
நுழையும்
முன்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்
பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதில் பொருள்
இலக்கணம் தமிழர்தம் வாழ்விற்கான இலக்கணத்தைப் பேசுகின்றது. இச்சிறப்பு தமிழ்
மொழிக்கே உரியது. நம் தமிழ் மொழிக்கு எனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே
பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றைத்
தொல்காப்பியம் வழி அறிவோம் வாருங்கள்!
நிலம்
தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த
மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை
ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல்
சொல்லொடு தழாஅல் வேண்டும்
தொல்: 1579
மரபுநிலை
திரிதல் செய்யுட்கு இல்லை
மரபு
வழிப்பட்ட சொல்லின் ஆன
தொல்: 1580
மரபு
நிலை திரியின் பிறிது பிறிதாகும்
தொல்: 1581
- தொல்காப்பியர்
சொல்லும்
பொருளும்
விசும்பு – வானம்
மரபு
– வழக்கம்
மயக்கம் - கலவை
திரிதல் – மாறுபடுதல்
இருதிணை
– உயர்திணை,
அஃறிணை
செய்யுள்– பாட்டு
ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால்,
ஒன்றன்பால், பலவின்பால்
பாடலின்
பொருள்
இவ்வுலகம்
நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.
இவ்வுலகில் தோன்றிய அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் கலவையே ஆகும். இவ்வுலகப் பொருள்கள்
அனைத்தும் ஒன்றேயானாலும், அவற்றைத்
தமிழ்மொழியில் இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் மரபு.
திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை
நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே
செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்
மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு
மாறினால் பொருள் மாறிவிடும்.
அளபெடை
புலவர்கள்
சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு
பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள ”வழாஅமை, தழாஅல்” ஆகிய சொற்களில் உள்ள ” ழா ” என்னும் எழுத்தை
மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை “உயிரளபெடை”
என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில்
விரிவாக அறிந்துகொள்ளலாம்.
நூல்வெளி
தொல்காப்பியத்தின்
ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியம் தமிழ்மொழியின் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றித்
தமிழரின் வாழ்க்கைக்கும் (பொருள்) இலக்கணம் வகுத்த பெருநூல். மூன்று அதிகாரங்களையும்,
அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களையும் கொண்டுள்ளது.
தெரிந்து தெளிவோம்
|
இளமைப்
பெயர்கள் |
ஒலி
மரபு |
|
புலி
- பறழ் |
புலி
- உறுமும் |
|
சிங்கம்
- குருளை |
சிங்கம்
- முழங்கும் |
|
யானை
- கன்று |
யானை
- பிளிறும் |
|
மாடு - கன்று |
மாடு - கதறும் |
|
கரடி
- குட்டி |
கரடி
- கத்தும் |
கற்பவை
கற்றபின்
1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
(எ.கா.
) காகம் கரையும்
2. ஐம்புலன்களும் அவற்றின் பயன்களும் குறித்துத் தகவல் சேகரித்து வருக.
3. ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப்
படத்தொகுப்பு உருவாக்குக. .
மதிப்பீடு
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _________
பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ)
நீரில்
2. இயற்கையைப் போற்றுதல்
தமிழர் __________.
அ) மரபு
ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ)
இரண்டு + திணை ஆ) இரு + திணை இ) இருவர் + திணை ஈ)
இருந்து + திணை
4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது +
பால் ஈ) ஐ + பா
குறுவினா
1.
உலகம் எவற்றால் ஆனது?
இவ்வுலகம் நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகிய ஐந்தும்
கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் கலவையே ஆகும்.
2.செய்யுளில் மரபுகளை ஏன்
மாற்றக்கூடாது?
தமிழ்
மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு
மாறினால் பொருள் மாறிவிடும்.
சிந்தனை
வினா
நம்
முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள்
கருதுகிறீர்கள்?
திணை,
பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல்
வேண்டும். இம்மரபான சொற்களையே நம் முன்னோர் செய்யுளிலும் பயன்படுத்தினர்.
தமிழ்
மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு
மாறினால் பொருள் மாறிவிடும் என்பதற்காகவே மரபுகளைப் பின்பற்றி இருப்பர்
என்று கருதுகிறேன்.
0 Response to "8 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ் மொழி மரபு - தொல்காப்பியம் - தொல்காப்பியர்"
Post a Comment