9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு.

Trending

Breaking News
Loading...

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு.

 


 





ஆணை :
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 25.02.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் , சட்டமன்ற பேரவை விதி 110 - ன் கீழ் , வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கலவி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் , தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும் , பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்தும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் , 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9 - ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10 , 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர் எனவும் , இவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll ) , சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் , அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கியும் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. 
 
 
அதனடிப்படையில் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில் , கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் 9 , 10 , மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும் , முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக 08.05.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் கீழ்க்காணுமாறு அச்சிட்டு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனுமதி வேண்டியுள்ளார். 
 
 
 அரசாணை ( நிலை ) order.48 , பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் 25.022021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயின்ற அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி மேற்காண் தேர்வர் பின்வரும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் எனச் சான்றளிக்கப்படுகிறது " என்ற வாசகத்தை அச்சிட்டு , ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான கலத்தில் மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி ( Pass ) என பதிவு செய்து சான்றிதழ் வழங்கலாம். 
 
 
என மேற்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்த அரசு , அதனை ஏற்று , தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் , பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் மேலே பத்தி -2 ல் குறிப்பிட்டுள்ளவாறு அச்சிட்டு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.

0 Response to "9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel