19.07.2021 செய்திகள்

Trending

Breaking News
Loading...

19.07.2021 செய்திகள்

19.07.2021 செய்திகள்

 


✍🏼
ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு*
 
ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 
இன்று மாலை 9,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 12,000 கனஅடியாக உள்ளது.
 
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 
*✍🏼 37 வயது வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டின் செஸ் சாம்பியனான 15 வயது பிரக்ஞானந்தா*
 
உலக சதுரங்க போட்டியில் 37 வயது வீரரை வீழ்த்திய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சதுரங்கப் போட்டியில் 2ஆவது சுற்றில் ஆர்மீனியா நாட்டின் 37 வயது வீரர் கார்பிரயல் சர்கிசியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
 
இதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மென்மேலும் வெற்றி பெற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
*✍🏼 கப்பல் மோதியதால் கடலில் மூழ்கிய படகு: தத்தளித்த 7 மீனவர்களை மீட்ட காசிமேடு மீனவர்கள்*
 
காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் படகின் மீது கப்பல் மோதியதில் படகு மூழ்கி காசிமேடு மீனவர்கள் கடலில் விழுந்தனர். 2 மணிநேரம் கடலில் தத்தளித்தவர்களை காசிமேட்டில் இருந்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் மீட்டனர்.
 
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நள்ளிரவு 7 மீனவர்கள், மரபாடி படகில் மீன்பிடிக்கச் சென்றனர். 5 நாட்கள் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கத் தேவையான உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்று காட்டுப்பள்ளி அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
 
அப்போது, அதிகாலை கப்பல் ஒன்று, அந்த படகின் மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 7 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
 
கடலில் தத்தளித்த நிலையில், வயர்லெஸ் மூலம், காசிமேட்டில் உள்ள மீனவர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து 3 படகுகளில் சென்ற மீனவர்கள் 2 மணி நேரத்திற்குப்பிறகு கடலில் தத்தளித்த லோகு, மணி, ரஞ்சித், ராஜவேலு, ஹரி, கோபால், அஜித் ஆகிய 7 பேரை மீட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
 
 
*✍🏼 சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் தேங்காய் சுட்டு பொதுமக்கள் கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு*
 
சேலம் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடி முதல்நாளில் நடக்கும் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் நிகழ்வு நேற்று கோயில்கள், வீடுகளில் உற்சாகத்துடன் நடந்தது. யுத்தகாலம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம், தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாக உள்ளது.
 
மாரியம்மன் வழிபாட்டுக்கு உகந்த இந்த மாதத்தை அம்பாள் மாதம் என்றும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என்று அனைத்து நாட்களும் இந்த மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல்நாளில், சேலம் மண்டலத்தில் முக்கிய கொண்டாட்டமாக இருப்பது தேங்காய் சுடும் நிகழ்வு. ஒரு தேங்காயை எடுத்து, அதன் மேலுள்ள நார்களை அகற்றி விட்டு கண்களை துளையிடுவர்.
 
தேங்காயிலிருந்து தண்ணீரை அகற்றி விட்டு தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் கலந்த கலவையை போட்டு கூரிய முனை கொண்ட அழிஞ்சி குச்சியில் சொருகுவர்.
 
பின்னர், அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைப்பர். பின்னர் ஓரிடத்தில் நெருப்பு மூட்டி குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுடுவர்.
 
இதனை வீட்டருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டு உடைத்து, அனைவருக்கும் வழங்குவர்.
 
இந்த நிகழ்வுக்கும் மகாபாரத யுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் சமய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
 இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வானது, மகாபாரத போருடன் தொடர்புடையது என்று புராணங்கள் கூறுகிறது.
 
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான மகாபாரத போர் ஆடி 1ம்தேதி தொடங்கி 18நாட்கள் நடந்தது. போர் முடிந்த 18வது நாளையே நாம், ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடுகிறோம்.
 
இந்த வகையில் ஆடி முதல்நாள் போர் தொடங்கிய போது, வீரர்கள் விநாயகரையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்ட முறை இது. இந்த அடிப்படையில் தான், தற்போதும் ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் நிகழ்வு நடந்து வருகிறது,’’ என்றனர்.
 
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தேங்காய் சுட்டு வழிபடும் நிகழ்வு நேற்று (17ம்தேதி) உற்சாகமாக நடந்தது. கோயில்கள், வீடுகளில் பக்தர்களும், குழந்தைகளும் தேங்காய் சுட்டு விநாயகரை வழிபட்டனர்.
 
 இதையொட்டி கடைகளில் தேங்காய், அழிஞ்சி குச்சி மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.
 
 
*✍🏼 திண்டுக்கல்: நல்லாம்பட்டி ராசா குளத்தில் மீன்பிடித் திருவிழா*
 
திண்டுக்கல் அருகே பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி எனும் கிராமத்தில் பாரம்பரியமான மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிராம மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழா, வறட்சியின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.
 
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால் ராசா குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதையடுத்து மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், நல்லாம்பட்டி ராசா குளத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வலையில் சிக்கிய மீன்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற பொதுமக்கள், அவற்றை சமைத்து விழாவிற்கு அழைத்திருந்த உறவினர்களுக்கு விருந்து படைத்தனர்.
 
 
*✍🏼 தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவு*
 
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் செய்யாறு, சூளகிரியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
உத்திரமேரூர், செய்யூர் தலா 9 செ.மீ., வந்தவாசி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
 
*✍🏼 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை*
 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
 
   *மிதக்கும் மும்பை; கொட்டித் தீர்த்த கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி: ரயில்,பேருந்து போக்குவரத்து பாதிப்பு*
 
 
   *டெல்லியின் கரோனாவின் தாக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளின் விலை 30 % வரை உயர்வு: உயர்ந்த ரகம் ரூ.2.5 லட்சம்*
 
 
   *இந்தியாவில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்41 ஆயிரத்து 157 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 518 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.*
 
   *உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் நிதி நிறுவனத்தில் 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வளக்கப்பட்ட கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலியாகினர்.*
 
 
   *அமெரிக்க அரசு தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் இருப்பதற்கு தங்கள் மீது பழி சுமத்த கூடாது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.*
 
*அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே காரணம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் விமர்சித்திருந்தது. மேலும் இம்மாதிரியான மக்களின் மன நிலைக்கு சமூக ஊடங்களே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்*
  
 
   *ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கரோனா அதிகரித்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளன*
 
   *பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என்றும், மீறும் திமுகவினர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.*
   
 
   *தமிழகத்தில் துணை வேந்தர்களாக துறை சார்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.*
 
 
   *அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதா? அதை தமிழகத்திலிருந்து தொடங்குவதா?: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்*
 
   *பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது தயங்குவது ஏன் என, திமுக்கு அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்*
 
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
 
 
*📌🧿👆இராமநாதபுரம்*
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். 30க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டி அடித்ததால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
 
*📌🧿📌சென்னையில்* இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாரி மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
 
*📌🧿📌சென்னையில்* 39 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
*📌🧿📌கோவை* பந்தயசாலை, உக்கடம், இராமநாதபுரம்,சுங்கம், புலியகுளம், சிங்காநல்லூர்,பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை.
 
*📌🧿📌விழுப்புரம்*  பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை
 
*📌🧿📌கோவை* செல்வபுரம் பகுதியில் வாசுகி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வளர்ப்பு நாயை தாக்கிய புவியரசு, அப்சல் ஆகியோரை வாசுகி திட்டியதால் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
📌🧿📌*சேலம்* நகரப் பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை ஆண்களுக்கு கொடுத்து மோசடி செய்துள்ளார் நடத்துனர் நவீன்குமார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் ஏறிய வடமாநில ஆண் பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்றுள்ளார்.
 
*📌🧿📌பெரம்பலூர் மாவட்டத்தில்* அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.
 
*📌🧿📌திருச்சி:* மணல் கடத்தல் வாகனங்கள் மற்றும் டிரைவர்களை விடுவித்த விவகாரத்தில் மூத்த அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக, கலெக்டரும் சிக்கியுள்ளாரா? என, உளவுத்துறை போலீசார் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது
 
*📌🧿📌சேலத்திலிருந்து* மதுரைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்
 
   *🌀அமராவதி: ஆந்திராவில் புதிதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து 3,290 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.*
 
*✍🏼 150 அவதூறு டுவிட்டர்கள் ; சித்து பொது மன்னிப்பு கேட்க அமரீந்தர்சிங் கெடு*
 
என்னை பற்றி பதிவிட்டுள்ள 150 அவதுாறு டுவிட்டர்கள் குறித்து சித்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கெடு விதித்துள்ளார்.
 
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்கும் சோனியாவின் முடிவை ஏற்றுக் கொள்வதாக, மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதற்கு முன் சித்துவின் நியமனம் தொடர்பாக நடந்த அரசியல் நடவடிக்கைகளுக்காக தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள அமரீந்தர்சிங், தம்மை குறித்து அவதூறாக பதிவிட்ட 150 டுவிட்டர்களுக்காக சித்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.அது வரை சித்துவை சந்திக்க மாட்டேன். இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
 
*✍🏼 தோழிகள் மாயமான விவகாரம்: மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை*
 
தலைவாசல் அருகே மாயமான தோழிகள் இருவரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையத்தை சேர்ந்தவர், சவுமியா, 19. தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில், பேஷன் டிசைனிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர், பிரித்திகா, 21. இவரும் அதே கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
 
இவருக்கும், சின்ன சேலம் பகுதியை சேர்ந்த, செல்வகுமார், என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை மாதம் ஆகிறது. பிரித்திகா ஆன்லைன் வழியாக படித்து, தேர்வெழுதி வந்த நிலையில், கடந்த 8ல், கல்லுாரிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். அன்று சவுமியாவும் கல்லுாரிக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
 
இருவரும் அன்று வீடு திரும்பாமல் மாயமாகினர். இந்நிலையில் சவுமியாவின் தாயார் செல்வராணி, அளித்த புகாரின் பேரில், தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் நெருங்கிய தோழிகளான இருவரும், பிரித்திகா திருமணம் நடந்த நிலையில் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளனர்.
 
அதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பிரித்திகா, திருமணமான வீட்டில் கணவர் உள்ளிட்ட யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் இருவரும் மாயமாகியுள்ளனர். அவர்கள் மினி ஆட்டோவில் ஏறி சென்றது, நத்தக்கரை டோல்கேட்டில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
 
இருவரது செல் எண்ணும், அனைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தலைவாசல் இன்ஸ்பெக்டர், நாகராஜ் தலைமையில், மூன்று தனிப்படைகள் அமைத்து, மாயமான தோழிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 
 
*✍🏼 'இந்தியாவில் ஓடிடி சந்தை 10 ஆண்டுகளில் 1,250 கோடி டாலர் ஆக உயரும்'*
 
2030-ம் ஆண்டில் இந்திய ஓடிடி சந்தை மதிப்பு 1,250 கோடி ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆர்பிஎஸ்ஏ அட்வைசர்ஸ் நிறுவனம் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, இந்திய ஓடிடி சந்தை மதிப்பு 150 கோடி டாலராக மட்டுமே இருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.
 
இந்தியாவில் தற்போது முதல்கட்ட நகரங்களில் ஓடிடி நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகரங்களில் அடுத்த பத்தாண்டுகளில் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இணைய வேகம், ஸ்மார்ட்போன் போன்றவை ஓடிடியின் வளர்ச்சியில் கணிசமான பங்கினை வகிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
 
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சர்வதேச ஓடிடி தளங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பல தளங்கள் உருவாகி இருக்கின்றன. சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, ஈராஸ் ,ஜீ5, சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட தளங்கள் உருவாகி இருக்கின்றன.
 
தற்போது 150 கோடி டாலராக இருக்கும் இந்த சந்தை 2025-ம் ஆண்டு 400 கோடி டாலராக உயரும். 2030-ம் ஆண்டில் 1,250 கோடி டாலராக உயரும். அதாவது, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 28 சதவீத வளர்ச்சி இருக்கும்.
 
ஆடியோ ஓடிடி சந்தையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கானா, ஜியோ சாவன், ஸ்பாடிபை உள்ளிட்ட சில நிறுவனங்களும் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது இந்தச் சந்தை 60 கோடி டாலர் என்னும் அளவில் உள்ளது. 2025-ம் ஆண்டு 110 கோடி டாலராகவும், 2030-ம் ஆண்டில் 250 கோடி டாலர் சந்தையாகவும் மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

0 Response to "19.07.2021 செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel