
சென்னை: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை
இணைக்க வேண்டும்.வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு இந்த இணைப்பு அவசியமாகும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை
இணைப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள்
மட்டுமே தற்போது வெளிநாடு சென்று வேலை செய்ய முடியும், உயர்கல்வி படிக்க முடியும் என்ற நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை இணைக்க வேண்டியது
அவசியமாகும்.
அறிவிப்பில்,
கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் https://selfregistration.cowin.gov.in/
என்ற
கோவின் செயலிக்குள் லாக் இன் செய்து செல்ல வேண்டும். ஓடிபி நம்பர் தடுப்பூசி
செலுத்திய போது அளித்த செல்போன் எண்ணை சரியாக பதிவிட வேண்டும். தொலைபேசி எண்ணுக்கு
வரும், ஒரு முறை
பயன்படுத்தப்படும் ஓ.டி.பி எண்ணை பதிவிட வேண்டும். பாஸ்போர்ட் விபரங்கள் உள்ளே நுழைந்த பிறகு
வலது பக்கம் உள்ள Raise an
issue என்ற
தெரிவை அழுத்தவும். அதில் Add
passport details என்பதை தேர்வு செய்யவும். யாருக்கு பாஸ்போர்ட் விவரங்களை
இணைக்க வேண்டுமோ அவரது பெயரை தேர்வு செய்யவும். அதைத் தொடர்ந்து பாஸ்போர்ட்
விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.
விபரங்கள் சரியானவையா அந்த விவரங்கள் சரியானவை என்று சுய
ஒப்பம் அளித்த பிறகு அதனை சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விவரங்கள்
பதிவேற்றப்பட்டு வருகிறது என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும். அதன் பின்னர், முகப்பு பக்கத்துக்குச் செல்லவும்.
வேண்டுகோளின் நிலையை அறிவதற்கான வசதியை தேர்வு செய்யவும். உங்களது விவரங்கள்
வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற வாசகங்கள் திரையில் தோன்றும்.
மீண்டும் முகப்பு
பக்கத்துக்கு வந்து பாஸ்போர்ட் விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு இது அத்தியாவசியம்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பது எப்படி - சுகாதாரத்துறை விளக்கம்"
Post a Comment