ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மூலிகைச் செடியையாவது வளர்க்க வேண்டும்.

Trending

Breaking News
Loading...

ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மூலிகைச் செடியையாவது வளர்க்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மூலிகைச் செடியையாவது வளர்க்க வேண்டும்.

 


பழங்காலத்தில் நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க காடுகளில் இயற்கையாகவே கிடைத்த மூலிகை செடிகளின் வேர்
, பழம், காய், விதைகளை பயன்படுத்தினர். அப்போது வாழ்ந்த சித்தர்களும், தன்வந்திரிகளும் அவர்களுடைய அறிவுத்திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளை கண்டறிந்து, அவற்றின் சிறப்பு மற்றும் பலன்களை ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர்.
 
காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் கொடைக்கானலுக்கு பெயர் போன திண்டுக்கல்லில் மூதாதையர்கள் கூறிச் சென்ற ஏராளமான மூலிகைகள் இன்றும் காடுகளில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி பலர் சிகிச்சை மேற்கொண்டும், ஏற்றுமதி செய்தும் பிழைத்து வருகின்றனர். பக்கவிளைவில்லா சிகிச்சை தரும் மூலிகைகள் நிறைந்த மண்ணில் நாம் வாழ்வது பெருமைதான். அதனால் அவற்றால் இவ்வுலகமே பயன்பெற, நம் மண்ணின் வளம் காத்து, மனிதகுல நலம் காக்க நம்மில் பலரும் முன்வரவேண்டும்.
 
தமிழகத்தில் வணிக ரீதியாக பயிரிடப்படும் மூலிகைகளாக கண்வலிக்கிழங்கு, கோலியஸ் போன்றவை விளங்குகின்றன. வறட்சியை தாங்கி வளரக்கூடிய இவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல்லில் அதிகளவில் பயிராகிறது. இந்த மூலிகை வாதம், மூட்டுவலி, தொழுநோய், குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள், விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இதே போல், கோலியஸ் கிழங்கு உடல் எடையை குறைக்க, உடல் உபாதைகள், கண்வலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
மூலிகையும், பயனும்
 
  • துளசி- - மூக்கடைப்பு, சுவாசக்கோளாறு
  • துாதுவளை- - சளி, ஆஸ்துமா, வறட்டு இருமல்
  • வில்வம்- - கொழுப்பை குறைக்கும், ரத்த கொதிப்பு
  • சிறுகுறிஞ்சான்- - சர்க்கரை நோய்
  • வல்லாரை- - நினைவாற்றல், நரம்பு தளர்ச்சி
  • ஆவாரம்பூ- - இதயம் பலப்படும்
  • கண்டங்கத்திரி- - மார்பு சளி, இளைப்பு
  • திப்பிலி- - உடல் வலி, அலுப்பு, சளி, இருமல்
  • நிலாவரை- - மலமிளக்கி, குடற்புண்
  • கறிவேப்பிலை- - கண்பார்வை, கூந்தல் வளர்ச்சி
  • வேம்பு- - குடற்புழு, அரிப்பு, சர்க்கரை நோய்
  • கரிசலாங்கண்ணி- - காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சி
  • கீழாநெல்லி- - மஞ்சள் காமாலை, ரத்தசோகை நோய்
  • முடக்காத்தான்- - மூட்டு வலி, முழங்கால் வலி, வாதம்
  • முருங்கை விதை- - ஆண்மைக் குறைபாடு
  • மணத்தக்காளி- - குடல், தொண்டை, வாய்ப் புண்கள்
  • ஆடாதொடை- - சுவாசக் கோளாறு, ஆஸ்துமா
  • நன்னாரி- - உடல் குளிர்ச்சி, நாவறட்சி
  • நெருஞ்சி- - சிறுநீரக கோளாறு, காந்தல்
  • சோற்று கற்றாழை- - உடல் குளிர்ச்சி, முகப்பொலிவு
  • நெல்லிக்காய்- - பற்கள் பலப்படும்
  • கடுக்காய்- - குடற்புண், மலமிளக்கி
  • ஜாதிக்காய்- - நரம்பு தளர்ச்சி, ஆண்மை சக்தி
  • வெந்தயம்- - வயிறு, வாய் புண், சர்க்கரை நோய்
  • செம்பருத்தி- - அனைத்து இருதய நோய்களும்
  • சிறியாநங்கை- - விஷக்கடிகள், சர்க்கரை நோய்-------
வீடுகளில் மூலிகை தோட்டம்
 
அரசு பாதுகாக்கும் என்றிருக்காமல் நாமும் மூலிகைப் பயிர்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் துளசி, துாதுவளை, பிரண்டை, கண்டங்கத்திரி போன்றவை அடங்கிய சிறு மூலிகைப்பயிர் தோட்டம் அமைக்கலாம். மூலிகைகளால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. விவசாயிகள் வணிக ரீதியாக மூலிகைப்பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்றால், மூலிகைகள் வாங்குதல், விற்பனை செய்தல், ஏற்றுமதி உள்ளிட்ட மார்க்கெட்டிங் விவரங்களை அறிந்த பின்னரே சாகுபடியில் ஈடுபடலாம்.

0 Response to "ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குறைந்தது ஒரு மூலிகைச் செடியையாவது வளர்க்க வேண்டும்."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel