
தமிழகத்தில் சென்னை
மாநகராட்சியில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது
வரை 1,01,757
மாணவர்கள் புதிதாக மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கை உயர்வு :
தமிழகத்தில் கடந்த வருடம்
முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு
தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக மாணவர்களின் நலன் கருதி
பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. வகுப்புகள் ஆன்லைன் மூலம்
நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பள்ளிகளை திறக்க திட்டமிடும் நிலையில் கொரோனா
இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது அதனால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும்
பள்ளிகளை திறக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை குறித்த
அச்சம் நிலவுகிறது.
கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட
ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்த நிலையில்
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தி
வருகின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த
இக்கட்டான காலகட்டத்தில் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாததால்
பெரும்பாலானோர் மாநகராட்சி பள்ளிகளை நாடுகின்றனர். கடந்த மாதம் முதல் 2021-22
ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
கடந்த வருடம் முதல் மாநகராட்சி
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது. மொத்தம் 281 மாநகராட்சி
பள்ளிகள் உள்ளது. இதில் 2020-21 கல்வியாண்டில்
மாநகராட்சி பள்ளிகளில் 27,311 மாணவர்கள் புதிதாக
சேர்ந்தனர். நடப்பாண்டில் புதிதாக 1,01,757 மாணவர்கள் மாநகராட்சி
பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களில் 19,038 பேர்
தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இருந்து வெளியேறியவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் மாணவர்கள்
சேர்க்கை நடைபெறும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Response to "சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – புதிய சாதனை!"
Post a Comment