புதுவை பல்கலையில் செப்டம்பர் மாதம் நுழைவுத்தேர்வு – இலவச கல்வி!

Trending

Breaking News
Loading...

புதுவை பல்கலையில் செப்டம்பர் மாதம் நுழைவுத்தேர்வு – இலவச கல்வி!

புதுவை பல்கலையில் செப்டம்பர் மாதம் நுழைவுத்தேர்வு – இலவச கல்வி!

 


புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உயர்கல்வி வழங்கபடுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் (02.09.2021) (03.09.2021) (04.09.2021) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
புதுச்சேரி மத்திய பல்கலை:
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் முன்னுரிமை அளித்து வருகிறது. அரசின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பட்ட அளவு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களை போலும் வாழ அரசு ஊக்குவிக்கிறது. அவர்களை தனக்கென தனி ஒரு அடையாளத்தை பெற அரசின் திட்டங்கள் அவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.
 
கடந்த மாதம் தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பாக கொரோனா நிவாரண நிதிகள் வழங்கப்பட்டது. மேலும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளர்களும், அவரின் உதவியாளர்களும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக உயர்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் வரும் 19-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
 
இதற்கான நுழைவுத்தேர்வு வரும் வரும் செப்டம்பர் மாதம் (02.09.2021) (03.09.2021) (04.09.2021) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.pondiuni.edu.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 Response to "புதுவை பல்கலையில் செப்டம்பர் மாதம் நுழைவுத்தேர்வு – இலவச கல்வி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel