வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்!

Trending

Breaking News
Loading...

வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்!

வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்!


தற்போது நாடு முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்துள்ளது.
 
வீட்டுக்கடன்:

கொரோனா தொற்றின் பாதிப்புகளின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளது. பல நிறுவனங்கள் பொருளாதார சரிவை ஈடு செய்ய முடியாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. 
 
அந்த வகையில், இதற்கு முன்னர் வீட்டுக்கடனுக்கான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் வட்டி விகிதம் 6.90% ஆக இருந்த நிலையில் தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் 6.66% ஆக வீட்டுகடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். மேலும், மாத ஊதியம் பெரும் நபர்களுக்கு மேட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகை வழங்கப்படும்.
 
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் கிடையாது. ஒவ்வொருவரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப கடன் தொகை கிடைக்கும். அதேபோல், 800 க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால், அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதேபோல், பஞ்சாப் சிந்த் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி 6.65% வட்டியும், எஸ்பிஐ வங்கி 6.70% வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா , ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகிய வங்கிகளின் 6.75% வட்டி விகிதமும் நிர்ணயித்திருக்கிறது.

0 Response to "வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel