மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

Trending

Breaking News
Loading...

மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

  


மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
 
போபால் - மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
கொரோனா வழிகாட்டுகள் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.
 
கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
 
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

0 Response to "மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel