இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாகாணங்களுக்கு
இடையிலான பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல்
போக்குவரத்தில் புதிய நடைமுறைகள் விதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும் என
அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாட்டில் புதிதாக 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,002ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊரடங்கை அறிவித்து பொது பேருந்து போக்குவரத்துகளை தற்போது ரத்து செய்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு இலங்கை அரசு மக்களின் தேவை கருதி பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது.
ஆனால் பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை மீண்டும் தொற்று பரவும் அபாயம் நிலவியது. இதனால் மீண்டும் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் உரிய மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் இயக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
0 Response to " இலங்கை அரசு அறிவிப்பு - ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடக்கம் "
Post a Comment