
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்ட 1,000 பேரில் 0.06 பேர் மட்டுமே இறந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா இரண்டாவது அலைகளின் போது ஏற்பட்ட இறப்புகளில் இரண்டு டோஸ் போட்டவர்களின் செயல்திறன் 95 சதவீதமாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களின் செயல்திறன் 82 சதவீதமாகவும் இருந்தது. உருமாறிய டெல்டா வைரஸ் பரவிய நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மக்கள் தடுப்பூசி போட்டு வருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "2 டோஸ் போட்ட 1,000 பேரில் 0.06 பேர் மட்டுமே இறப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்"
Post a Comment