
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு தேர்வு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு நாளை வெளியிடப்பட உள்ளது.
இந்த நுழைவு தேர்வுக்காக மொத்தம் 2,41,7009 பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். 11,182 மையங்களில் 47,320 மாணவர்களை தேர்வு செய்வதற்கான சோதனை நடத்தப்படும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. இந்த நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை முதல் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து அட்மிட் கார்டுகள் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Response to "நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை நுழைவுச்சீட்டு – நாளை வெளியீடு! "
Post a Comment