கூட்டுறவு சங்க குறைபாடா? மொபைல் எண் வெளியீடு!

Trending

Breaking News
Loading...

கூட்டுறவு சங்க குறைபாடா? மொபைல் எண் வெளியீடு!

கூட்டுறவு சங்க குறைபாடா? மொபைல் எண் வெளியீடு!

 


சென்னை:கூட்டுறவு சங்கங்களின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் அளிக்க
, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மொபைல் போன் எண்ணை வெளியிட்டுள்ளார்.
 
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 4,449 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துவதுடன், பயிர்க்கடன், நகைக்கடன் போன்றவற்றை வழங்குகின்றன. விவசாயிகளுக்கு, உரம், விதைகள், பூச்சி கொல்லி மருந்தையும் வழங்குகின்றன.கூட்டுறவு பண்டக சாலைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடை, பெட்ரோல் பங்க் போன்ற வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
 
மேலும், மாநில தலைமை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்படுகின்றன. கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க தாமதம், கூட்டுறவு அங்காடிகளில் விற்கப்படும் பொருட்கள் தரமற்று இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில், கூட்டுறவு சங்கங்களின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்க, 98840 00845 என்ற மொபைல் போன் எண் வெளியிடப்பட்டுள்ளது.
 
கூட்டுறவு சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனையும் வழங்கலாம். அந்த எண்ணிற்கு புகைப்படம், காணொலி, செய்திகளை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக மட்டுமேதெரிவிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "கூட்டுறவு சங்க குறைபாடா? மொபைல் எண் வெளியீடு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel