ஓ.பி.சி. சான்று வழங்குவதில் தாமதம் கூடாது - தமிழக அரசு அறிவுறுத்தல்

Trending

Breaking News
Loading...

ஓ.பி.சி. சான்று வழங்குவதில் தாமதம் கூடாது - தமிழக அரசு அறிவுறுத்தல்

ஓ.பி.சி. சான்று வழங்குவதில் தாமதம் கூடாது - தமிழக அரசு அறிவுறுத்தல்


ஓ.பி.சி. சான்று வழங்கும்போது ஊதியம்
, வேளாண் வருமானம் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
அரசுப்பணி மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சாதி சான்றிதழை வழங்கும் போது அவர்களின் ஊதியம், வேளாண் வருமானம் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஆவதாக தெரிய வந்துள்ளது என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஆண்டு வருமானம் 8 லட்சமாக இருந்தாலும், ஓ.பி.சி. பிரிவினருக்கான சாதி சான்றிதழை தடையின்றி வழங்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Response to "ஓ.பி.சி. சான்று வழங்குவதில் தாமதம் கூடாது - தமிழக அரசு அறிவுறுத்தல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel