தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Trending

Breaking News
Loading...

தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள்!

 


தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த களக்காடு பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் களக்காடு மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
 
மின்தடை பகுதிகள்:
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படும் மின்தடை, குறைந்த மற்றும் உயர் மின்னழுத்த பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இப்பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இப்பணிகளை மேற்கொள்ளும் நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் தடை செய்யப்படும். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிகளில் வழக்கமான மின்பராமரிப்பு பணிகள் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
 
அதன்படி களக்காடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் களக்காடு, கோவிலம்மாள்புரம், கருவேலன் குளம், சிதம்பராபுரம், கள்ளிகுளம், தேவநல்லூர், பெருமாள்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 22 ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தகவல் அளித்துள்ளது.

0 Response to "தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel