வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

Trending

Breaking News
Loading...

வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

 


 

 


சோம்பு

சோம்பு பொதுவாக நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கும் சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் சாப்பிடுவதற்கு முன் சிறிதளவு சோம்பை வெறும் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடுங்கள். பின் உணவருந்த செல்லுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணம் ஆகும். அதேபோல் துர்நாற்றம் வராது.
 
ஏலக்காய்:
 
ஏலக்காய் பொதுவாக நல்ல நறுமணம் வீசும் உணவு பொருள். உணவின் மனத்தை அதிகரிக்க ஏலக்காய் அவ்வப்போது சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்த முடியும். ஆகவே சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சாதாரண நேரங்களிலோ ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறைந்து விடும்.
 
பேக்கிங் சோடா:
  
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து தொடர்ந்து வாய் கொப்பளித்து வந்தாலும் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறையும்.
 
துளசி:
 
துளசி ஒரு சிறந்த மூலிகை செடி, பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சித்த மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு சிறந்த மூலிகை செடி என்று சொல்லலாம். எனவே  வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறைய தொடங்கும்.

0 Response to "வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்? "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel