இந்தியாவில் 20வயதிற்கு கீழ் உள்ள 11 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Trending

Breaking News
Loading...

இந்தியாவில் 20வயதிற்கு கீழ் உள்ள 11 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் 20வயதிற்கு கீழ் உள்ள 11 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!


இந்தியாவில் 20 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
 
இந்தியாவில் 20வயதிற்கு கீழ் உள்ள 11 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா பாதிப்பு :
 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்று பரவல் குறைந்தபாடில்லை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலை ஏதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொற்று பரவும் அச்சத்தால் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தங்களின் வேலைகளை இழந்து உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
 
முதல் கொரோனா அலையில் வயதானவர்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் அலையில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொற்றை எதிர்க்க கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டது.
 
மேலும் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாட்டில் 20 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் 11% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு செலுத்தும் கொரோனா தடுப்பூசியை கெடிலா நிறுவனத்திற்கும் 12 வயது முதல் 18 வயதினருக்கு செலுத்தும் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் அனுமதியை பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

0 Response to "இந்தியாவில் 20வயதிற்கு கீழ் உள்ள 11 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel