சட்டமன்றத் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன் என அறிவித்தார் சசிகலா. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக வந்துள்ள நிலையில் அதிமுக, அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து அரசியலில் மீண்டும் களமிறங்கப் போவதாக கூறி வருகிறார்.
ஜெயலலிதாவின் உண்மையானத் தொண்டர்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அதன் பின்னர் அதிமுகவில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.அதிமுகவிலோ வேறு மாதிரி கூறுகிறார்கள். “சசிகலா தான் விடுதலையானதும் பெரிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்த்தார். அமமுக டிடிவி தினகரனும் அப்படி ஒரு அதிசயம் நிகழும் என எண்ணினார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அதிமுகவிலிருந்து ஒருவர்கூட சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. தேர்தலுக்கு முன்னரும் அதுதான் நிலைமை, தேர்தலில் தோற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த போதும் அதுதான் நிலைமை. இது அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மட்டும் மாறிவிடாது.
0 Response to "ஜெ.நினைவிடம் கிளம்பிய சசிகலா: இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கா மேடம்? "
Post a Comment