நாட்டில் COVID-19
க்கு எதிரான
குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகஸ்ட் முதல் தொடங்கப்படும் என்று பாராளுமன்ற
கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி:
உலகம் முழுவதும் கொரோனா
பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பெரியவர்களை தொடர்ந்து
குழந்தைகளையும் கொரோனா தொற்று அதிக அளவில் தாக்க உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்
எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து
மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்
பணிகளை தொடங்கியுள்ளது.
கோவிட் -19 வைரசுக்கு எதிராக
குழந்தைகளுக்காக நான்கு வகையான தடுப்பூசிகள் இந்தியாவில் சோதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் முதலில் 12 முதல் 18 வயது வரையிலான
குழந்தைகளுக்கு கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. புது தில்லி
மற்றும் பாட்னாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்)
நடத்தப்படும் இந்த சோதனைகளில் மொத்தம் 525 குழந்தைகள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ வல்லுனர்களின் கூற்றுப்படி, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்காக குழந்தைகள்
மற்றும் பதின்ம வயதினருக்கு COVID-19 தடுப்பூசிகளை கண்டிப்பாக
செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் மன்சுக் மண்டவியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
0 Response to "ஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு தகவல்!"
Post a Comment