டோக்கியோவில்
நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய்
சானு அவர்களுக்கு மாநில காவல்துறையில் கூடுதல் எஸ்.பி பதவி வழங்கி மணிப்பூர் மாநில
அரசு கௌரவித்துள்ளது.
வெள்ளிப்பதக்கம்:
32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டில் ஜப்பானின் தலைநகரான
டோக்கியோவில் தற்போது ஜூலை 23ம் தேதி முதல்
தொடங்கப்பட்டுள்ளது. தொடர்நது ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக்
போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிகள் கடந்த 2020ம் ஆண்டு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோரோனா
பரவல் பாதிப்புகள் காரணமாக நடப்பாண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டு
போட்டிகள் தொடக்கத்தில் பளுதூக்கும் போட்டிக்காக இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை
சேர்ந்த மீராபாய் சானு கலந்து கொண்டார்.
மீராபாய் சானு முதலில், 49கிலோ எடைப்பிரிவில் கிளீன் அன் ஜர்க் பிரிவில் முதல்
மற்றும் இரண்டாவது பிரிவில் தலா 110கி, 115கி எடையை தூக்கினார். அதன்பின்னர், மூன்றாவதாக 117 எடையை அவரால் சரியாக தூக்க
முடியவில்லை. அதன்பின்னர், ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும் 87 கிலோ எடையை வெற்றிகரமாக
தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவர் இன்று போட்டிகளை முடித்து விட்டு
இந்தியாவிற்கு திருப்பியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒலிம்பிக் போட்டிகள் சவாலாக இருந்ததாகவும், கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்த டோக்கியோ
ஒலிம்பிக் போட்டிக்காக தானும், தனது பயிற்சியாளரும்
தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் இந்திய நாட்டிற்கான
முதல் வெள்ளி பதக்கத்தை மீராபாய் சானு வென்றதற்காக அவரை பெருமை படுத்தும் விதமாக
மணிப்பூர் காவல்துறையின் கூடுதல் எஸ்.பி ( விளையாட்டு) பதவி வழங்குவதாக மாநில அரசு
அறிவித்துள்ளது.
0 Response to "ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சானுவுக்கு காவல்துறை எஸ்.பி பொறுப்பு – மாநில அரசு அறிவிப்பு!!"
Post a Comment