 
*🔷🔶சென்னை* எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு எஸ்கலேட்டர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
*🔷🔶தென்காசி:* கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருகே போலீசாரின் வாகன சோதனையில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட மாரியப்பன், ராமர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
*🔷🔶சென்னை*
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுமுறை நாளான இன்று சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான ஊரடங்கு அமலாக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டது
 
*🔷🔶இராமநாதபுரம்*
கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மருதன்தோப்பு பகுதியில் தெருக்குழாய்களில் அனைத்து நாட்களிலும் குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
*🔷🔶நீலகிரியில்* பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி காற்றில் வெள்ளை பூண்டு செடிகள் சாய்ந்ததால், மகசூல் மற்றும் தரம் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
*🔷🔶சிவகங்கை*
காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட கார்கள், டூவீலர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் போதிய பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், புதர் மண்டி கொடிய விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
 
*🔷🔶மதுரை* ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் கைதி சோனி திடிரென தப்பியோடியதாக கூறப்படுகிறது. தேனி பிசிபட்டி காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சோனி என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
*🔷🔶விருதுநகர்*
திருச்சுழி பகுதியில் செங்கல் சூளை பணிகள் நடைபெறாததால் விறகு வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 
 
*🔷🔶கோவை*
பல்லடம் அருகே வலசுபாளையத்தில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் 19 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மயில்கள் உயிரிழப்புக்கு காரணமாக விவசாயி பழனிசாமியை திருப்பூர் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 
*🔷🔶நாமக்கல்* ராசிபுரம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.
பைக்கில் வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலி

0 Response to "18.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel