உணவில் முருங்கைக்காயைச் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள் !!

Trending

Breaking News
Loading...

உணவில் முருங்கைக்காயைச் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள் !!

உணவில் முருங்கைக்காயைச் சேர்த்துக்கொண்டால்  கிடைக்கும் பயன்கள் !!



வாயு கோளாறால் மிகவும் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொண்டால் வாயுக்கோளறு நீங்கும்.
 
முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவந்தால் நோய் விரைவில் குணமாகும்.
 
பித்தக்கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து  சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.
 
முருங்கைப் பூவை சுத்தம் செய்து, அதே அளவு பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்கு பலம்  ஏற்படும்.
 
முருங்கைக்காயின் சாற்றை எடுத்து, அதனை பாலில் கலந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு எலும்புகள் வலிமை பெறும். உடலில் இருக்கும் ரத்தத்தை  சுத்திகரிப்பதற்காக, முருங்கைக்காயை நாம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
 
இருமல், தொண்டை வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள், முருங்கைக்காயை சூப் செய்து பருகலாம். இவ்வாறு செய்தால்,  நல்ல தீர்வு கிடைக்கும்.
 
ஆண்களை விட கர்ப்பிணிப் பெண்கள் தான் அதிக அளவில் முருங்கைக்காயை சாப்பிட வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கு,  முருங்கைக்காய் நல்ல தீர்வை தரும்.

0 Response to "உணவில் முருங்கைக்காயைச் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள் !!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel