
இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி படிப்படியாக
கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் தகவல்.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பயன்பாடு கடந்த சில
ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கான கிரிப்டோ கரன்சி மசோதா
ரெடியாகியுள்ள நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரும் என
எதிர்பார்க்கப்பட்டது.
ஜூன் 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆனால், கிரிப்டோ
கரன்சி மசோதா விவாதத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்திய கிரிப்டோ
முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை
அறிமுகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்
வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் சொந்த டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக
அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி
சங்கர் தெரிவித்துள்ளார்.
பிட்காயின் மீண்டும் ஏற்றம்.. மற்ற காயின்களும் பாசிடிவ்!
உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகள்
தங்களுக்கான சொந்த டிஜிட்டல் கரன்சியை (CBDC) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் சொந்த டிஜிட்டல் கரன்சியை உருவாக்க முடிவு
செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், மற்ற கிரிப்டோ கரன்சிகளில் இருக்கக்கூடிய அதீத ரிஸ்க் போல
அல்லாமல் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி நுகர்வோரையும் பொதுமக்களையும்
பாதுகாக்கும் வகையில் இருக்குமென ரிசர்வ் வங்கி துனை ஆளுநர் ரபி சங்கர்
தெரிவித்துள்ளார்.
0 Response to "டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தீவிர முயற்சி* இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோ கரன்சி.. களமிறங்கிய ரிசர்வ் வங்கி!"
Post a Comment