புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம் - மற்றும் 8.7.2021 முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம் - மற்றும் 8.7.2021 முக்கிய செய்திகள்

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம் - மற்றும்  8.7.2021 முக்கிய செய்திகள்


 

*🔵 கேந்திரிய வித்யாலயா தமிழ் நீக்கம்.. காலாவதியான சமஸ்கிருதத்தை 135கோடி பேர் மீது திணிக்க முயற்சி..வைகோ.*

 

      _சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ் மொழியை நீக்கி சமஸ்கிருதம் விருப்பப் பாடமாக்கப்பட்டுள்ளது என்றும் வெறும் 24,000 பேர் பேசும் மொழியை, 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயல்வதா என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்._

 

*🔵 மோடியின் புதிய அமைச்சரவை...*

 

      _டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 50 வயதுக்குக் குறைவான 14 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்._

 

*🔵 தமிழகத்தில் எல் முருகனை தவிர வேறு யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு இல்லை? ஏன்?*

 

      _டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த எல்முருகன் ஒருவரை தவிர வேறு யாருக்கும் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்த முறை வழங்கப்படவில்லை. அமைச்சர் பதவிக்காக பெரிதும் காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரவீந்திரநாத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடைபெற உள்ளது._

 

*🔵 பரபரப்பை கிளப்பிய எல்.முருகன் பயோ டேட்டா! விளக்கம் அளிக்குமா மத்திய அரசு?*

 

     _டெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்ற உள்ள எல் முருகன் பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதில், கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது._

 

*தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 27 மாவட்டங்களில் 100க்கும் கீழ் குறைந்தது; 8 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..!*

 

* தமிழகத்தில் மேலும் 3,367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,06,848 ஆக அதிகரித்துள்ளது.

 

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 3,704 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 24,39,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,196 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

* சென்னையில் இன்று ஒரே நாளில் 196 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 534037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

* தமிழகத்தில் இதுவரை 3,39,41,304 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,51,844 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

* தமிழகத்தில் 34,076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,65,101 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,950 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,41,709 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,417 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

 

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 272 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 203.

 

 

*✍🏼 தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை*

 *பிரதமர் மோடி அரசு 2.0-ன் முதலாவது அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்..!*

 
*புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:*
 
* மராட்டிய முன்னாள் முதலமைச்சர் நாராயணன் ராணே ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரான வீரேந்திரகுமார் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
 
* காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசந்திர பிரசாத் சிங் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் ஐஏஎஸ் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* லோக்ஜனசக்தியைச் சேர்ந்த பசுபதி குமார் பராஸ் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.
 
* ஒன்றிய இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
 
* முன்னாள் உள்துறை செயலாளர் ராஜ்குமார் சிங் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* முன்னாள் உள்துறை செய்யாலர் ராஜ்குமார் சிங் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* இணையமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
 
* கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்ட்வியா கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
 
* ராஜஸ்தானைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பூபேந்தர் யாதவ் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* வேளாண்துறை அமைச்சரான புருஷோத்தம் ரூபாலா கேபினட் அமைச்சராக பதவியேற்றனர்.
 
* உள்துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்!
 
* உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சவுதரி ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா பட்டேல் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்!
 
* உ.பி. மாநில முன்னாள் அமைச்சரான சத்தியபால் சிங் பகேல் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
* தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.
 
மன்சுக் மன்தாவியா, பூபேந்தர் யாதவந், பங்ஜக் சவுத்ரி, ராஜீவ் சந்திரசேகர், சோபா கராண்டஜே, பானு பிரதாப் வர்மா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அனுபமா தேவி, நாராயணசாமி, கவுஷல் கிஷோர், அஜய் பட், பி எல் வர்மா, அஜய் குமார், சவுகான் தேவ்சிங், பகவந்த் கூபா, கபில் மோரேஷ்வர் பாட்டீல், சுஷ்ரி பிரதிமா பவுமிக், சுபாஷ் சர்கார், பகவத் கிஷன் ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், பாரதி பிரவீன் பவார், பிஷ்வேஸ்வரர் துடு, சாந்தனு தாகூர், முஞ்சபரா மகேந்திர பாய், ஜான் பார்லா, நிஸித் பிரமானிக் உள்ளிட்டோரும் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
 
 
*தஞ்சாவூர்*
 
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைந்துள்ளது.
 
இந்த பாலம் வலுவிழந்ததை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 
இதனால் கடலூர், விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று பாலம் வழியே இயக்கப்பட்டு வருகின்றன.
 
இதன் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில் அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
 
அரசு தலைமை கொறடா கோவி. செழியன் கொடியசைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
 
3 ஆண்டுகளுக்கு பின் அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் இருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் முதற்கட்டமாக நகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்தடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
*புதுடெல்லி*
 
குடியரசுத் தலைவரால் எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் கர்நாடகா தாவர்சந்த் கெல்லாட்,  இமாச்சலப் பிரதேசம் ராஜேந்திர அர்லேகர், திரிபுரா சத்யதேவ் நாராயண் ஆர்யா ஆகியோர் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே, உத்தரகாண்ட் ஆளுநராக உள்ள பேபி ராணி மவுரியா எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக உள்ளார்.
 
மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், சட்டீஸ்கர் மாநில ஆளுநர் அனுஷுயா உய்கே ஆகியோர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவராவர்.
 
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பீகார் மாநில ஆளுநர் பாகு சவுஹான், ஜார்க்கண்ட் ரமேஷ் பைஸ், அரியானா பண்டாரு தத்தாத்ரேயா, சிக்கிம் கங்கா பிரசாந்த் சவுராசியா, தெலங்கானா தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஆவர்.
 
ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் மேற்குவங்கம் ஜக்தீப் தான்கர், குஜராத் அச்சார்யா தேவ்ரத், மேகலாயா சத்யபால் மாலிக் ஆகியோர் உள்ளனர்.
 
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டியல் கேரளா ஆளுநர் ஆரிப் முகம்மது கான், மணிப்பூர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் அவர் குறிப்பிடத்தக்கவராவர் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
*மங்களூரு*
 
வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட கேரள பெண்ணிடம் நட்பு கொண்ட கர்நாடக இளைஞர், பணம் பறிக்கும் கும்பலால் ரூ. 30 லட்சத்தை பறிகொடுத்தார். 
 
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் பந்த்வாலைச் சேர்ந்த தனீஷா ராஜ் என்ற இளம்பெண், கர்நாடகா மாநிலம் முதானூரைச் சேர்ந்த அப்துல் நசீர் என்ற இளைஞருக்கு வாட்ஸ்அப்பில் ‘ஹாய் செய்தி அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக அடிக்கடி பல்வேறு தகவல்கள், ஆபாச படங்களை அனுப்பி உள்ளார்.
 
இதனால், இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. பின்னர், வீடியோ கால் மூலம் இருவரும் பேசிக் கொண்டனர். ஒரு நாள் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர்.
 
அதன்படி, குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, குறிப்பிட்ட இடத்திற்கு அப்துல் நசீர் வந்தார்.
 
பின்னர் தனீஷா ராஜூடன் சேர்ந்து அவர்களது நண்பர்களான கோட்டையத்தைச் சேர்ந்த கட்டப்புனி முகமது ஷாஃபி, அட்டிக்கேரைச் சேர்ந்த அசார், சவனூரை சேர்ந்த அசார், நாசிர் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
 
 அவர்கள், அப்துல் நசீரிடம் ரூ .30 லட்சம் கோரினர். அதிர்ச்சியடைந்த அவர், ‘எதற்காக ரூ. 30 லட்சம் என்று கேட்ட போது, ‘பணம் கொடுக்காவிட்டால் தனீஷாவுடன் வீடியோ காலில் பேசியது, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டினார்.
 
அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூ .30 லட்சத்தை இரண்டு தவணையாக உரிய சாட்சிகளை வைத்துக் கொண்டு கொடுத்தார். பின்னர், அதனை கொண்டு புத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
 
அதையடுத்து  போலீஸ் டிஎஸ்பி குமாரின் தலைமையிலான போலீசார், கேரளாவை சேர்ந்த முதல் குற்றவாளியான தனீஷா ராஜ், முகமது ஷாஃபி, அசார், நசீர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ .7.5 லட்சம் மீட்கப்பட்டது. மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
 
 இவ்விவகாரத்தில், மேலும் இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 
 
*டெல்லி*
 
செப்.5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என  தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
 
நீட் தேர்வு செப்.5-ம் தேதி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
 
நீட் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.
 
 
*திருமலை*
 
*திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:*
 
திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சரவணா மற்றும் சுந்தர்தாஸ் ஆகியோர் வேலையில்லா இளைஞர்கள் 15 பேரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அவர்கள் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
 
கடந்த காலங்களிலும் இதேபோல் தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
 
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 எனவே, தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு உரிய முறையில் அறிவிப்பு வெளியிடப்படும்.
 
தேவஸ்தான இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். எனவே, யாராவது பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறினால் நம்ப வேண்டாம்.
 
மேலும், பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
*சென்னை*
 
வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யும் ஒன்றிய அரசின் செயலால் தேயிலை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இதற்கு தீர்வு காண ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
*அரியலூர்*
 
அரியலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
கடம்பூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாரிமுத்து,  இவர் அரசு உழவர் பாதுகாப்புத் திட்ட நிவாரணம் பெற விண்ணப்பித்தவரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
 
 
   *டெல்லி: ஒன்றிய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்துள்ளனர். தகவல் தொழில்நுபிபத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா செய்தார். 12 அமைர்ச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் மளிகை ஏற்றுக்கொண்டுள்ளது.*
 
 
   *சென்னை: வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யும் ஒன்றிய அரசின் செயலால் தேயிலை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது*
 
 *முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காதவர்களுக்கும் உரிய காலத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.*
  
 
 
   *பாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.*
 
 
   *மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுவரும் நிலையில், புதியவர்களும் வழிவிடுவதாகக் கூறி மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் விலகியிருப்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.*
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
 
*_________________________*
 
*நாமக்கல்:* செய்தி- மக்கள் தொடர்புத் துறை மாவட்ட அலுவலகம் சார்பில், பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவிட்-19 தடுப்பு குறும்படங்கள் டிஜிட்டல் வாகனத்தில் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
______________________
 
*தேனி:* லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.
______________________
 
*மதுரை* மாநகராட்சி மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேதுபதி பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமினை மாநில அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.
______________________
*திண்டுக்கல் மாவட்டம்* ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ஜுனன், தினேஷ் குமார், நவீன் மூவரிடம் இருந்தும் 17 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
______________________
*அரியலூர் மாவட்டத்தில்* லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கடம்பூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மாரிமுத்து,  இவர் அரசு உழவர் பாதுகாப்புத் திட்ட நிவாரணம் பெற விண்ணப்பித்தவரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்
______________________
 
*நீலகிரி* உதகமண்டலம்  மற்றும் அதன் சுற்றுப்புற  பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக  பெய்தது. கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
______________________
 
*நீலகிரி* இன்று உலக சாக்லேட் தினத்தையொட்டி  உதகமண்டலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல வகையான சாக்லேட்கள். பயணிகள் வராததால் வெறிச்சோடியது
______________________
 
*தருமபுரி:*.ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தல் தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குனர் திரு சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
______________________
*தருமபுரி மாவட்டம்* நரிப்பள்ளி பகுதியில் தற்போது மழை பெய்தது.
______________________
*நாமக்கல் மாவட்டத்தில்* பட்டணம், புதுப்பட்டி  உள்ளிட்ட 5 பேரூராட்சிகளில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ்  பொதுமக்களிடமிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பெற்றுக் கொண்டார்.
______________________
 
 
*மதுரை மாவட்ட* ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அம்ரூத் திட்டத்தில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து 125 MLD குடிநீர் பெறும் திட்டம் குறித்து  நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன்  தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
______________________
 
*✍🏼நீலகிரி மாவட்ட* கூடுதல் ஆட்சியர்  அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக  நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் , குன்னூர் & கோத்தாரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  ரூ 1.03 கோடி வங்கி கடன் உதவிக்கான  காசோலைகளை ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
______________________
 
*சென்னை* சிட்கோ அலுவலகத்தில் இன்று கருணை அடிப்படையில் ஆறு வாரிசு தாரர்களுக்கு தொழில் வணிக துறையில் பணி நியமன அணைகளை ஊரக தொழில் துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன் வழங்கினார்.

0 Response to "புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம் - மற்றும் 8.7.2021 முக்கிய செய்திகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel