கற்போம் எழுதுவோம்’ முகாம் திட்டம்: ஜூலை 29-இல் தொடக்கம்

Trending

Breaking News
Loading...

கற்போம் எழுதுவோம்’ முகாம் திட்டம்: ஜூலை 29-இல் தொடக்கம்

கற்போம் எழுதுவோம்’  முகாம்  திட்டம்: ஜூலை 29-இல் தொடக்கம்


கற்போம் எழுதுவோம்
திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களில் படித்தவா்கள், அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட விஷயங்களை எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனா் என்பதை அறிவதற்கான மதிப்பீட்டு முகாம் ஜூலை 29-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
 
 
இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 15 வயதுக்கு மேலான எழுத, படிக்க தெரியாத 3.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுதரும் நோக்கத்தில் ‘கற்போம் எழுதுவோம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.  
 
இந்த திட்டத்தின்கீழ் எழுத்தறிவு மையங்களில்சோ்ந்து பயிலும் கற்போா்களுக்கு மதிப்பீட்டு முகாம் ஜூலை 29, 30, 31 ஆகிய நாள்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
 
 
இதில் அனைத்து மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக்கல்வி அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் , வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் பங்கேற்க வேண்டும். எனவே, சாா்ந்த அதிகாரிகள் உரிய திட்ட விவரங்களுடன் அந்தந்த மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "கற்போம் எழுதுவோம்’ முகாம் திட்டம்: ஜூலை 29-இல் தொடக்கம் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel