பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

Trending

Breaking News
Loading...

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

 


தமிழகத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழத்தில் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாமல் இருந்தால் அபாரதத்துடன் பணத்தினை செலுத்தி விட்டு தங்களது சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய அறிவிப்பு
 
தமிழகத்தில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று தான், பாரதியார் பல்கலைக்கழகம். இங்கு மாணவர்களுக்கு பல விதமான பாடப்பிரிவுகளில் பட்டயபடிப்புகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக, தொலைதூர கல்வியும் வழங்கப்பட்டு வருகின்றது. தொலைதூர கல்வியின் மூலமாக பல மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெற்று வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு தொலைதூர கல்வி பயிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் கல்வி கட்டணம் செலுத்தாமல் தேர்வுகளை எழுதி உள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உடனடியாக அபாரதத்துடன் கூடிய கட்டணத்தினை செலுத்தி விட்டு தங்களது சான்றிதழ்களை பெற்று கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
அதே போல் இனி வரும் காலங்களில் தேர்வு கட்டணம் மற்றும் கல்வி கட்டணம் செலுத்தாமல் மாணவர்கள் தேர்வுகளை எழுத முடியாது என்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பல்கலை நிர்வாகம் இந்த அறிவிப்பினை தெரிவித்துள்ளதால் மாணவர்கள் உடனடியாக தங்களது கல்வி கட்டணத்தினை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

0 Response to "பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel