இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், மக்கள் வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.நீண்ட கடன் வரலாற்றுடன்,சிறந்த சிபில் ஸ்கோர் இருக்கக்கூடிய ஒருவருக்கு மிக எளிதாகக் கடன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாது சிபில் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறையவும் வாய்ப்புண்டு. எனவே ஒருவர் தனது சிபில் ஸ்கோரை சிறப்பாகப் பராமரிப்பது அவசியமாகிறது.
*தாமதமாக EMI செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
*கடனில் பகுதியளவு தொகையை முன்கூட்டியே செலுத்த முயற்சிக்கலாம்.
*தேவையில்லாத நேரத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
*கடனுக்கான இணை கையொப்பமிடுவதை கவனமாகத் தவிர்க்கலாம். முன்பே கையொப்பமிடப்பட்ட கடன்களின் திரும்ப செலுத்து முறையை கண்காணிக்க வேண்டும்.
*கடன்களை சிறப்பாக நிர்வகிக்க, தேவைப்படும்போது ஒருங்கிணைப்பு கடன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
*எப்போதுமே கடனுக்கான திருப்பிச் செலுத்தும் திட்டத்தை வைத்திருப்பது அவசியம்.
*கிரிடிட் கார்டுகள் சார்ந்த பணம்செலுத்தல் நினைவூட்டல்களை அமைத்துக் கொள்வது அவசியம்.
*கிரிடிட் கார்டுக்கு சரியான பயன்பாட்டு வரம்பு வைப்பது அவசியம்.
சிபில் அறிக்கையை வருடத்திற்கு ஒருமுறையாவது பார்ப்பது அவசியம். அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உரிய நிறுவனங்களை அணுகி தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
*சிபில் ஸ்கோரைப் பராமரிக்க ஒரேவிதமான கடன்களைப் பெறாமல் வெவ்வேறு வகையான கடன்களை (கடன் கலவை) தேர்வுசெய்வது சிறந்தது.
*கடன் பயன்பாட்டு விகிதத்தை மொத்த கடன் வரம்பில் 30% க்கும் குறைவாக பராமரிக்க வேண்டும்.
0 Response to "உங்கள் சிபில் ஸ்கோர் ஐ உயர்த்துவது எப்படி.. டிப்ஸ் "
Post a Comment