பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-ஆலோசனை..

Trending

Breaking News
Loading...

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-ஆலோசனை..

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-ஆலோசனை..

  


முதன்மை கல்வி அலுவலர்களுடன்
4 மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை!
 
 
பள்ளி கல்வி துறையின் நிர்வாக சிக்கல்கள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் நான்கு மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி துறை நிர்வாக பணிகள் , மாணவர் சேர்க்கை , பாடப்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ. க்களுடன் அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினர்.
 
வீடியோ கான்பரன்ஸ் முறையில் பகல் , 1:45 மணிக்கு துவங்கிய கூட் டம் , நான்கு மணி நேரம் நடந்தது . பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் , திட்ட அதிகாரி சுதன் , இயக்குநர்கள் கண்ணப்பன் , கருப்ப சாமி , உஷாராணி , ராமேஸ் வர முருகன் , பழனிசாமி மற்றும் இணை இயக்குநர்கள் , சென்னையில் உள்ள டி.பி.ஐ. , வளாகத் தில் , அமைச்சருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
 பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா , தலைமை செயலகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றார் . ' கொரோனா சூழலை கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு , ஆன்லைன் மற்றும் கல்வி , ' டிவி வழியே பாடங்களை நடத்துவதில் , முழு கவனம் செலுத்த வேண்டும்.

 அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என , அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார். நிர்வாக பணிகளை , எமிஸ் ' என்ற டிஜிட்டல் தளம் வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை , நிதித்துறையின் மேலாண்மை தளம் வழியே மேற்கொள்ள வேண்டும். இனி நேரடியான நிதி பரிவர்த்தனைகள் கூடாது. நிர்வாக பணிகளில் , எந்த சிக்கலும் இல்லாமல் , அரசின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் ' என , சி.இ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.

0 Response to " பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-ஆலோசனை.."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel